Link copied!
Sign in / Sign up
1
Shares

காரம் சாப்பிடுவதால் உங்கள் குழந்தையின் மூக்கு ஒழுகுகிறதா?

உங்கள் குழந்தைகள் சாப்பிடும் போது மூக்கை இழுத்துக்கொண்டே சாப்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். இந்த பழக்கத்தை, வீட்டில் இருந்தால் சமாளித்து விடலாம். வெளியில் எங்காவது விருந்து என செல்லும்போதும் இதே பழக்கம் உங்கள் குழந்தைக்கு இருப்பதால், விருந்தினர்கள் அசவுகரியத்துடன் காணப்படுவதை உங்கள் கண்களால் நீங்கள் பார்த்து இருக்கலாம். குழந்தைக்கு ஒரு மானபங்கம் என்றால்...அது நமக்கும் தான் அல்லவா?

இந்த பிரச்சனைக்கு காரணம் என்ன தெரியுமா? நம் நாவில் சுரக்கும் காப்சைசின் எனும் அதே வேதிப்பொருள், மூக்கிலும் சுரப்பதால் தான். இந்த வேதிப்பொருள் எதில் இருக்கிறது என தெரியுமா? காப்ஸிகம் எனும் பழங்களில் அதிகளவில் இருக்கிறது. இந்த வேதிப்பொருள் நம் நாக்கில் அதிகமாக தீண்ட, மூக்கும் அதன் வேலையை காட்ட தொடங்க, சளி சவ்வுகள் அதிகம் சுரக்க தொடங்குகிறது. இதே நிலையை தான் காரம் சாப்பிடும்போது நம் கண்களும் அடைய கண்ணீர் தாரை தாரையாக கொட்டவும் கூடும். இது பழக்கமாகி போக, ஒவ்வாத சூழலை கண்டாலே ஒரு வித வெறுப்பு உண்டாகும்.

காப்ஸிகம் தாவரத்திலிருந்து கிடைக்கப்படும் காப்சைசின், காரத்தன்மை கொண்ட மிளகுடையது. இதனால், பாலூட்டிகளின் பசியானது போக்கப்படுகிறது. அதேபோல், அலைல் ஐசோதையோசைனைட் எனும் வேதிப்பொருளிளும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய தன்மை இருக்கிறது.

இந்த மூக்கு ஒழுகுதல் பிரச்சனையால் என்ன உண்டாகும்?

காப்சைசின் மற்றும் ஐசோதையோசைனைட் ஆகிய இரண்டும் சளி சுரக்கும் சவ்வை அதிகம் சுரக்க செய்யும். இதனால், உங்கள் குழந்தையின் நுரையீரல், மற்றும் பல்வேறு உடல் உறுப்புகள் என பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், மற்றும் வைரஸ்களை உடல் துவாரம் வழியாக வெளியேற்ற செய்யும்.

சளி சவ்வானது நாசியில் சளியை சுரக்க செய்கிறது. இதனால் ஒவ்வாத சூழலின் போதும் கூட குழந்தைகளுக்கு மூக்கு ஒழுக தொடங்கும். இருப்பினும், மூச்சு விடுவதற்கான அழகிய வாய்ப்பை இதனால் ஏற்படுத்தி தரவும்கூடும்.

என்ன செய்ய வேண்டும்?

இந்த பிரச்சனையை தவிர்க்க, நீர் மற்றும் ஆல்கஹால் அடங்கிய உணவை குறைத்திடலாம். அதற்கு பதிலாக பால் பருகுவது நல்லது. இந்த காப்சைசின் எனும் வேதிப்பொருள் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கக்கூடியது. அதனால், நீரிலும் கரைந்திருக்கிறது. ஆல்கஹாலும் இந்த நீரை சுரக்க செய்யக்கூடும்.

காப்சைசினை நெருங்கவிடாமல் பால் பார்த்துக்கொள்கிறது. ஒரு ஆய்வின் அறிக்கைப்படி, பாலில் கேசின் எனப்படும் புரதம் இருப்பது தெரியவருகிறது. இதற்கு கொழுப்பை விரும்பும் தன்மை இருப்பதால் எண்ணெய் பிசுபிசுப்பு கொண்ட காப்சைசினை நீக்கி விடுகிறது. 

அதே ஆய்வின் இன்னொரு அறிக்கைப்படி, சுக்ரோஸ் (டேபிள் சுகர்) என்னும் வேதிப்பொருளுடன் வினைப்புரிவதால் காப்சைசின் சமாதானமாக செல்லக்கூடும் எனவும் தெரியவருகிறது. அதனால், பால் சாப்பிட விருப்பமற்றவர்கள், குளிர்ந்த நீருடன் 10 சதவிகித சர்க்கரை சேர்த்து சாப்பிட முயற்சிக்கலாம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon