Link copied!
Sign in / Sign up
1
Shares

பீட்சா தயாரிப்பது எப்படி?

இந்தியாவில், இன்று பெருமையுடன் கடைகளின் ஓவனில் இருபத்து நான்கு மணி நேரமும் தயார்செய்துக்கொண்டிருக்கும் பீட்சாவின் பிறப்பிடம் எது தெரியுமா? இத்தாலி தான். ஒருக்காலத்தில் பணக்கார உணவாக இருந்த பீட்சா, இன்று பல பேர் வீட்டில் தயாரிக்கப்படுகிறது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? "ஹேய், நான் பீட்சா சாப்பிட்டேனே..." என ஒருவர் அன்று கூற, அவரை வாய்பிளந்து பார்த்தோர் பலர். இன்று நான் பீட்சா  சாப்பிட்டேன் என ஒருவர் கூறினால், தினமும் சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என சொல்வோர் தான் அதிகம். இந்த பீட்சாவை நாம் எப்படி தயாரிப்பது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். 

பீட்சா மாவு தயாரிப்பது எப்படி?

மைதா - 5 கப்

ஈஸ்ட் (விரைவில் நொதித்து போகும் பொருள்) - 15 கிராம்

உப்பு - 2 டீ ஸ்பூன்

சுடு தண்ணீர் - 2 கப்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, மைதா, ஈஸ்ட் மற்றும் உப்பை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

3. பத்து முதல் பன்னிரெண்டு நிமிடம் வரை நன்றாக பிசைந்துக்கொண்டு மாவின் மென்மையை சரிப்பார்த்து கொள்ளவும்.

4. அந்த பிசைந்த மாவை பந்து போல் உருட்டிக்கொண்டு, மெல்லிய கவர் கொண்டு இறுக மூடிக்கொள்ளுங்கள்.

5. பத்து நிமிடங்களுக்கு வைத்திருந்தால் பீட்சா செய்வதற்கான மாவு ரெடி.

வெஜிடபிள் பீட்சா தயாரிப்பது எப்படி?

பீட்சா கீழ் பரப்பு (மாவினால் செய்தது) - 1 அல்லது 2

காலிபிளவர் - 1 கப் (நறுக்கியது)

கத்தரிக்காய் - 1/4 கப் (நறுக்கியது)

வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)

கேரட் - 1/4 கப் (நறுக்கியது)

காப்ஸிகம் (மிளகாய்) - 1/4 கப் (வெட்டியது)

கீரை - 1/2 கப் (நறுக்கியது)

தக்காளி (விதை நீக்கப்பட்டது) - 1 (நன்றாக நறுக்கியதும் கூட)

பீட்சா சாஸ் - 1/2 கப்

லெமன் ஜூஸ் - 2 டீ ஸ்பூன்

கரம் மசாலா பவுடர் - 1 டீ ஸ்பூன்

சாட் மசாலா தூள் - 1/4 டீ ஸ்பூன்

பூண்டு - 1 டீ ஸ்பூன் (அரைத்தது)

ஆலிவ் ஆயில் - 1/2 டீ ஸ்பூன்

சீஸ் - கையளவு வெட்டப்பட்டது (தேவைப்பட்டால் மட்டும்)

பிளாக் ஆலிவ் - கொஞ்சம் (தேவைப்பட்டால் மட்டும்)

செய்முறை:

1. முதலில் பீட்சா சாஸ், பூண்டு, கரம் மசாலா பவுடர், சாட் மசாலா தூள், மஞ்சள் பவுடர் மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவற்றை மிக்ஸ் செய்துக்கொள்ள வேண்டும்.

2. எண்ணெய் பிடிக்காத (நாண் ஸ்டிக்) கடாயில் எண்ணெய்யை சுடவைக்க வேண்டும்.

3. அதில் காலிபிளவர், கத்தரிக்காய், கேரட் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக கிண்டி கொள்ள வேண்டும்.

4. சாஸ் மிக்ஸரை பீட்சா மாவில் தடவிக்கொள்ள வேண்டும். கொஞ்சமாக தனியாய் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு தேவைப்படும்.

5. அந்த சாஸின் மேலே நறுக்கிய காய்கறி மற்றும் தக்காளியை தூவி கொள்ளுங்கள்.

7. மீதம் வைத்திருந்த சாஸை காய்கறியின் மேலே ஊற்றிக்கொள்ளுங்கள்.

8. அப்படியே அதை எடுத்து ஓவனில் வைத்து பத்து நிமிடங்களுக்கு காத்திருக்க வேண்டும். ஓவன் விட்டு வெளியில் எடுத்து பார்த்தால், அதன் தன்மை மொறுமொறுவென தங்க பழுப்பு நிறத்தில் இருக்கும்.

9. அவ்வளவு தான். சூடான பீட்சா இதோ ரெடி.

என்னங்க, இத்தாலியில் பிறந்து இந்தியாவில் ராஜாவாக வளர்ந்த பீட்சா இவ்வளவு தான் என நம் மனதில் தோன்றுகிறது அல்லவா? அப்படி என்றால், நீங்களும் பீட்சாவை செய்து வீட்டில் சாப்பிடலாமே. பீட்சா சாப்பிடுபவர்கள் குறைவென்றாலும், இதன் விலை ஒன்றும் பெரிதாக குறையவில்லை. அப்படி இருக்க, வீட்டிலே அழகிய பீட்சாவை செய்து சாப்பிட்டு நீங்களும் காக்கா முட்டை ஹீரோ ஆகலாமே. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon