Link copied!
Sign in / Sign up
4
Shares

கணவர் குழந்தையை நாள் முழுதும் பார்த்துக்கொண்டால்..?

ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது சாதாரண காரியமல்ல; பெற்று எடுப்பதை விடுங்கள், குழந்தை உருவாவதே இன்றைய காலங்களில் குதிரைக்கொம்பாக மாறி வருகிறது. எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கு இடையில் கருவறையில் உங்கள் குழந்தை உருவாகி, அது படிப்படியாய் வளர்ந்து, குழந்தை வளர்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீங்கள் தாங்கி, உங்கள் அன்புச்செல்வத்தை பெற்று எடுத்திருப்பீர். 

நீங்கள் கர்ப்பமாகவும், உங்கள் குழந்தை நன்றாக வளரவும் என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை உங்கள் கணவர் பார்த்து பார்த்து செய்து வந்திருப்பார். என்னதான் நீங்கள் 10 மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமந்து பாடுபட்டிருந்தாலும் உங்கள் கணவர் உதவியின்றி உங்களால் குழந்தையை வெற்றிகரமாக பெற்று எடுக்க இயன்றிருக்காது; மேலும் குழந்தை வளர்ப்பிலும் உங்கள் கணவரின் துணை கட்டாயம் அவசியம். 

அப்படி உங்கள் கணவர் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுகையில், கணவர் குழந்தையை நாள் முழுதும் பார்த்துக்கொண்டால், குழந்தைக்கும் உங்கள் கணவருக்கும் இடையே என்னென்ன நிகழ்வுகள் மற்றும் உணர்வுகள் ஏற்படும் என்பதை இப்பதிப்பின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்..!

குழந்தை அளிக்கும் அன்பு உதையை ஆசையாய் ஏற்பார், அப்பா..!
குழந்தையுடன் ஆசையாய் விளையாடுகையில்..!!
குழந்தையோடு கொள்ளும் உறக்கத்திற்கு இணையேதும் உண்டோ??
குழந்தையுடன் ஒரு குளியல்..!
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று..!!
நாம் அறிந்த அனைத்தும் நம் தந்தை தாயிடம் கற்றுக்கொண்டதே!
குழந்தையுடன் ஒரு அழகிய உரையாடல்..!
குழந்தையுடனான அருமையான தருணங்கள்..!

தாயின் பாசத்திற்கு நிகராக, யாராலும் பாசம் காட்டி பார்த்துக்கொள்ள இயலாது; ஆயினும் தந்தையின் அன்பும் பாசமும் தாயின் அன்பிற்கு சளைத்ததல்ல..! தாய் மற்றும் தந்தை இருவரின் பாசமும் எல்லையற்றது..! பாதுகாப்போம் பெற்றோரை..! பாசம் காட்டுவோம் நம்மை பாசம் காட்டி வளர்த்த தெய்வங்களிடம்..!!! கற்றுக்கொடுப்போம் இந்நற்பண்பினை, நம் பிள்ளைகளுக்கு...!!!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon