இருமல், சளி, தலைவலி தொந்தரவுகளைப் போக்கப் பயன்படும் 5 மூலிகைகளையும் அவற்றின் பயன்களையும் காணலாம்...
1. ஆடாதோடை:

ஆடாதோடை மிளகு சேர்த்து கஷாயமாக்கி அருந்த தொண்டைக்கட்டு தீரும். நல்ல குரல் வளம் உண்டாகும்.
2.நிலவேம்பு:

1. நிலவேம்பு குடிநீர் அருந்த வாத சுரம் குறையும்.
2. சிக்கன் குனியா நோயைத் தொடர்ந்து வரும் மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து.
3.தீராத தலைவலிக்கு அதிமதுரம்:

அதிமதுர சூரணம், சோம்பு சூரணம் இரண்டும் சம பங்கு எடுத்து கலந்து வைத்துக்கொண்டு பாலுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தி வர தீராத தலைவலி தீரும்.
4.தூதுவளை:

இலையை கஷாயமாக்கி அருந்த இருமல், ஆஸ்த்துமா இவைகளுக்கு நன்று.
5.கற்பூரவள்ளி:

இலைச்சாறு, கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு உண்டாகும் இருமலுக்கு கொடுக்கலாம்.
சளித் தொந்தரவுகளுக்கு...
-
துளசி கஷாயம்
-
தூதுவளை சூப், துவையல்
-
ஆடாதோடை கஷாயம்
-
அதிமதுர கஷாயம்
-
சித்திரத்தை கஷாயம்
-
கற்பூரவல்லி வடை
-
முசுமுசுக்கை அடை
-
கல்யாணமுருக்கிலை அடை
-
ஓம கஷாயம்
-
குடிநீரை வெள்ளி மற்றும் செம்பு பாத்திரங்களில் சேமித்து வைத்தல்
