Link copied!
Sign in / Sign up
6
Shares

காதலர் தினத்தன்று நீங்கள் கொடுக்க வேண்டிய 10 வாக்குறுதிகள்!

இந்த காதலர் தினத்தன்று ஒரு பெற்றோராகவும் ஒரு வாழ்க்கைத்துணையாகவும் நீங்கள் செய்ய வேண்டிய 10 வாக்குறுதிகள்!

காதலர் தினம் நெருங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த அற்புதமான நாளை குறித்து நீங்கள் இருவரும் திட்டமிட வேண்டிய நேரமிது. ஒரு பெற்றோராகவும் ஒரு வாழ்க்கைத்துணையாகவும் உங்களின் பிணைப்பை பலப்படுத்த இதை விட சிறந்த தருணம் ஏதேனும் வேண்டுமா என்ன? உங்களின் உறவு முன்பு இருப்பதை விட பலமாக ஆவதற்கு, இந்த நாளில் சில உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்வது நல்லது.

வருடங்கள் செல்ல செல்ல ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் உங்கள் இருவருக்கும் இருக்காது என்பதே நிதர்சனம். எனவே, எத்தனை வருடங்கள் ஆனாலும் வாழ்க்கையில் உள்ள உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்வேன் என உங்கள் துணையிடம் சத்தியம் செய்யுங்கள்.

1) உன் அழைப்புகளை ஒரு போதும் அலட்சியப்படுத்த மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்:

இது மிக பெரிய விஷயம் என்றாலும், புதிதாக பெற்றோரானவர்கள் இதை செய்தாக வேண்டும். குழந்தைக்கு அவசர தேவை வரும் போது, இது போன்று தொலைபேசி அழைப்புகளை அலட்சியப்படுத்துவது சரியல்ல. எனவே, ஒரு போதும் வீட்டு அழைப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அதே சமயம், அவ்வப்போது, உங்கள் துணையிடம் உங்களது அன்பை தொலைபேசி மூலம் வெளிப்படுத்துங்கள். நீங்கள் மற்றவர் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது இது தெரிவிக்கும்.

2) உன் சுமையை நானும் பகிர்ந்துகொள்வேன்:

புதிதாக பெற்றோரானவர்கள் ஒரு குழுவாக இணைந்து குடும்ப பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை இருவரிடையே பகிர்ந்துகொண்டு செய்ய வேண்டும். ஒருவர் மட்டும் அனைத்து பொறுப்புகளையும் சுமப்பது சரியல்ல. வேலைகளை மட்டுமல்ல, உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களின் பிரச்சனைகளை உங்கள் துணையிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

3) உன் முழு திறனை வெளிக்கொணர முயற்சி செய்வேன்:

ஒரு பெற்றோராக, வாழ்க்கைத்துணையாக, மகனாக, மகளாக, ஊழியராக அல்லது முதலாளியாக உங்கள் துணையின் முழு திறனை வெளிக்கொணர உறுதுணையாக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் துணைக்கு ஊக்கமளியுங்கள். அது அவர்களை வெற்றி பாதையில் அழைத்துச்செல்லும்.

4) என்ன நடந்தாலும் உனக்கு நேரம் செலவிடுவேன்:

வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு, அலுவலக வேலை என வேலைகள் பல இருந்தாலும், உங்களுடன் சிறிது நேரம் செலவிட உங்கள் துணைக்கு அறிவுறுத்துங்கள். உங்கள் இருவருக்கென்ன சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் இருவரின் வேலை நேரங்களுக்கு தகுந்தவாறு நேரத்தை ஒதுக்கி, உங்களின் உறவை மேலும் வலுப்படுத்துங்கள்.

5) உன்னை தனியாக உணர வைக்க மாட்டேன்:

சில நேரங்களில் அதிகப்படியான வேலைப்பழு காரணமாக உங்கள் அன்புக்குரியவரை நீங்கள் அலட்சியப்படுத்த நேரலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், உங்கள் துணையுடன் நேரம் செலவிட வேண்டும். உங்கள் வாழ்க்கையின் பயணத்தில் அவர்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதை உணர்த்துங்கள். உங்கள் குடும்பத்தாருடன் தினமும் நேரம் செலவிட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

6) குழந்தையின் டயப்பரை நான் மாற்றுகிறேன்:

இந்த விஷயத்தில் பல ஆண்கள் பங்கேற்பதில்லை. என்னதான் இது கடினமான வேலையாக இருந்தாலும் புதிதாக பெற்றோரானவர்கள் இதை செய்தாக வேண்டும். எனவே, ஆண்களும் அவ்வப்போது இந்த டயப்பர் மாற்றும் வேலையை செய்ய வேண்டும்.

7) பழைய தவறுகளை மறந்துவிடுவோம்:

கடந்த காலத்தை எப்போதுமே கிளற வேண்டாம். உங்கள் துணை செய்த பழைய தவறுகளை சுட்டிக்காட்ட கூடாது. முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்.

8) உன்னை குறைவாக எடை போட மாட்டேன்; உன் மீது எனக்கு முழு நம்பிக்கையுள்ளது:

இது குறிப்பாக பெண்களுக்கான ஒன்று. பல பெண்கள் அவர்கள் கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க தயங்குவார்கள். அவர்கள் ஏதாவது தவறுதலாக செய்து விடுவார்களோ என்ற பயம் பெண்களுக்கு இருக்கும். ஆனால் இது முற்றிலும் தவறு. அவர் மீது நம்பிக்கை வையுங்கள். நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் இருவருமே பெற்றோர்கள் தான். ஒருத்தர் மட்டும் கடமையை செய்வது சரியன்று.

9) நீ கூறுவதை நிச்சயமாக கேட்பேன்:

இது மிகவும் முக்கியமான வாக்குறுதி. உங்கள் துணையை பேச அனுமதிக்காததால் தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் கோபம் மட்டுமே மிஞ்சும். எனவே, எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் துணை சொல்வதை கேட்பேன் என இரண்டு பேருமே வாக்குறுதி எடுத்துக்கொள்ளுங்கள். சண்டை போடுவதற்கு முன்பு, உங்கள் துணைக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்.

10) உனக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் அளிப்பேன்:

உங்கள் துணையை நேசிக்கவும், உங்கள் துணைக்கு மதிப்பளிப்பதும், உங்கள் துணைக்கு முக்கியத்துவம் அளிப்பதும் உங்கள் கடமை. இந்த வாழ்க்கை பயணத்தில், அவர் உங்களுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்துங்கள். காலம் முழுவதும் அவருடன் இருக்க உறுதியளியுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon