Link copied!
Sign in / Sign up
7
Shares

ஜல்லிக்கட்டு வரலாறு

ஜல்லிக்கட்டு என்பது எப்போதும் பொங்கல் பண்டிகையுடன் ஒன்றிணைந்து என்றே சொல்லாம். உழவு தொழிலுக்கு மாடுகளை வளர்ப்பதை போல், ஜல்லிக்கட்டிற்கென காளைகளை தனியாக வளர்த்து பயிற்சி கொடுத்திருப்பார்கள். இந்த ஒரு நாளிற்காக காளை வருடம் முழுவதும் பயற்சிப்படுத்தப் பட்டிருக்கும். இங்கு ஜல்லிக்கட்டின் வரலாற்றை பற்றி பார்க்கலாம்.

வரலாறு

அந்த வருடத்தில் உழவு தொழில் மூலம் கிடைத்த தானியங்களை வீட்டில் குவித்து வைத்திருந்த ஒரு விவசாயி, அதை தன் மனைவியிடம் காட்டி அவரின் உழைப்பில் உருவானது என்று பெருமையாய் சொன்னார். அப்போது உழவுக்கு உதவி செய்த மாடு, அதன் தலையை அசைக்க, கொம்புகளில் கட்டியிருந்த மணியின் ஓசை கேட்டதாம்.

அப்போதும், அந்த விவசாயின் மனைவி கணவரை பார்த்து நகைத்து கொண்டே, உங்கள் உழைப்பில் இந்த காளைக்கும் தான் பங்கிருக்கிறது. தலையை அசைகிறது பாருங்கள் என்றாளாம். அப்போது, அந்த விவசாயி நானா? அந்த காளையா? பார்த்துவிடுகிறேன் என்று அதன் கொம்புகளை பிடித்து நிறுத்த முயற்சித்தாரம். அப்படி தோன்றியது தான் ஜல்லிக்கட்டு என்கிறது சில வரலாறு.

''ஏறுதழுவுதல்'' என்பதே இதன் அழகான வார்த்தையாகும். காலப்போக்கில் ஜல்லிக்கட்டு என்று மறுவி ஜல்லிக்கட்டு என மாறியதாகவும் கூறப்படுகிறது. அதாவது, ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் இருந்தே, அவர்களது நாணயங்களான சல்லிக் காசுகளை ஒரு துணியில் முடிந்து காலையின் கொம்பில் கட்டிவிடுவார்கள். காளையை அடக்குபவர்கள் அந்தக் காலையின் கொம்பில் கட்டப்பட்டு இருக்கும் சல்லிகாசை எடுத்துக் கொள்ளலாம். இதுவே பின்னாட்களில் ஜல்லிக்கட்டு என்று மறுவியதாகவும் கூறப்படுகிறது.

வாடி மஞ்சு விரட்டு

இந்த ஜல்லிகட்டு விளையாட்டு மூன்று வகைகளாக பிரிக்கலாம். வாடி மஞ்சு விரட்டு என்பது ஒரு திறப்பின் வழியாக வெளியேவரும் காளையை பிடித்துக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும். அதன் பிடியை விடக் கூடாது. மதுரையின் பாலமேட்டில் இந்த மாதிரியான ஜல்லிக்கட்டு விளையாட்டு பிரபலம்.

வெளிவிரட்டு

மதுரை, சிவகங்கையில் பிரபலமான இன்னொருவகை காளை விளையாட்டு 'வெளிவிரட்டாகும்'. இதில் காளை திறந்த மைதானத்துக்குள் அனுப்பப்படும். காளை கயிறால் கட்டப்படுவதோ, குறிப்பிட்ட பாதையில்தான் செல்லவேண்டுமென்ற நிபந்தனையோ இருக்காது.

ஜல்லிக்கட்டு நம் தமிழர்களின் பாரம்பரிய மற்றும் கலாசார வீர விளையாட்டுகளின் அடையாளம். இது நம் மரபை சந்ததியினருக்கும் எடுத்து சொல்லி புரிய வைக்க கூடிய ஒன்று. இது அவசியத்தையும், அத்தியாவசிதையும் கட்டாயம் எடுத்து சொல்ல வேண்டும். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon