Link copied!
Sign in / Sign up
1
Shares

காதலர் தினத்துக்கான கண்கவர் இடங்கள்...

காதலர் தினம் என்பது பலவித பரிணாமங்களை கொண்டது. காதலிக்கும் ஒருவர் கலர்புல்லாக ஆடை அணிவதும் இந்த தினத்தில் தான். காதல் பிடிக்காதவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து தன் எதிர்ப்பை தெரிவிப்பதும் இதே தினத்தில் தான். காதல் இல்லாத மனம் இவ்வுலகில் ஏது. இந்த காதல் பிப்ரவரி 14 மட்டும் தான் மலர்கிறதா? கண்டிப்பாக இல்லை. அப்படி மலர்ந்தால் அது காதலும் இல்லை. காக்கை இரண்டும் மூக்கோடு மூக்கு உரச, இந்த ஒரு நாள் மட்டும் அதன்மீது  உன்னத பார்வையை நம் கண்கள் வீசும்.

இந்த காதல் என்பது திருமணத்துக்கு முன்பு தான் வரவேண்டுமா என்ன? திருமணத்திற்கு பின்பு வரும்போது ஒருவருக்கொருவர் புரிந்துக்கொள்ளும் பல சந்தர்ப்பங்கள் உருவாகுவது உண்மை தானே. சந்தர்ப்பம் மட்டும் உருவாகுவதால் நாள் அழகாகி விட போவதில்லை. அதற்கான இடமும் அமைய வேண்டியது மிக அவசியம். அப்படிப்பட்ட காதலர் தினத்துக்கான இடங்கள்., நம் தமிழ் நாட்டில் எங்கெல்லாம் இருக்கிறது? இதோ உங்களுக்காக...

உதகமண்டலம் (அ) ஊட்டி:

மலைகளின் இராணி என அழைக்கப்படும் ஊட்டி, உங்கள் விருப்பத்திற்கான ஒரு இடமும் கூட. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கான இரயில் பயணத்தில் பல கதைகளை நீங்கள் இருவரும் பேசி செல்ல, உனக்கு நான்... எனக்கு நீ... எனும் தோழமையையும் சேர்த்து தோழோடு சாய்த்துக்கொள்ளலாம். இந்த மலை பகுதி சொர்க்கமாக தெரிய, உங்கள் கணவன்/மனைவி அந்த சொர்க்கத்தின் இராஜா/இராணியாகவும் இடங்களை வலம் வரக்கூடும். இந்த உதகமண்டலத்தில் பார்ப்பதற்கு அப்படி என்ன தான் இருக்கிறது? இங்கே, தேயிலை தோட்டத்தின் பசுமை மாறா காட்சிகளும், ஏரிகளில் இருந்து விழும் நீரின் அழகின் முன்பும் உங்கள் இருவரது மனதானது தொலைந்திடக்கூடும். இதனால், உங்கள் இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிதலுணர்வும் ஏற்படுகிறது.

கொடைக்கானல்:

இந்த அழகிய இடத்தினால் காற்றுக்கும் உங்கள் மீது காதல் வரக்கூடும். மேலும், இந்த கொடைக்கானலில்  காணப்படும் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர வடிவம் கொண்ட கொடைக்கானல் ஏரி, தனிமையில் காணும் வெள்ளி நீர்வீழ்ச்சி என பலவற்றின் மேல் உங்கள் மனதானது விழக்கூடும். அத்துடன் பசுமையான புல்வெளிகளும், காடுகளும் இங்கே சூழ்ந்திருக்க, இந்த காடுகளில் பழத்தோட்டங்களும், யூகலிப்டஸ் மரங்களும் நிறையவே காணப்படுகிறது.

குன்னூர்:

தமிழ்நாட்டில் தேனிலவுக்காகவே புகழ்பெற்ற இவ்விடம், ஏன் மற்ற நாளிலும் உங்களால் அழகுபடுத்த மறைக்கப்படுகிறது என ஏங்குவதால், இவ்விடத்தின் ஏக்கத்தை போக்க காதலர் தினத்தன்று கணவன் மனைவியாக வந்து செல்லுங்களேன். இந்த அழகிய இடத்தில் டால்பின் நோஸ், காத்ரீன் நீர்வீழ்ச்சி, லா நீர்வீழ்ச்சி, மறைமுக பள்ளத்தாக்கு, பரந்த தேயிலை தோட்டமென பலவும் காணப்படுகிறது. இங்கே உங்கள் கணவன்/மனைவி மீது காதல் கொள்ள, இயற்கை அன்னை தன் கரம் ஏந்த இன்பத்தையும் பரிசாய் தருகிறாள்.

மேகமலை:

இது காதல் கொள்வதற்கான அழகிய ஒதுக்குப்புற இடமாகும். இந்த இடத்திற்கு வரும் நம் மனம், தேயிலை தோட்டத்தின் இடையே தொலைவதோடு, தேனி மாவட்டத்தின் அழகிய மலைப்பகுதி எனும் அந்தஸ்தை சேர்த்து கொண்டிருக்கிறது. இங்கே, தேயிலை மற்றும் ஏழைக்காய் தோட்டம் சூழ்ந்து காணப்பட, மேகத்துடன் சேர்ந்து நீங்கள் இருவரும் அன்ன நடை போடலாம். மேலும், பசுமையான வெள்ளிமலை, மிகவும் மனதை கொள்ளைகொள்ளும் இடமாக அமைகிறது. மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் எண்ணற்ற தாவரங்களும், விலங்குகளும் அழகான அதன் வாழ்க்கை முறையை நம் மனதிற்கு தெளிவுபடுத்துகிறது.

மெரினா கடற்கரை:

சென்னையின் சிறப்பான பகுதிகளுள் ஒன்று மெரினா. இங்கே வரும் நீங்கள் மட்டுமா காதலை வெளிப்படுத்துகிறீர். கடல் அலையும் தான் தினமும் உங்களை வந்து பார்த்து செல்ல ஏங்குகிறது. இந்த அழகிய கடற்கரை, கூட்டம் நிரம்ப காணப்படுவதோடு, குடைக்குள் பெய்யும் காதல் மழையில் நனைந்த வண்ணம் பலரும் தன் வாழ்வை இனிமையாக்குகின்றனர்.

கன்னியாக்குமரி:

கடல் அலைகள் ஒருபக்கம் அழகிய உணர்வை மனதில் தர, கதிரவன் எழும் மற்றும் விழும் காட்சிகளுக்கு புகழ்பெற்ற ஒரு இடமாகவும் இவ்விடம் விளங்குகிறது. கல்வியறிவில் தலை சிறந்த மாவட்டமான கன்னியாக்குமரி, காட்சிகளின் பிரதிபலிப்பாக வந்து செல்வோரை கவர, பிரமிப்புடன் பார்க்க வைக்கிறது திருவள்ளுவர் சிலை. வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாக்குமரி, காதல் கொண்டு தேன் நிலவை ரசிக்க ஓர் அழகிய இடமும் கூட.அழகிய காதலில் நீங்கள் விழ, ஆன்மீகத்தில் விழவும் அன்புடன் அழைக்கிறார், அருகில் இருக்கும் திருச்செந்தூர் முருக பெருமான்.

கோவளம் கடற்கரை:

சென்னைக்கு மிக அருகாமையில் காணப்படும் ஓர் இடம் தான் கோவளம் கடற்கரையாகும். இங்கே நீர் மற்றும் சாகச விளையாட்டுக்கள் சிறப்புடன் அமைந்திருக்க, நீங்களும் அதன் ஓர் அங்கமாக திகழ்ந்திடலாமே. அட ஆமாங்க, இந்த கடற்கரையில் பாராசைலிங்க், படகு பயணம், நீர் பனிச்சறுக்கு பயணம் என பலவும் புகழ்பெற்று விளங்குகிறது. இவ்விடத்தில் நீங்கள் இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு நடக்க, உங்கள் இருவரது மனமும் கண்களுக்கு தெரியாமலே அழகாய் கைகோர்த்து நடக்கவும் ஆசைப்படும்.

காதலர் தினம் என்பது காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் என்றாலும், திருமணமாகி காதலிப்பவர்களுக்கும், காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்களுக்குமென அனைவருக்குமே உரிய நாளும் கூட. உடல் இரண்டும்  எத்தனை நாட்கள் பேசினாலும், உள்ளம் இரண்டும் பேசுவதன் மூலம் வாழ்க்கைக்கான திட்டத்தை அழகுபட அமைக்க உதவும் நாள் தான் இந்த பிப்ரவரி 14 ஆம் நாள். எனவே, நீங்களும் எங்காவது வெளியில் செல்வதன் மூலம் ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு ஒற்றை முத்தத்தை கொடுத்து இயற்கை அன்னையின் மடியில் தூங்க, இன்பம் பொங்கும் வெண்ணிலா உங்கள் வாழ்விலும் வீசட்டுமே.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon