Link copied!
Sign in / Sign up
1
Shares

காதலனுக்கான காதலர் தின பரிசு...

முதலில் காதலர் தினம் எப்படி பிறந்தது என்பதை யாராவது அறிவீர்களா? ரோமானிய நாட்டின் அரசன் ஒருவன் எப்போதுமே விகாரமான சிந்தனையை கொண்டவன். காதல் என்பது காதலனுக்கும், காதலிக்கும் மலர்வதாலும்... கணவன் மனைவிக்கு இடையே காதல் பூத்து குலுங்குவதாலும் தன் வீரர்களாக அவர்கள் வர மறுத்ததை புரிந்துக்கொண்டான். தன் படையின் பலம் குறைவதற்கு முக்கிய காரணம் காதலே என அவன் நினைத்தான். அதனால் ரோமானிய மக்களுக்கு ஓர் ஆணை பிறப்பித்தான். இனிமேல் யாரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழக்கூடாது எனவும், மீறினால் இருட்டறையில் அடைக்கப்பட்டு, ஒரு நாள் அவர்கள் தலை, கல்லால் அடித்து துண்டிக்கப்படும் எனவும் எச்சரித்தான்.

இதனை தெரிந்துக்கொண்ட வாலண்டைன் எனும் பாதிரியார், அரசனின் கட்டளையை மீறி காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தான். இதனால் கோபம் கொண்ட அரசன், வாலண்டைனை இருட்டறையில் அடைத்து துன்புறுத்தினான். இருப்பினும், இதே சமயத்தில் சிறை காவல் பெண்ணுடன் வாலண்டைனுக்கு காதல் மலர்ந்தது. அவள், வாலண்டைனை தப்பிக்க வைக்க முயற்சிகள் செய்ய, அப்பெண்ணின் தந்தை அவளை வீட்டிலேயே சிறை வைத்தார். எனினும், காதல் அரும்பை கிள்ளி விடாது காத்த வாலண்டைன், அவள் வீட்டுக்கு முதல் செய்தி ஒன்றை தூது அனுப்பினான். இந்த கடிதம் சென்று சேர்ந்த வேளையில் வாலண்டைன் கல்லால் அடித்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த நாள் தான் 270ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாள். அந்நாளையே நாம் காதலர் தினமாக இன்றும் கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது.

இன்றும் இந்த காதலுக்கு எதிர்ப்புகள் ஒரு சில இடத்தில் இருந்துதான் வருகிறது. இது யார் தவறு? முதல் காதல் செய்தியை அனுப்பிய வாலண்டைன் செய்த தவறா? இல்லை, காதலனையும், காதலியையும் சேர்த்து வைக்க இரகசிய திருமணம் நடத்தி வைத்தாரே... அந்த தவறால் நேர்ந்த இன்றைய காதலர்கள் தவறா? எது? எப்படியோ? உண்மையான காதல், உயிர் கொடுத்தாவது ஜெயிக்கிறது என்பதை தினந்தினம் செய்தித்தாளில் பார்த்தாலும், பெற்றோர் மட்டும் நம் மீது காதல் கொள்ள மறுக்கிறார்களா என்ன? இல்லை, கண்டிப்பாக இல்லை. ஐந்து வருடம் ஒருவரை காதலித்து ஐந்தே நிமிடத்தில் அவர்களுடைய பெற்றோர்களின் சம்மதம் எதிர்ப்பார்ப்பது சரிதானா? இருபது வருடம் கொண்ட உறவை, இருபது நொடியில் நீங்கள் அறுத்தெறிவது சரிதானா? காதலிப்பது தவறல்ல. ஆனால், அந்த காதலை வீட்டில் சொல்ல தைரியமும், அவர்கள் முடியாது என சொன்னாலும் மென்மையான வழியில் காத்திருப்பதும் தான் அழகு. ஒருவன்/ஒருவள் காதலை சொல்லும்போதே அதன் கடைசி நிலையை மனதளவில் யோசித்து செயல்படுங்கள். காதல் காட்டும் வழியில் சென்று, கடைசி நிமிடத்தில் பெற்றோரை வில்லன் போல் பார்ப்பது யார் தவறு? பெற்றோர் சம்மதம் பொங்க, மணவறையில் மணவாளனின் கையை பிடிக்க முயலுங்கள். அதுதான் உங்கள் காதலின் உன்னத விருப்பம். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரை எடுத்த வேகத்தில் வார்த்தையால் திட்டாதீர்கள். அதற்கு பதிலாக முதல் காதலர்களான ஆதாம் - ஏவாள் சட்டை பிடித்து கேளுங்கள். ஆடையை இறைவன் அவர்களுக்கு பரிசளித்திருந்தால் மட்டும்...

இப்போது கணவனுக்கு மனைவி தர வேண்டிய காதலர் தின பரிசு எவை என்பதை நாம் பார்க்கலாம்.

சர்ப்ரைஸ் கிப்ட்:

கணவன், மனைவி ஒரே வீட்டில் இருந்தாலும் இந்த சர்ப்ரைஸ் கிப்ட் ஒர்க் அவுட் ஆகும் என்பதை காதலர் தினத்து இரவில் கண்கூட நீங்களும் காணக்கூடும். அது என்ன சர்ப்ரைஸ் கிப்ட்? ரொம்ப சிம்பிள். உங்கள் கணவனுக்கு பிடித்த ஏதோ ஒரு பொருளை, அவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு ஆர்டர் செய்யுங்கள். குறிப்பாக அந்த பொருள் வந்து சேர வேண்டிய தேதி பிப்ரவரி 14ஆக இருந்தால் அது இன்னும் அழகிய உணர்வை தரும். அதைவிட முக்கியம், உங்கள் கணவனுக்கு பிடித்த பொருளை., அவர் கைகளால் பிரித்திட, இதனால் இன்பமயமான காதல் உணர்வு இனிதே இருவருக்குள்ளும் தொடங்க, இடையே இருக்கும் இறுக்கத்தின் இடைவேளையும் குறையக்கூடும்.

சுற்றுலா செல்லுதல்:
காதலர் தினம் வார விடுமுறையில் வருமெனில், கணவன்-மனைவிக்கு கொண்டாட்டம் தான். ஆனால், இந்த முறை புதன்கிழமை வருகிறதே. தமிழில் ஒரு பழமொழி உண்டு. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். எனவே, வாய்ப்பு கிடைத்தால் புதன்கிழமை  உங்கள் கணவன் கைகளை இறுக பற்றிக்கொண்டு அருகில் உள்ள சுற்றுலா தளத்திற்கு செல்ல முயலுங்கள். இல்லையேல், காதலர் தினத்துக்கு முன்னர் வரும் வார விடுமுறையில் திட்டத்தை தீட்டுவது ஆக சிறந்த உணர்வாக அமையக்கூடும்.
மறக்க முடியாத பரிசு:

இந்த பிப்ரவரி 14ஆம் தேதி, உங்கள் கணவருக்கு மறக்க முடியாத பரிசை தந்து மகிழ்விக்கலாம். இதனால் புரிதல் உணர்வு பல மடங்கு பெருகும். ஆனால், நீங்கள் தரும் பரிசு என்பது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய ஆக சிறந்த பரிசாக இருத்தலும் வேண்டும்.

காதல் குறிப்புகள்:

உங்கள் கணவர் அன்றாட செய்யும் தினசரி செயல்களில் காதலை புகுத்துங்கள். ஓர் உதாரணத்துக்கு, அவர் எழுந்து கண்ணாடியை பார்க்கும்போது... அதில் காதல் உணர்வை தூண்டும் எழுத்துக்களை எழுதி சர்ப்ரைஸ் தரலாம். இது போல் சாப்பிடும் பிளேட், குடிக்கும் டீ கப், அணியும் அவர் ஷு, பார்க்கும் டிவி, கேட்கும் ரேடியோ, பயன்படுத்தும் மொபைல் என பலவற்றிலும் எளிதில் கிழிக்கக்கூடிய வகை பேப்பர் கொண்டு எழுதுவதால் இந்த நாள் இனிய நாளாக இருபத்து நான்கு மணி நேரமும் காட்சிகளால் கட்டி அணைக்க அவருக்கும் உத்தரவை பிறப்பிக்கும்.

உணவு பரிசு:

தோசையோ, இட்லியோ... எதுவாக இருந்தாலும், அவருக்கு பிடித்த உணவை தயார்செய்து வைத்து அவர் மனதை தவிடு பொடியாக்க முயல்வது இனிமையான உணர்வை உம் சமையலறையிலும் சேர்த்து தந்திடும். இதனால் தன் கையில் இருப்பது உப்பா? சர்க்கரையா? எனும் சந்தேகம் கூட அவருக்கு வரலாம். தோசை பிரியர் என்றால்... வகை வகையான தோசை கொடுத்து அவரை நீங்கள் அசத்தலாம். (ஏ.கா: தக்காளி தோசை, சோள தோசை, முட்டை தோசை, வெங்காய தோசை, ரவா தோசை, கோதுமை தோசை...) இப்படி பல வகை தோசை சமைத்து அவர் மனதை சந்தோஷப்படுத்த, நல்லதோர் புரிதலுணர்வும் இதனால் இருமனதிற்கு நடுவில் ஏற்படுகிறது.

பிடித்த விளையாட்டு:

உங்கள் கணவருக்கு பிடித்த விளையாட்டை அவருடன் சேர்ந்து விளையாடுவதால், பெரும்பாலான அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளவும் இந்த சூழல் ஏதுவாக உங்கள் இருவருக்கும் அமையக்கூடும். இதனால், கட்டிலில் விளையாட ஆசைப்படும் இரு மனம், அதன் பின்னர் தொட்டிலில் விளையாடும் உங்கள் குழந்தையுடன் சேர்ந்து விளையாடவும் விரைந்திடக்கூடும்.

நினைவு என்னும் உணவு ஊட்டல்:

காதலர் தினத்தன்று... பல வித அழகிய தருணங்களை அவருக்கு நீங்கள் நினைவுப்படுத்தலாம். ஓர் உதாரணத்துக்கு, உங்கள் திருமண தேதியில் தொடங்கி, முதல் இரவு, தலை தீபாவளி, பெண் அழைப்பு... இப்படி அனைத்து வித நாட்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அழகிய உணர்வை நீங்கள் அவருக்கு நினைவுப்படுத்தி இந்த நாளை இனிமையாக செலவிட, இதனால் வரும் நாட்களும் புள்ளி மான் போல் துள்ளி குதித்து சந்தோசம் நிரம்ப உங்களை தேடி வரக்கூடும்.

காதல் என்பது... 

கல்லுக்கும் வரலாம், கோடாரியால் ஒருவன் முத்தம் தரும்போது...

புல்லுக்கும் வரலாம், உன் கால்களால் தீண்டும் போது...

சொல்லுக்கும் வரலாம், உன்னவள் இதழில் ஐஸ்கிரீம் வழிய பேசும்போது...

முள்ளுக்கும் வரலாம், கண் இமைக்கும் நேரத்தில் உன் காலில் நுழையும் போது... 

தில்லுக்கும் வரலாம், கோழையாக இருப்பவனை அப்பாவியாக பார்க்கும் போது...

வில்லுக்கும் வரலாம், அம்பினை பிடித்து இழுத்து அணைக்கும் போது...

காதல் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அந்த காதலை வீட்டில் சொல்ல, யார் மணமகன்/மணமகள் என்பதை அந்த வீடு மறந்து, மணக்கோலம் பூண்டு வாழைத்தோரணம் வாசலில் கட்ட, பெற்றோரும் அதை பெருமிதம் பொங்க பார்க்க வேண்டும். அதுதான், காதலின் கடைசி நிலை என்பதை புரிந்து பெற்றோர் சம்மதம் பொங்க வாழுங்கள் பல்லாண்டு. காதலும் வாழும் பல நூறாண்டு...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon