Link copied!
Sign in / Sign up
0
Shares

ஜல்லிக்கட்டை போல் மற்ற மாநிலங்களில் நடக்கும் போட்டிகள்

பொங்கல் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு தான். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. இது தமிழர்களின் வீரம் மற்றும் கலாசாரத்தின் அடையாளம். பொங்கலின் போது இது சில ஊர்களில் மிகவும் பிரபலமானது. நம் ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டை போல், மற்ற மாநிலங்களிலும் சில போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று என்பதை விட, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. இதற்கென காளைகள் தனியாக வளர்க்கப்பட்டு, பயற்சியளிக்கப்படுகின்றன. காளையை அடக்குவதை ஒரு கலை என்றே சொல்வார்கள் காளையை அடக்கும் வீரர்கள். இது பொங்கலின் போது நடத்தப்படுகிறது.

குஜராத்

இங்கு பொங்கல் மகரசங்கராந்தி எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இதை மகரசங்கராந்தி என்பதை விட பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அனைத்து வீட்டிலும் பட்டங்களை பறக்கவிடுகின்றனர். அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் மகர சங்ராந்தி அன்று அகில உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அரசே நடத்தி வருகிறது. இந்த நாளில் பல வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் படங்கள் பறக்கவிடப்படுகின்றன.

கர்நாடகா

கர்நாடகாவிலும் இந்த நாள் மகரசங்கராந்தி எனும் பெயரால், ஒரு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நாம் ஜல்லிக்கட்டு கொண்டாடுவதை போல், இவர்கள் இங்கு மாடுகளின் ரேஸ் நடத்துகிறார்கள். குறிப்பாக மைசூர் மற்றும் மாண்டியா பகுதியில் இது வெகு விமர்சையாக நடக்கிறது.

ஆந்திரா

இங்கும் மகரசங்ராந்தி எனும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தப் பண்டிகையும் நம் பொங்கலை போன்று தான். முதல் நாள் போகி பண்டிகையும், அடுத்த நாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டுகிறார்கள். போகியில் பழையனவற்றை எரித்து, மாலையில் கொலு வைக்கிறார்கள். மகர சங்ராந்தி அன்று சூரியனுக்கு பொங்கல் வைக்கிறார்கள். இவர்களின் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை என்றாலும், கிராமங்களில் கன்னுமாதான் மிகவும் விசேஷம். இந்த நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்களும் உண்டு. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon