Link copied!
Sign in / Sign up
4
Shares

கணவர் மனைவியை வெறுப்பதற்கான 5 காரணங்கள்

திருமண பந்தம் என்பது உலகில் உள்ள மிகவும் புனிதமான மற்றும் உறுதியான பந்தமாகும். ஒரு கணவன் மனைவி இடையேயான உறவு என்னவென்றால் உலகத்தோடு இணைந்து, செயல்பட்டு, வேலைசெய்வது. வெளிப்படையாக, நீங்கள் உங்கள் வாழ்வை இன்னொருவரோடு பகிர்ந்து கொள்ளும்போது, நீங்கள் சில உயர்வுகளையும், தாழ்வுகளையும் பெறுவீர்கள். ஆனால் உங்கள் துணையிடம் நீங்கள் விரும்பாத குணங்களும் இருக்கத் தான் செய்யும். உங்கள் கணவர் உங்களிடம் வெறுக்கும் குணம் எது என்பதை அறிவது சற்று கடினம்தான். இந்த கட்டுரையில் உங்கள் கணவர் என்ன காரணத்திற்காகவெல்லாம் உங்களை வெறுக்கக்கூடும் என்பதை பற்றி பார்க்கலாம்.

1 உங்கள் மீது நீங்களே நம்பிக்கை இழக்கும்போது

உங்கள் கணவர் உங்களுடன் இல்லை, ஏனென்றால் அவர் நீங்கள் சரியானவர் என்று நினைக்கிறார். அவர் உங்களுடன் இருக்கிறார், ஏனென்றால் உங்களிடம் உள்ள திறமையை அவர் அறிவார். நீங்கள் உங்கள் பாதுகாப்பின்மையில் கவனம் செலுத்தும்போது, அவர் உங்கள் பலம் மீது கவனம் செலுத்துகிறார். நீங்கள் எவ்வளவு பெரியவர் என்பதை அவர் அறிந்திருக்கிறார், உங்களை மீது நீங்களே நம்பிக்கையை இழக்கிறீர்கள் என்று அறியும்போது, அது அவர் இருதயத்தை உடைக்கிறது. உங்களிடம் அவருக்கு அதிக நம்பிக்கை இருக்கும்போது நீங்களே எப்படி உங்கள் மீதான நம்பிக்கையை இழக்கலாம்?

2 நீங்கள் அழும்போது

உங்கள் அழுகையை தவிர வேறு எதுவும் அவரை காயப்படுத்த முடியாது. அவர் தூங்குவதாக நினைத்து நீங்கள் குளியலறையில் அழுவது, நீங்கள் சோகத்தில் குறைவாக சாப்பிடுவது என அனைத்தையும் அவர் அறிவார். ஆனால் நீங்கள் அழுவதற்கான காரணத்தை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, உங்கள் சுமைகளை சுலபமாக்க உதவுவதற்கு அவர் என்ன செய்ய முடியும் என்பதை அவருக்குத் தெரியப்படுத்தவும். அவர் நிச்சயமாக உங்களுக்கு உதவவும் சகஜ நிலைக்கு திரும்பவும் உதவுவார்.

3 உடலுறவை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும்போது

உடலுறவு என்பது நெருக்கம் மற்றும் அன்பின் வெளிப்பாடாகும். இது உங்கள் ஆத்மாவின் நெருக்கத்தை உடல்ரீதியாக அதிகரிக்கும். இதனை அவரை தண்டிப்பதற்காக தவிர்க்கவோ அல்லது லஞ்சம் தருவது போன்றோ பயன்படுத்தாதீர்கள். நீங்கள் உடலுறவை ஆயுதமாக பயன்படுத்துவது உங்கள் கணவருக்கு தெரியவில்லை என்று நினைக்கலாம். ஆனால், அவர் அதை நன்கு அறிந்தாலும் உங்களை காயப்படுத்த கூடாது என்பதற்காக அமைதி காப்பார்.

4 நீங்கள் அவரை விட்டு தள்ளி போகும்போது

நீங்கள் உங்களின் அம்மா வீட்டிற்கோ அல்லது அலுவலகரீதியாக அவரை விட்டு பிரிந்து செல்லும்போது, அவர் நீங்கள் இல்லாமல் மிகவும் தவிப்பார். அவர் அதை வெளியே சொல்லமாட்டார். ஆனால், அதுதான் உண்மை. நீங்கள் வெளியே சென்றிருக்கும்போது. அவர் உங்களை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார். அவர் எதிர்பார்ப்பது உங்களின் வருகையை மட்டும்தான்.

5 அவருக்காக உங்களை மாற்றிக்கொள்ளும்போது

அவர் உங்களை திருமணம் செய்ததன் ஒரே காரணம் உங்களுடைய தனித்துவம், மேன்மை ஆகியவற்றை நேசித்தது மட்டும்தான். உங்களின் தனித்துவத்தை யாருக்காகவும் மாற்றிக்கொள்வதை அவர் விரும்பமாட்டார் முக்கியமாக அவருக்காக. உங்களை மாற்றிக்கொள்ள நீங்கள் ஆரம்பித்தால் நீங்கள் அவர் நேசித்த பெண்ணாக இருக்கமாட்டிர்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon