Link copied!
Sign in / Sign up
11
Shares

காய்களின் தோலை நீக்குவதால் சத்துக்கள் குறையுமா?

நாம் உண்ணும் உணவில் காய்கறிகள் அதிகம் நிரம்பியுள்ளன. அவை நாம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆற்றலையும் அளிக்கின்றன. அப்படி நாம் சமைத்து உண்ணும் காய்கறிகளின் சத்துக்களை நாம் முழுமையாக பெறுகிறோமா? என்று கேட்டால், ஒரு சில காய்களில் நாம் அவற்றை இழக்கிறோம் என்றே ஆணித்தரமாக கூற முடியும். அப்படி என்ன காய்களில் நாங்கள் சத்துக்களை இழக்கிறோம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவை என்ன காய்கறிகள்? அதில் என்னென்ன சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

1 உருளை கிழங்கு

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் உண்ணப்படுவது. அப்படி நாம் விரும்பி உண்ணும் இதில் நாம் பெரும்பாலும் தோலை நீக்கி விடுகிறோம். இதன் தோலில் நார்ச்சத்து, விட்டமின்கள், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. எனவே உருளைக் கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. 

2 கேரட்

கேரட் பெரும்பாலும் எல்லா வயதினராலும் பச்சையாகவே விரும்பி உண்ண கூடிய ஒன்று. இதை உண்ணும் போதோ அல்லது சமைக்கும் போதோ அதிகப்படியானோர், இதன் தோலின் நன்மையை அறியாமலே தோல்களை நீக்கி விடுகின்றனர். கேரட் தோலில் பீட்டா கரோட்டீன், பீனோலிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே கேரட்டை தோலுடன் சாப்பிடுவதால், இதய நோய், புற்றுநோய், பார்வை கோளாறு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

3 கத்தரிக்காய்

 
 

இதில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஊதா நிறமுள்ள கத்திரிக்காயின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளது. எனவே இந்த கத்திரிக்காயை தோலுடன் சாப்பிடுவதால், நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

4 வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் தோலில் குறைவான கலோரி, பீட்டா-கரோட்டின், வைட்டமின் எ, வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளது. எனவே இதை தோலுடன் சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

5 பீட்ரூட்

இது இனிப்பு சுவை உடையதால் குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் ஒன்று. பீட்ரூட்டின் தோலில் பீட்டாலெயின் எனும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளதால், பீட்ரூட்டின் தோல் நீக்காமல், சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம்.

எல்லா காய்களையும் நன்கு சுத்தமான நீரில் கழுவிவிட்டு சமைக்கலாம். ஆனால் காய்கறிகளை நறுக்கிவிட்டு கழுவுவதால் அதிகப்படியான சத்துக்கள் வீணாகும். நல்லதை சமைத்து, சத்துக்களை வீணாக்காமல் அனைத்தையும் பெற்று, நலமுடன் வாழ்வோமாக!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon