Link copied!
Sign in / Sign up
267
Shares

இயற்கை முறையில் குழந்தையின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா..?

குழந்தைகள் என்றாலே அழகுதான். அதில் கருப்பு, சிகப்பு என எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் பெற்றோர்கள் தாங்கள் அழகா இல்லவிட்டாலும், தங்கள் குழந்தைகள் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். தங்கள் குழந்தையின் நிறம் கூடுதலாக இருக்க வேண்டும் எனவும் எண்ண துவங்குகிறார்கள். குழந்தையின் நிறம் மற்றும் குணாதிசயங்கள் போன்றவை பெற்றோர்களின் பரம்பரை ஜீனிலிருந்து பெறப்படுகின்றன என்றாலும், குழந்தையின் நிறத்தை அதிகரிக்க சில பெற்றோர்கள், குழந்தை கருவிலிருக்கும் போதே குங்கும பூ, மாதுளை மற்றும் திராட்சை போன்றவைகளை உட்கொண்டு, குழந்தையின் நிறத்தை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள். சில பெற்றோர்கள் குழந்தை பிறந்த பிறகு நிறத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். அப்படி முயற்சிக்கும் பெற்றோர்களுக்கு இயற்கையான முறையில் குழந்தையின்  நிறத்தை அதிகரிக்கும் வழிகளை இங்கு பார்ப்போம். 

1 ஆலிவ் எண்ணெய்

தோலை ஈரப்பதமூட்டுதல், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, முக ஒப்பனை அகற்ற, வயதான தோற்றத்திற்கு எதிர்ப்பு காரணியாக மற்றும் குதிகால் வெடிப்பை குணப்படுத்துவது என பல நன்மைகளை கொண்டிருக்கிறது. ஆலிவ் எண்ணையை சூடுபடுத்தி, மிதமான சூட்டில் குழந்தையின் மேல் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது குழந்தையின் தோலை பாதுகாத்து, நிறத்தை அதிகரிக்க செய்யும்.

2 தேங்காய் எண்ணெய்

சிறந்த தோல் மாய்ஸ்சரைசர், இயற்கை ஒப்பனை நீக்கி, சிறந்த ஆழ்ந்த சுத்தப்படுத்திகள், ஒரு பாக்டீரியா கவசமாக செயல்படுகிறது, பூஞ்சை தொற்றுக்களைச் சமாளிக்கிறது, சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது, முக சுருக்கங்களை குறைக்கிறது. இப்படி பல பயன்கள் உள்ள தேங்காய் எண்ணையை சூடுபடுத்தி, மிதமான சூட்டில் குழந்தையின் மேல் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது குழந்தையின் தோலை பாதுகாத்து, நிறத்தை அதிகரிக்க செய்கிறது.

3 மஞ்சள்

மஞ்சள் இயற்கையாகவே மருத்துவ தன்மை நிறைந்த ஒன்று. இது பெண்களின் முகப்பரு, கரும்புள்ளி, சுருக்கங்கள், சூரியனால் ஏற்படும் பாதிப்புகள், முகம் அழகு பெற மற்றும் எண்ணெய் சருமத்திற்கும் மஞ்சள் மிக சிறந்த ஒன்று. இயற்கையாக வீட்டிலேயே கலப்படம் இல்லாமல் அரைக்கப்பட்ட மஞ்சளை தேங்காய் எண்ணையுடன் கலந்து குழந்தையின் மென்மையாக தடவி 2 முதல் 3 நிமிடங்களில் குழந்தையை குளிக்க வைக்கவும்.

4 பால் மற்றும் சந்தனம்

அழகை அதிகப் படுத்துவதில் எப்போதும் பங்கு கொள்ளும் ஒன்று பால். பாலில் சந்தனம் மற்றும் மஞ்சள் சேர்த்த கலவையை குழந்தைக்கு பூசி 2 முதல் 3 நிமிடங்களில் குழந்தையை குளிக்க வைக்கவும். இதில் உள்ள பால், சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவை இயற்கையை அழகை மேம்படுத்தும் பொருட்கள். இவை குழந்தையின் நிறத்தை அதிகரிக்க செய்யும்.

5 கடலை மாவு மற்றும் பன்னீர்

கடலை மாவு மற்றும் பன்னீர் ஆகியவற்றை பாலுடன் கலந்து, குழந்தையின் உடலில் தடவி 2 முதல் 3 நிமிடங்களில் குழந்தையை குளிக்க வைக்கவும். இதில் உள்ள மருத்துவ தன்மை, குழந்தையின் உடல் நிறத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் அதிகரிக்க செய்யும்.

6 சூரிய ஒளி

அளவாக எடுத்து கொள்ளும் சூரிய ஒளி, குழந்தைகளின் உடல் நிறத்தை அதிகரிக்க செய்யும். காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான சூரிய ஒளியில் குழந்தையை 15 நிமிடங்கள் இருக்க செய்யலாம். இது அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், நிறத்தையும் அதிகப்படுத்தும்.

7 திராட்சை பழச்சாறு

குழந்தைக்கு ஆறு மாத காலம் முடிந்த பிறகு, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பழச்சாறை குழந்தைக்கு குறைவான அளவில் கொடுக்கலாம். இது அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நிறத்தையும் அதிகரிக்க செய்யும் பண்பு திராட்சைக்கு உள்ளது.

இதில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் குழந்தையின் மூன்று மாதங்களுக்கு பின் முயற்சியுங்கள். அவர்களுக்கு ஏதும் அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை கால் அல்லது வேறு சில பகுதிகளில் தடவி பரிசோதித்து கொண்டு பயன்படுத்துங்கள்.ஏனெனில், இவை சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இரசாயன கலப்பில் உருவான பல களிம்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான வழிகளை முயற்சித்து, தங்கத்தை விட மேலான குழந்தைகளின் நிறத்தை மெருகூட்டலாம். இயற்கையை பயன்படுத்தி, இன்பமாய் வாழ்வோமாக!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon