Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தைகள் கண்களை கசக்குவது சரிதானா?

உணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட உணர்வுகள் உடலியல் மாற்றத்தை ஏற்படுத்த அவற்றுள் ஒன்று தான் கண்களை கசக்குவது. பெரியவர்கள் கண்களை கசக்க, அதற்கான காரணத்தை நாம் தெரிந்துக்கொள்ள முடியும். அவர்கள் வெளியில் செல்லும்போதோ அல்லது வீட்டின் ஜன்னல் வழியாக ஊடுருவும் தூசியினாலோ கண் எரிச்சல் தாங்காமல் கண்களை கசக்க செய்வார்கள். அதுவே என்ன காரணமென அறியாமல் குழந்தைகள் கண் கசக்கி அழுதால் நம்மால் என்ன செய்ய முடியும். எனவே, குழந்தைகள் கண் கசக்குவது பற்றி அம்மாக்கள் ஒருசில விஷயங்களை கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அது என்ன என நாம் இப்போது பார்ப்போமா!

1. தூக்கம் வருதல்:

இது இயல்பான விஷயம் தான். நாம் இரவில் விழித்திருந்து ஒரு வேலையை செய்ய, திடீரென தூக்கம் சொக்கும். உடனே நம் கண்களை கசக்க செய்வோம். இதே தான் குழந்தைகளும் செய்கிறார்கள். ஆம், அவர்களுக்கு தூக்கம் வரும்போது கண்களை கசக்க செய்வார்கள். அப்போது அவர்கள் கண்களை நன்றாக கவனித்து பாருங்கள். அவர்கள் கண்கள் மிகவும் சோர்வுடன் காணப்படுமெனில் அவர்களை தூங்க வைக்க வேண்டும். ஒருசில நேரத்தில் நீங்கள் அவர்களை தட்டி தருவதன் மூலமாகவும், இது தூக்கமின்மை பிரச்சனை தானா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

2. கண் வறட்சி:

உங்கள் குழந்தையின் கண்கள் வறண்டு போனாலும் கண்ணீர் சுரக்க அவர்கள் கசக்க செய்வார்கள். ஆம், அவர்கள் கண்ணில் நீர் சுரக்காமல் இருக்கும் பட்சத்தில் வறண்டு காணப்படும். அப்போது அவர்கள் அழுத்தி கண்களை கசக்கவும் செய்வார்கள். இதனால் கண்ணீரை சுரக்க வைக்க அவர்களுடைய ஹார்மோன்கள் மெல்ல முயற்சிக்கும்.

3. ஆர்வத்தின் வெளிப்பாடு:

இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு செயல். ஆம், குழந்தைகளிடம் நம் செல்போனை காட்டினால் அதில் வரும் ஒளியை கண்டு மீண்டும் மீண்டும் தொட முயற்சிப்பார்கள். இதற்கு காரணம், மீண்டும் மீண்டும் ஒரு செயலை செய்ய அவர்கள் மனம் தூண்டும் ஆர்வத்தின் வெளிப்பாடே ஆகும். அதுபோலவே குழந்தைகள் தன் உடலை தொட்டு பார்க்க ஆசைக்கொள்ள, அத்துடன் பிடித்த விஷயங்களை மறுபடியும் செய்ய முயற்சிக்கின்றனர். அவற்றுள் ஒன்று தான் கண்களை தொட்டு பார்ப்பதும், கசக்குவதுமாகும்.

4. என் கண்களில் ஏதோ இருக்கிறது:

இது குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு உணர்வாகும். அவர்களுக்கு என்ன செய்வதென்று சொல்லவும் தெரியாது. நாம் அதற்கான பதிலை கூறினாலும் அவர்களால் அவ்வளவு எளிதில் புரிந்துக்கொள்ளவும் முடியாது. அப்படி இருக்க அவர்கள் கண்களில் சுரக்கும் நீரின் எரிச்சலால் ஏதோ கண்களில் இருக்கிறது என்பதை உணர்ந்து அதை வெளிக்கொணர முயல்வர். அப்போது அவர்கள் கண்களை கசக்க செய்கின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

1. குழந்தைகள் கண்களை கசக்கும் போது ஏற்படக்கூடிய பெரும் ஆபத்து, கண்களில் கையால் கீறி கொள்ளுதல் ஆகும். அதனால் முழுக்கை சட்டையை குழந்தைக்கு அணிவிப்பதன் மூலம் கைகள் கண்களில் படுவதை நம்மால் தவிர்க்க முடிகிறது.

2. உங்கள் குழந்தைகளின் கைகள் கண்களின் அருகாமையில் செல்லும்போது ஏதேனும் விளையாட்டு தனமான செயல்களை செய்து நீங்கள் அவர்கள் கவனத்தை திருப்பலாம்.

3. அதேபோல் குழந்தைகளின் கைகள் கண்களை கசக்க முயலும்போது இனிமையான பாடலை அவர்களுக்கு பரிசாக நீங்கள் போட்டுவிடுவதன் மூலம் கவனத்தை திசை திருப்பலாம்.

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon