Link copied!
Sign in / Sign up
3
Shares

கணவனை கண்கவர் பரிசால் கவர்வது எப்படி?

எந்த ஒரு உறவையும் இனிமையாக்குவது எதுவென உங்களுக்கு தெரியுமா? அதுதான் காதல் பரிசு. கணவன் மனைவியாக இருந்தாலும் சரி... குழந்தை தாயாக இருந்தாலும் சரி. இந்த உலகத்திலுள்ள எல்லா சொந்தங்களுக்கும் உரியது இந்த பரிசு உரிமை. அதுவும் நம் மனம் கவர்ந்த ஒருவரின் பிறந்த நாள், திருமண நாள் என்பதை மறந்துவிட்டால் வீடு ரெண்டாவதோடு மனமும் சில சமயங்களில் உடைந்துவிடுகிறது. 

கல்லூரி அனுபவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பிறந்தநாள் அன்று மிகவும் வேண்டிய நபர்கள் நமக்காக ஆசையுடன் ஒரு கிப்டை தருவார்கள். நாமும் அதை மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் பிரித்தால், அதில் உள்ள பொருளை கண்டு முதலில் நாம் சிரிக்கும் அளவிற்கு ஒரு கிப்ட் இருக்கும். உதாரணத்துக்கு, பண், பிளேடு, கத்தரிக்கோல், ஊசி போன வடை, ஹால்டல் சாப்பாடு இப்படி பலவைத்து புதுவித அனுபவத்தை நம் மனதில் அவர்கள் ஏற்படுத்துவார்கள்.

இதேபோல் கல்யாணம் முடிந்தும் மனைவியிடம் ஆண்கள் செய்யலாம். இனிமையான அனுபவத்தை தரும். ஆனால், கண்டிப்பாக ஒரு பெரிய பரிசை பின்னால் வாங்கி வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், மனைவியின் கோபத்திற்கு நீங்கள் தான் பிறந்த நாள் ட்ரீட். உங்களை அடுப்பில் வைக்காமலே வேகவைத்து பிரியாணி போட்டுவிடுவார் அவர். ஆனால், பெண்கள் எப்போதுமே தனக்கு பிடித்த ஒருவரை அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். 

பெண்கள் தான் எப்போதும் அதிகம் பாசத்தை வெளிப்படுத்தும் ஒருவரும் கூட... கணவனே கண் கண்ட தெய்வம் என்பார்கள். ஆனால், மனைவியின் மனம் மணவாளனின் மாசற்ற மனதில் குடிப்புக விரும்பும் என்பதை சொல்ல மறந்துவிட்டது இவ்வுலகம். பெண்கள் கண்ணாடியினும் உயர்ந்தவர்கள். ஆண்கள் பாசம் காட்டினால், அதை விட ஒரு மடங்கு அதிகமாக பாசம் காட்டுபவர்கள் பெண்கள்.

அப்பேற்பட்ட பெண்கள் தன் கணவனுக்கு தரும் பத்து பொருட்களை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

ஷேவிங்க் செட்:

இது என்ன அவ்வளவு பெரிய பரிசா? ஆமாங்க, உங்கள் கணவருக்கு தாடி இருந்தால் வாரத்தில் இருமுறையாவது ஷேவிங்க் செய்வார். அப்படி இருக்க, அவருடன் நீங்கள் சண்டை போட்டாலும் அவர் பற்றிய நினைவு இந்த இரு நாட்கள் கண்டிப்பாக வந்து செல்லும். "என்னுடன் சண்டை போட்டாயே... நான் வாங்கி தந்த பிளேடு உன் முகத்தில் கீறிவிட்டது பார்த்தியா...?" என டைமிங்க் காமெடி கூட பண்ணலாம் நீங்கள். அவர் கீறிக்கொண்டால் மட்டும்... உங்கள் கணவரின் கழுத்து மட்டும் பத்திரம்.

கையில் எடுத்துசெல்லும் ஸ்பீக்கர்:

உங்கள் கணவர் வேலை விஷயமாக வெளியூர் செல்பவரா? அப்படி என்றால், கையில் எடுத்து செல்லும் அளவில் இருக்கும் ஸ்பீக்கரை பரிசளித்திடலாம். அத்துடன் ஹெட்போன் கூட பரிசாய் கொடுத்திடலாம். இதனால், ஸ்பீக்கரில் அலறும் பாடல் அவருக்கு கேட்குதோ இல்லையோ... கண்டிப்பாக உங்கள் காதல், அவர் காதில் விழ விரைவில் வந்து கட்டி அணைக்கலாம்.

ஓட்காவுடன் ஒரு நாள்:

இது மிகவும் முக்கியமான கிப்டுங்க. உங்கள் கணவர் குடிப்பழக்கம் கொண்டவர் என்றால் அவருக்கு அளவான மது பாட்டிலை நீங்களே பரிசளிக்கலாம். அத்துடன், அவருக்கு கம்பெனி கொடுக்க நீங்களும் ஆல்கஹால் அற்ற குளிர்பானத்தை அவருடன் குடித்து மகிழ்ந்திடலாம். இதனால், அவருக்கு போதை ஏறுதோ இல்லையோ... கண்டிப்பாக புரிதல் உண்டாகும். உங்கள் மேல்...

போட்டோ ஆல்பம்:

உங்கள் கணவரிடமிருந்து எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? உதாரணத்துக்கு, அவர் அடிக்கடி நகம் கடிப்பவர் என்றாலோ... கோபம் கொண்டாலோ என அவரிடம் இருக்கும் வித்தியாசமான செய்கைகளை புரியவைப்பதற்கு அவற்றை எல்லாம் போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். "இந்த பரிசை இன்றோடு நீங்கள் மறக்க வேண்டும்..." என அழகாக வார்த்தையை உச்சரித்து அவரிடம் கொடுக்க, சிலர் சிரிப்பார்... சிலர் அழுவார்... ஆனால், அந்த பழக்கத்தை விட அதிகம் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் போடும் நங்கூரம் நச்சென பொருந்தினால்...

கடிகாரம் எனும் காலசக்கரம்:

நேற்றைய பொழுதிலோ, இன்றைய பொழுதிலோ கால பயணம் என்பது சாத்தியமற்றது. நாளைய பொழுதில் சாத்தியமாக வேண்டுமா? வாங்கி தாருங்கள் அழகிய வாட்சை... அட ஆமாங்க, கணவனின் காலச்சக்கரம் மனைவிகளாகிய நீங்கள் தான். ஒரு பத்து நிமிஷம் லேட்டா  உங்க ஹஸ்பண்ட் வந்தா பதறிப்போற மனைவிகளெல்லாம் நிறையாவே இருக்காங்க. அதனால, அவங்க கையிலயே நீங்க கடிகாரமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.

 
கண்களை கவரும் காலணி:

உனக்கு நான்...எனக்கு நீ என வாழ இன்ப துன்பத்தை இடைவிடாது பகிர்ந்துக்கொள்வதுதான் அதன் அர்த்தம். இன்பத்தை யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் இன்ப துன்பத்தை நம் மனம் புரிந்த ஒருவரிடம் மட்டுமே நம்மால் சொல்ல இயலும். அது பிறந்த வீட்டில் தாயிடமும், புகுந்த வீட்டில் கணவரிடமும் கிடைக்கிறது. அப்படி இருக்க, அவருக்கு அழகிய காலணியை பரிசாய் தந்திடலாம். ஷூல என்ன ஸ்பெஷல்னு கேட்குறீங்களா? அது கம்பளியால் ஆன காலணி என்றால் கண்டிப்பாக ஸ்பெஷல் தானே...

மனதை வைக்க மணிபர்ஸ்:

உங்கள் கணவர் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்கிறாரா? அப்படி என்றால், அவருக்கு ஒரு மணிபர்ஸ் வாங்கி கொடுங்களேன். அப்படியும் அவர் செலவு செய்தால், பரிசை கொடுக்கும்போது பணத்தையும் சேர்த்து வைத்து கொடுத்திடுங்கள். குறிப்பாக உங்கள் இருவர் பேரும் அந்த பணத்தில் இருப்பது அவசியம். அத்துடன் சேமிப்பு பற்றிய புரிதலுணர்வு பற்றிய திருவாசகத்தையும் அந்த பணத்தில் எழுதி அவரிடம் காட்டுங்கள். ஒருவேளை, அவர் செலவையும் குறைக்கலாம். வைத்த அன்பையும் பெருக்கலாம்... வரப்போகும் நாட்களில்...

பர்போ எனும் நாய்களுக்கான கேமரா:

இந்த கேமரா நாய்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதன் மூலமாக எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் வளர்க்கும் நாயை பார்த்திடலாம். உங்கள் கணவர் செல்ல பிராணி மீது பிரியம் கொண்டவர் எனில் இதை வாங்கி அவருக்கு கொடுத்திடலாம். மேலும் இந்த கேமராவில், நாய் குரைக்கும் சத்தத்திற்கான எச்சரிக்கை, இரவு நேர கண்காணிப்பு என பல சிறப்பம்சங்கள் இருக்கிறது.

பாடல் கேட்கும் கருவி:

பாடல் கேட்க பல வழிகள் உண்டு. அதில் ஒன்று தான் பெல்ட்-டிரைவ் ஸ்டீரியோடர்ன் டேபிள். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், பழைய காலத்தில் பாடல் கேட்க பயன்படுத்திய ஒரு இரகம். அதாவது ஒரு குச்சி நீட்டிக்கொண்டு இருக்கும். அதை ஒரு தட்டின் மேல் வைத்தவுடன் பாடல் கேட்கும். இன்று அதுவே லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறது. உங்கள் மனம் கவர்ந்த நபருக்கு இதனை கூட நீங்கள் வாங்கி தரலாம்.

உடற்பயிற்சி செய்ய:

உங்கள் கணவர் எப்போதும் கண்ணாடியை பார்த்துக்கொண்டு நிற்கிறாரா? அப்படி என்றால், சூர்யாவை போல் சிக்ஸ் பேக் வைக்க ஆசைப்படுகிறார் என அர்த்தமாகும். அத்துடன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக கண்ணாடியின் முன்னே அதிக நேரத்தை செலவிட கூடும். அப்படி என்றால், அவருக்கு உடற்பயிற்சி செய்யும் பொருட்களை வாங்கி தந்து அவர் ஆசையை நீங்கள் புரிந்துக்கொண்டதை தெரிவிக்கலாம்.

இப்படி பரிசுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஆனால், பரிசென்பதை ஒருவர் மனதை புரிந்துக்கொண்டு அளிப்பது ஆக சிறந்த உணர்வை தருவதோடு, புரிதல் உணர்வையும் இருவருக்குள்ளும் உண்டாக்கும். பரிசு எப்போது வேண்டுமானாலும் உடைந்து போகலாம். ஆனால், உள்ளத்தால் அளிக்கப்படும் ஒரு பரிசு, உடைந்தாலும் மனதில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பரிசை தேர்ந்தெடுங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon