Link copied!
Sign in / Sign up
5
Shares

காலையில் எழுந்தவுடன்‬, ‎சாப்பிடக்கூடாத உணவுகள்..!‬

காலையில் எழுந்தவுடன்‬ ‪ ‎சாப்பிடக்கூடாத உணவுகளைப் பற்றி இப்பதிப்பில் காணலாம்..!!

காபி‬

காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள காஃபின் தீவிரமான பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின், காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்வது நல்லது.

‪‎டீ

காபியைப் போலவே டீயிலும், காஃபின் உள்ளதால், இதனையும் வெறும் வயிற்றில்தவிர்ப்பது நல்லது. டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், குடித்த பின், இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.‪

தயிர்‬

தயிரில் என்ன தான், நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது அல்ல. தயிரில் உள்ள பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

‪‎வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே, வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

 

‪தக்காளி‬

தக்காளியைஎப்பொழுதுமே வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதற்கு அதில் உள்ள அமிலம் தான் முக்கிய காரணம். இந்த அமிலமானது இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து ,வயிற்றில் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, கற்களைக் கூட உருவாக்கும்.

‪‎சோடா‬

சோடாவில் கார்பனேட்டட் அமிலம் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள அமிலங்களுடன் கலந்து, குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

‪‎மாத்திரைகள்‬

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

‪‎ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, உடல் மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

‪‎காரமான_உணவுகள்‬

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. காரமான உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

‎சர்க்கரைவள்ளிக்_கிழங்கு‬

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்

காலையில் எழுந்தவுடன் மேற்கண்ட உணவுககளை தவிர்த்து,தண்ணீர்‬ அல்லது ‎நீராகாரம்‬, ‪‎சோத்துக்கற்றாழை_கூழ்‬ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பருகி, ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுங்கள்..!

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon