Link copied!
Sign in / Sign up
8
Shares

குழந்தைகளுக்கு பிடித்த ஜாங்கிரி செய்வது எப்படி?

ஜாங்கிரி என்பது இனிப்பு வகை என மட்டும் பார்க்காதீர்கள். அதையும் தாண்டிய இந்த ஜாங்கிரியில் என்னவெல்லாம் சேர்க்கப்படுகிறது என நாம் பார்த்தால் முதலில் முந்திக்கொண்டு வருவது உளுந்து தான். இன்றைய நாளில் இட்லியாக இருக்கட்டும், தோசையாக இருக்கட்டும்...இவ்வளவு ஏன் விஷேஷங்களின் போதுகூட உளுந்த வடை அற்ற உணவை உங்களால் காண முடியுமா? அப்பேற்ப்பட்ட உளுந்து தான் இந்த ஜாங்கிரி செய்வதற்கு முதன்மையான பொருளாக தேவைப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப் 

அரிசி – 1 மேசைக்கரண்டி 

சர்க்கரை – 1 மற்றும் 1/2 கப்

 தண்ணீர் – 1 கப் 

கேசரி கலர்(சிகப்பு அல்லது ஆரஞ்ச்) – 2 பின்ச் 

ரோஸ் எஸ்ஸன்ஸ் – 2 தேக்கரண்டி

செய்முறை:

1. அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். 

2. அவற்றுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

3. அதன்பின்னர் அரைத்த மாவில் ஒரு சிட்டிகை கேசரி பவுடர் கலந்து கொள்ள வேண்டும். 

4. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து கொதிக்க விட்டு பாகு தயாரித்து, இளம் பாகு பதம் வந்ததும் கேசரி கலர் மற்றும் ரோஸ் எஸ்ஸன்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. வட சட்டியில் எண்ணெய் ஊற்றி, மிதமாக சூடேற்றி, ஒரு சுத்தமான துணி அல்லது ஜிப்லாக் கவரில் சிறிய ஓட்டை போடவும். 

6. அதன்பின்னர் அதில் மாவை நிரப்பி முதலில் வட்டம் போட்டு, அதன் மேலே சுருள் சுருளாக சுற்றிலும் பிழிந்து விடவும். 

7. ஜாங்கிரி ஒரு புறம் வெந்தவுடன், திருப்பிப் போட்டு மறுபுறம் வேக விடவும். 

8. ஜாங்கிரி முழுமையாக வெந்தவுடன் அதை எடுத்து சர்க்கரை பாகில், 2 நிமிடங்கள் வரை போட வேண்டும். 

9. ஜாங்கிரி பெரிதாகி வரும் வரை பாகில் ஊற விட்டு, தட்டில் அடுக்கி விடவும். 

10. அரை மணி நேரத்திற்கு இதை அப்படியே வைத்திருந்தால் சுவையான ஜாங்கிரி ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon