Link copied!
Sign in / Sign up
10
Shares

கர்ப்பிணிகள் மாடி படியில் ஏறுவது சரி தானா?

கர்ப்ப காலத்தில் பல வித குழப்பங்கள் ஏற்பட, மாடியில் ஏறுவதனால், இறங்குவதனால் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்தா எனும் குழப்பமும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது. ஆனால், உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்கள் மாடி ஏறுவதை தவிர்க்க சொல்லி அறிவுரை வழங்குவார்கள். உண்மையிலேயே, கர்ப்ப காலத்தில் மாடிப்படி ஏறுவதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டுமா? வாருங்கள் பார்க்கலாம். 

இது பாதுகாப்பு தானா?

கர்ப்ப காலத்தின் ஆரம்ப நிலையில் உங்கள் உடலுக்கு தேவையான சரி சம அளவு உடல் எடை தாங்கல் என்பது உங்களுக்கு கிடைக்கிறது. 

கர்ப்பிணி பெண்கள் மனதில் எழும் குழப்பங்களுள் ஒன்று மாடிப்படி ஏறுவதால் தான் விழுந்து விடுவோமோ எனும் பயம் தான். ஆனால், நாட்கள் நகர, உங்கள் உடலின் மைய ஈர்ப்பு விசை என்பது மாடியில் ஏறும்போது உங்களை இழுக்கக்கூடும். இதனால் கர்ப்பிணிகள் தடுமாற பெரிதும் வாய்ப்பிருக்கிறது.

கர்ப்ப காலத்தின் 37ஆவது வாரத்தில் உங்கள் கருவிலிருக்கும் குழந்தை இடுப்பில் விழ, இதனால் உங்களால் எளிதில் மூச்சுவிடவும் முடிகிறது. எனவே உங்களால் மாடிப்படியில் ஏற மிகவும் சிரமமாக இருக்கக்கூடும். நீங்கள் படியில் இறங்க நினைத்தாலும் உங்கள் கணவரின் துணையுடன் மெதுவாக இறங்க வேண்டியது மிகவும் அவசியம். அத்துடன் இறங்கும்போது மூச்சு விட்டபடி மெல்ல இறங்குங்கள்.

ஆனால், கர்ப்பிணி பெண்கள் மாடிப்படி ஏறுவதை தவிர்ப்பது தான் மிகவும் நல்லது.

என்ன காரணம்?
மூச்சு விடுவதில் சிரமம்:

1. மாடிப்படி ஏறும்போது மூச்சுவிட உங்களுக்கு சிரமமாக இருக்கும்.

2. இதனால் கருவிலிருக்கும் குழந்தையை ஒரு வித பயம் சூழ, தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும் மறுக்கிறது.

தடுமாறி நடத்தல்:

1. கர்ப்ப காலத்தில் நம் மனதில் தோன்றும் ஒரு எண்ணம் என்னவென்றால் பயம் என்பதாகும். 

2. ஆம், ஒரு நீண்ட பைப் மேலே நாம் மட்டும் நடப்பதுபோல் நமக்கு தோன்ற, இரண்டு பக்கமும் விழுந்துவிடுவோமோ எனும் எண்ணத்துடன் செல்லவும் கூடும்.

முதுகில் அழுத்தம்:

1. கர்ப்ப காலத்தின் போது உங்கள் முதுகுப்பகுதியை யாரோ அழுத்துவது போல் இருக்கும். 

2. அதுவும் மாடிப்படியில் ஏறும் உங்களை யாரோ பின்னிருந்து பிடித்து இழுப்பதுபோல் இருக்கும்.

எப்போது தவிர்க்க வேண்டும்?

1. இரத்தம் வரும்போது

2. இடுப்பு பிடிப்பு அல்லது ஹார்மோன் லெவல் குறையும் போது

3. நீரிழிவு பிரச்சனை இருக்குமெனில்

4. இதற்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால்

5. தலைச்சுற்றல்

6. இரட்டை குழந்தையை நீங்கள் சுமந்தால்

7. உயர்/ குறைவு இரத்த அழுத்தம்

8. டாக்டர் பெட் ரெஸ்டில் இருக்க சொன்னால்.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon