Link copied!
Sign in / Sign up
0
Shares

கால் முட்டியில் உள்ள கருமையை நீக்குவதற்கான வழிகள்

உடலின் அழகை என்னதான் நீங்கள் பேணிக்காதலும், கால்களை மறந்துவிடுகிறோம். மற்ற பாகங்களை விட கால்களின் முட்டிகளில் கருமை நிறம் ஏற்படுகிறது. நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த செல்கள் அழுக்குகள் தேங்கி சொரசொரப்பாகவும் கருப்பாகவும் மாற்றுகின்றன. அவ்வாறான கருப்படைந்த முட்டிகளை சாதாரண நிறத்திற்கு கொண்டுவருவது எளிதல்ல. ஆனால் வாரம் ஒருமுறை இவற்றை தொடந்து செய்து வந்தால் மாற்றத்தை காணலாம்.

தேவையான பொருட்கள் :

சமையல் சோடா – 1 தேக்கரண்டி

தேன் – 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – அரை மூடி

ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி

மஞ்சள் - 1 தேக்கரண்டி

கற்றாழை - சிறிதளவு

1 முதலில் சமையல் சோடாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இது முட்டியிலுள்ள சொரசொரப்பை போக்க உதவும்.

2 பின் அதனுடன் மஞ்சளை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கி கொள்ளுங்கள். மஞ்சள் கிருமிநாசினியாகவும், நிறத்தை மாற்றவும் பயன்படுகிறது.

3 சமையல் சோடவும் தேனை கலந்து நன்றாக கலக்குங்கள். இது முட்டிக்கு ஊட்டம் அளிக்கும். மிருதுத்தன்மை தரும்.

4 அவற்றுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக பேஸ்ட் போல் ஆனவுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலக்குங்கள்.

5 பின்னர் முட்டியில் இந்த கலவையை தேய்த்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பின் கழுவுங்கள்.

6 இதன் பின்னர் கற்றாழையின் ஜெல்லை முட்டியில் தடவி காயவிடவும். இவ்வாறு செய்தால் முட்டியின் நிறம் விரைவில் மாறி பளிச்சிடும். வாரம் ஒருமுறை இதை செய்து பாருங்கள் நிச்சயம் பலன் தரும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon