இருமல் மற்றும் சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கு, ஆயுர்வேத வீட்டு மருந்துகள்…

இருமல், சளி தொல்லைகள் சாதாரணமாக குளிர் மற்றும் மழை காலங்களில், குழந்தைகளுக்கு ஏற்படக் கூடியவையே! உங்கள் குழந்தையும் சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதியுறுகிறதா..? கவலை வேண்டாம்..! அவற்றிலிருந்து விடுபட்டு, நலம் பெற, இதோ நம் முன்னோர் அறிமுகப்படுத்திய ஆயுர்வேத பாட்டி வைத்தியம்..!
1.தேன்
மிதமான வெந்நீரில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து, குழந்தைக்குக் கொடுத்தால், அது உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தி, சளித் தொல்லையை அறவே நீக்கிவிடும். இம்முறை ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கே பொருந்தும்.
2.இஞ்சி
“இருமலை இல்லாமல் ஆக்கிடும் இஞ்சி”. கொதிக்கும் நீரில், சிறிதளவு இஞ்சியை சேர்க்க வேண்டும்; நீர் கொதிநிலையை அடைந்தபின், ஒரு தேக்கரண்டி தேனை அதனுடன் சேர்த்து, மிதமான சூட்டை அடைந்தவுடன், குழந்தைக்குக் கொடுக்கவும்.
3.உப்புச் சொட்டுகள்
குழந்தையின் மூச்சுப் பாதையை சரி செய்ய உதவுகிறது, ஒரு கப் தண்ணீரில், சேர்க்கப்படும் 1/4 தேக்கரண்டி உப்பு. இந்த உப்புத் துளிகளை, பல்ப் சிரஞ்ச் மூலம் நாசியின் ஒரு துவாரம் வழி அளித்தால், மற்றோரு துவாரம் வழியே சளி வெளியேறிவிடும். ஒரு நாளைக்கு 4 முறை மட்டுமே இதைக் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.
4.மேஜிக் மருந்து - 1

2-3 கிராம்பு சேர்த்த பூண்டு விழுதை, நீருடன் சேர்த்து கொதிநீராக்கி, பின் குளிர வைக்கவும். இந்நீருடன் தேன், சிறிதளவு மிளகாய்த்தூள், சில லெமன் துளிகள் கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தைக்குத் தரலாம். இது சளி, இருமலை இருந்த இடம் தெரியாமல் மாயமாக்கும்.
5.மேஜிக் மருந்து - 2

மஞ்சள் தூள் சிறிதளவை, நீருடன் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். பின் சிறிதளவு வெல்லம் (அல்லது ½ தேக்கரண்டி நெய்), கொஞ்சம் உப்பு சேர்க்கவும். இந்த ஆயுர்வேத மருந்து, குழந்தையின் இருமலை, இலகுவாக போக்கும்; இதிலுள்ள மஞ்சள் நோய்த் தொற்றுடன் போராடி, வீக்கங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அவற்றை நீக்கும்
6.கெமோமில் தேயிலை

கெமோமில் தேநீர் பையை, 10 நிமிடங்கள் வரை பயன்படுத்தி, மிதமான கெமோமில் தேநீரை, தயாரிக்கவும். இதை 6 மாத வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கலாம். இது தொண்டை சார்ந்த தொற்றினை நீக்கும்.
இருமல், சளித் தொல்லையால் துன்பப்பட்டு, தூக்கத்தைத் தொலைக்கும் குழந்தைகளுக்கு, அல்லோபதி மருந்துகள் அளித்து ஆயுளைக் குறைக்காது, செலவின்றி வரவாக அமையும் ஆயுர்வேத வீட்டு மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.
