Link copied!
Sign in / Sign up
2
Shares

கிருஷ்ண ஜெயந்தி - ஒரு பார்வை

கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமி என்பது, கம்சனிடம் இருந்து, காக்கப்பட்ட சிறைவாசத்தில், வாசுதேவருக்கும் ஜானகிக்கும் பிறந்த கிருஷ்ணரின் நினைவாக, அவரின் பிறந்த நாளைக் சிறப்பிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளின் மகத்துவம் குறித்து அறிவோம் வாருங்கள் மக்களே! 

இந்நாளில், குழந்தைகளை கிருஷ்ணர் போல அலங்கரித்து, அரிசிமாவில் குழந்தைகளின் கால் தடம் பதித்து, வெளியிலிருந்து வீட்டிற்குள் நடக்க வைத்து பெற்றோர் அழகு பார்ப்பர்; அந்தக் கண்ணனே தங்கள் வீட்டிற்குள் பிரவேசிப்பது போல் தோன்றும். 

மேலும் இந்நாளில், பெரும்பாலான கிருஷ்ண பக்தர்கள், நீர் கூட அருந்தாமல் விரதமிருப்பர்; இதனை நிர்ஜல் விரதம் என்பர். இவ்விரதத்தை கிருஷ்ணருக்குப் பிடித்த பால் அல்லது பால் பொருட்கள் முடிப்பர்.

பல இடங்களில், கிருஷ்ணர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த கதையை பாடல்களாகவும், நாடகமாகவும் நடித்து விளக்குவர்; கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்த கோவில்களில், கிருஷ்ணரைப்பற்றிய பாடல்கள்,ன் மந்திரங்கள் ஸ்லோகங்கள் சொல்லி சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இன்னும் சில இடங்களில், கிருஷ்ண லீலைகளை பற்றிய கதாக்காலட்சேபம் நடத்தப்படும்.

இந்நாளில், பால் பொருட்களில், இனிப்புகள் செய்து உண்டும், மற்றவருக்கு வழங்கியும் மகிழ்ச்சி கொள்வர். கிருஷ்ணர் ஊஞ்சலில் வீற்றிருப்பது போன்று அவரின் உருவச்சிலை அமைத்து, வழிபட்டு ஆனந்தம் கொள்வர்.

இது உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு விழாவாக உள்ளது. இதற்கு அரசு விடுமுறையும் அளித்து கௌரவித்துள்ளது. இந்நன்னாளில், கிருஷ்ணர் ஊஞ்சலில் வீற்றிருப்பது போன்ற சிலையை அல்லது கிருஷ்ணரின் உருவச்சிலையை பரிசாக அளித்து மகிழ்வர்.

இந்நாளில் மிக முக்கியமான ஒன்று உண்டென்றால், அது அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை குட்டி கிருஷ்ணர்களாக அலங்கரித்து, மயிலிறகு சூட்டி, மனம் நிறைவர்; பலர் குழந்தைகளை மாறுவேட போட்டிகளுக்கும் அனுப்பி, குழந்தையின் அழகினை ஊர் மெச்ச செய்வர்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon