Link copied!
Sign in / Sign up
7
Shares

இயற்கையின் முதல் தடுப்பூசி

குழந்தை எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோர்க்கும் உள்ள கனவாக இருக்கிறது. அதற்காக எந்த விதமான துயரத்தையும் தாங்கிக் கொண்டு, எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்வியோடு இல்லாமல் தனியாக ஒரு படிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், நன்றாக வளர வேண்டும் என்பதற்காக அதற்கான மித பானங்கள், டானிக்குகள் என்று சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் செலவிடுகிறார்கள்.

வளரும் குழந்தைகளுக்கு கவனமெடுத்து செய்யும் தாய்மார்கள், அவர்கள் குழந்தையாய் இருக்கும் போது கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். அப்படி என்ன மறந்தார்கள் என்றால் தாய்ப்பால் ஊட்டுவதைத்தான். விலங்குகள் அனைத்தும் தனது குட்டிக்கு போதுமான அளவு பால் கொடுக்கின்றன.

பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்கத் தேவையில்லை. போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க வேண்டியதில்லை. என் குழந்தை ஆரோக்கியமாக வளர சத்தான தாய்ப்பால் வேண்டும். அதை என் குழந்தைக்கு குறைவில்லாமல் கொடுக்க வேண்டும் என்று மனதார நினைத்தாலே போதும்.பால் சுரக்கத் தொடங்கும்.

குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சிசேரியன், உடல்நிலை சரியில்லை என்று பிறந்த சில நாட்கள் பால் கொடுக்கவில்லை என்றால் தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அதனால் சிசேரியன் என்றாலும் மயக்கம் தெளிந்த பின் பால் கொடுக்கலாம். குழந்தை உறிஞ்ச, உறிஞ்ச பால் அதிக அளவில் சுரக்கத் தொடங்கிவிடும். குழந்தையின் பசியை அறிந்து இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பாலுட்ட வேண்டும்.

பால் குடித்த ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பால் சுரந்துவிடும். தாய்ப்பால் இயற்கை தரும் முதல் தடுப்பூசி. அது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும். கலப்படமற்றது, சுத்தமானது. எளிதில் ஜீரணமாகும். குழந்தையின் மலம், சிறுநீர் வெளியேற்றத்திலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். முதலில் வரும் சீம்பால்தான் குழந்தைக்கு வரும் எல்லா நோய்களிலிருந்தும் காப்பாற்றுகிறது. உடலாலும், மனதாலும் குழந்தை முழு வளர்ச்சியடையும். பார்வைக் கோளாறு ஏற்படாது.

வைட்டமின் டி இருப்பதால் எலும்பை பாதிக்கும் ரிக்கட்ஸ் எனும் நோய் வராது. ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைத்திறன் கூடும். இவற்றோடு தாயின் அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே குழந்தைக்கு போய்ச்சேரும். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நன்மைகள் ஏராளம். முக்கியமாக மார்பக புற்றுநோய் ஏற்படாது.

பிரசவத்திற்குப்பின் அதிகமாக வெளியேறும் இரத்தப் போக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நின்று விடும். எனவே, குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுங்கள். பால் கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்து போகும் என்ற ஆதாரமற்ற வதந்தியை நம்புவதைவிட தாய்ப்பால் கொடுத்து வலிமையான பாரதத்தை உருவாக்குவது, இளம் தாய்மார்களின் கையில் தான் இருக்கிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon