Link copied!
Sign in / Sign up
5
Shares

காம உணர்வுகள் தவறா?

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. காதல் வாழ்வில் வந்தவுடன் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் ஒருவர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு ஏற்படும் இயற்கை உணர்வே காம உணர்வாகிறது. திருமண பந்தத்தில் ஒன்றிணைவதன் மூலம் அவர்களது தாம்பத்திய வாழ்வை தொடங்குகிறார்கள். அவர்களது வாழ்வை முழுமையடைய செய்யும் குழந்தை வர காரணமாய் இருப்பது காம உணர்வே. இது எவ்வித பாகுபாடுமின்றி ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும். இங்கு காம உணர்வுகள் தவறான ஒன்றா என்பதை பற்றி பார்க்கலாம்.

காம உணர்வு என்பது உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயல்பாகவே இருக்கக் கூடியதாகும். எவரும் கற்பிக்காமலே பறவைகள் முட்டை இடுகின்றன மற்றும் விலங்குகள் குட்டி போடுகின்றன. மனிதன் இனப் பெருக்கம் செய்கிறான். இவற்றிற்கு ஆதி காரணமாக இருப்பது காமம் தான். காமம் என்பது தலைமுறையை விருத்தியடைய செய்யும்.

மனிதர்களுக்கு உணர்வுகளை அழிக்க கூடியவை ஐம்புலன்கள் தான். பார்த்தல், கேட்டல், ருசித்தல், வாசனை அறிதல், தொட்டு உணர்தல் ஆகியவை ஐம்புலன்களின் வேலையாகும். உடலில் உள்ள ஐம்புலன்களும் ஒன்றாக இன்பம் அனுபவிக்க ஏற்படக்கூடிய ஆசையே காமம். மற்ற இன்பங்களைக் காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம்தான் மிகச்சிறந்த இன்பமாக அமைகிறது. காம உணர்வின்றி எந்த ஒரு மனிதனும் இருக்க முடியாது. காம உணர்வு இல்லாமல் இருந்தால், ஏதேனும் உடல்நல குறைபாடு இருக்கலாம் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

காம உணர்வு என்பது மனிதர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. ஆனால், அது அளவோடு இருக்க வேண்டும் என்பது மற்றொரு முக்கியமான விஷயம். உயிரினங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் இனவிருத்திக்காக பருவ காலத்தில் மட்டுமே ஒன்றிணைகிறது. ஆனால், மனிதர்கள் மட்டுமே எல்லா காலத்திலும் உடலுறவில் ஈடுபடுகிறான். எல்லா இடங்களிலும், பல நிலைகளிலும் உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.

ஆண், பெண் என இருவருக்குமே உடலுறவில் விருப்பமும், ஈடுபாடும் இருப்பதால், அவர்களுக்குள் சில விதிமுறைகளையும், ஆசைகளையும் வகுத்து கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் மனநிலையும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும்.

காம உணர்வுகள் மற்றவர்களை பாதிக்காத வகையிலும், தீங்கிழைக்காத வகையிலும் இருக்க வேண்டும். நமது கலாச்சாரத்தை சீர்குலைக்காத வகையிலும், உறவுகளை மதிக்கும் விதமாகவும், நமது சட்டங்களை மீறாத வகையிலும் இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் சட்ட ரீதியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

இல்லை எனில் நம்மை சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ள வைத்துவிடும். அளவுக்கு அதிகமான எதுவும் ஆபத்தை ஏற்படுத்தும். அது போல தான் காம உணர்வும் கட்டுப்பாட்டில் அளவோடு இருப்பது சிறந்தது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon