Link copied!
Sign in / Sign up
4
Shares

கணவர் மனைவியிடம் எதிர்பார்க்கும் 7 விஷயங்கள்

பொதுவாகவே ஆண்களுக்கு அழகான பெண்கள் என்றாலே பிடிக்கும். அவர்கள் அழகில் ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள் என்பது பெண்களின் கருத்து. பெரும்பாலும் ஆண்களை ஈர்ப்பது அவர்களது குணம் தானே தவிர அழகல்ல என்பதை  பெரும்பாலான பெண்கள் உணர்வதில்லை. 

ஆண்களுக்கு அழகான பெண்களை பார்ப்பதற்கு பிடிக்கும். ஆனால், திருமணம் வாழ்கை என்று வரும் போது அவர்களின் எதிர்பார்ப்பில் அழகிற்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது வாழ்கை துணையை தான். உலக அழகியை அல்ல. இங்கு கணவர்கள் மனைவியிடம் எதிர்பார்க்கும் 7 விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

 1 புரிதல்

கணவன் மனைவி உறவு என்பது தாம்பத்திய வாழ்வில் மட்டும் இணைவதாக அல்ல. ஒருவருடன் ஒருவர் மனதால் இணைந்து, ஈருடல் ஒரு உயிர் என்பதை போல் இருக்க வேண்டும். அவர்களது மனதை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

2 ஆறுதல்

கணவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை புரிந்து கொண்டு அவர்களை மன்னிக்க வேண்டும். அவர்கள் பாதை மாறி செல்லும் தருணங்களில் அவர்களை சீர்படுத்த வேண்டும். அவர்களது கவலைகளுக்கு மருந்தாக வேண்டும். அவர்களது புன்னகைக்கு காரணாமாக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு ஏற்ற சிறந்த துணை நீங்கள் என்பதை புரிய வைக்க வேண்டும்.

3 பணம்

கணவர்களிடம் பணம் வேண்டும் என்று அவர்களை அதன் பின் ஓட செய்யக் கூடாது. பணமே பலம் என்று கணவர்கள் இருந்தாலும், பணத்தை விட காதலிற்கும், அன்பிற்கும் பலம் அதிகம் என்பதை நீங்கள் உணர்த்த வேண்டும்.

4 கேட்பது

மனைவிகள் கணவரின் பேச்சை கேட்பதே இல்லை என்பது கணவர்களின் குற்றசாட்டு. மனைவிகள் கணவர்கள் சொல்வதை செய்யும் அடிமைகள் அல்ல என்பது தற்போதைய பெண்களின் கருத்து. ஆனால், கணவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

5 அமைதி

பெரும்பாலும் ஆண்கள் கோபமாக இருக்கிறார்கள் என்றால் , பெண்கள் அமைதியாக இல்லாமல் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். கணவர் கோபமாக இருக்கும் தருணத்தில் அவர்கள் உங்கள் கருத்துக்களை ஏற்று கொள்ளமாட்டார்கள். இதனால் வீண் விவாதங்கள் ஏற்படும். அந்த சமயத்தில் கோபம் குறையும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்பதே கணவர்களின் எதிர்பார்ப்பு.

6 சண்டை

சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்க்கை வெறுமையை ஏற்படுத்தும். மனைவிகள் கணவர்களுடன் சண்டையிட வேண்டும். ஆனால், விரைவில் சமாதானத்திற்கு வந்து விட வேண்டும். செல்ல சண்டைகள் வேண்டும் என்பதே கணவர்களின் எதிர்பார்ப்பு.

மனைவிகளே கணவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து செயல்படுங்கள். உங்கள் கணவர்களின் மனதை வெற்றி பெற்று சிறந்த மனைவியாக விளங்கிடுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon