Link copied!
Sign in / Sign up
1
Shares

ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன ஊர்கள்

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டையும், வீரத்தையும் உலகிற்கு எடுத்து சொல்லும் ஒன்றாகும். ஜல்லிக்கட்டு மாடுகளுக்கென சில வகை மாடுகள் இருக்கின்றன. அவற்றை வருடம் முழுவதும் பழக்கி, ஜல்லிக்கட்டு நாளில் களமிறங்கவிடப்படுகிறது. முற்காலத்தில் இதை ஏறுதழுவுதல் என்பார்கள். இதில் ஏறு என்பது காளை மாட்டையும், தழுவுதல் என்பது அடக்குதல் என்றும் பொருள்படும்.

இந்த ஜல்லிக்கட்டு மற்ற நாட்களில் நடத்தப்பட்டாலும், பொங்கல் சமயத்தில் இது சிறப்பு பெறுகிறது. ஏறுதழுவுதலின் வகைகள் வேலி சல்லிக்கட்டு, வாடிவாசல் சல்லிக்கட்டு மற்றும் வடம் சல்லிக்கட்டு போன்றவையாகும். ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன சில ஊர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

அலங்காநல்லூர்

ஜல்லிக்கட்டு அனைத்து இடங்களிலும் நடந்தாலும், அலங்காநல்லூரில் நடப்பதே அதிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஜல்லிக்கட்டு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண உலகெங்கிலுமிருந்தும் ரசிகர்கள் வருகின்றனர்.

அவனியாபுரம்

இங்கும் ஜல்லிக்கட்டு தொன்று தொட்டு நடந்து வருகிறது. மதுரைக்குத் தெற்கே, மதுரை விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் 4 கி.மீ தூரத்தில் அவனியாபுரம் அமைந்துள்ளது. இதன் பழமையான பெயர் அவனிபசேகரமங்கலம் என்றும் பிள்ளையார்பாளையம் எனவும் அழைக்கபட்டுள்ளது. இங்கும் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடந்து வருகிறது.

திருவாபூர்

ஜல்லிக்கட்டு நடக்கும் மற்றொரு ஊர் திருவாப்பூர். கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது டெல்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை தூக்கி போன்ற சித்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள தம்மம்பட்டியில் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டை திருவிழா போன்றே கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் ஊரே திருவிழா போல் காட்சியளிக்கும்.

பாலமேடு

ஜல்லிக்கட்டு என்றவுடன் அலங்காநல்லூருக்கு பிறகு நினைவிற்கு வருவது பாலமேடு தான். இது மதுரை மாவட்டத்திலேயே ஜல்லிக்கட்டிற்கு தனி சிறப்பு வாய்ந்தது. வெளிநாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் வந்தபடி இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதியை ஊர்மக்களே செய்து கொடுக்கிறார்கள்.

சிராவயல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல் பகுதியில் வருடம் தோறும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. இது மதுரைக்கு அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

கண்டுப்பட்டி

சிவகங்கை மாவட்டத்தின் சிராவயல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடப்பதை போல், கண்டுப்பட்டி கிராமத்திலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. இங்கு காளைகளை அடைக்க வருபவர்களை மரியாதையுடன் நடத்துவது தனி சிறப்பு.

வேந்தான்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம் வேந்தான் பட்டி என்னும் ஊரிலும் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள். பொங்கல் திருநாளின் போது, மொத்த கிராமமும் திருவிழா போல காட்சியளிக்கும். இந்த ஊரில் பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

பல்லவராயன்பட்டி

தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள பல்லவராயன்பட்டி என்னும் கிராமத்தில் ஜல்லிக்கட்டை திருவிழாவாகவே கொண்டாடுகிறார்கள்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கம்புணரி ஒரு பேரூராட்சியாகும். இங்கு அக்கம் பக்கத்து ஊரில் இருப்பவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon