Link copied!
Sign in / Sign up
4
Shares

இரட்டைக் குழந்தை பெரும் வாய்ப்பை அதிகரிக்க உதவும் 5 வழிகள்..!

இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை சில பெண்கள் அல்லது ஆண்களின் மனதில் ஏற்படலாம். ஆனால், இரட்டைக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பேறு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே இரட்டையர்களின் தாய் தந்தையாகிறார்கள். இப்படி இரட்டையரை பெற்றுக் கொள்ள எண்ணி ஏங்கித் தவிக்கும் பெண்களுக்கான பதிப்பு..! என்ன செய்தால் இரட்டையரை வாரிசாக பெறலாம் என்பதை பதிப்பினை படித்து அறியுங்கள்..

1. குடும்ப பின்னணி..

குடும்பத்தில் ஏதேனும் தலைமுறையில் யாருக்கேனும் இரட்டையர் பிறந்திருந்தால், உங்களுக்கும் இரட்டையர் பிறக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் கருவுறுதலில் குடும்பத்தின் மரபணுக்கள் கடத்தப்பட்டே கருவானது உருவாகிறது. எனவே, இரட்டையரை பெற குடும்பப் பின்னணி ஒரு காரணமாக அமைகிறது.

2. உணவுகள்..!

கர்ப்பகாலத்தில் நீங்கள் உண்ணும் உணவுகளும் இரட்டையர் பிறப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. மேற்கூறிய குடும்பப் பின்னணி ஏதும் இல்லாமலே, இரட்டையரை பெற்றுக் கொண்டவர்களும் உண்டு. இந்த மாதிரியான விஷயத்தில், கர்ப்பிணிகள் உட்கொள்ளும் உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

3. மாத்திரைகள்..!

நீங்கள் கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் மூலமாகவும், இரட்டையர் கருத்தரிப்பு உண்டாகலாம்.. போலிக் அமிலம் நிறைந்த உணவுகளையும், மருந்து, மாத்திரைகளையும் உட்கொண்டால், இரட்டையர் பிறப்பு ஏற்படலாம்.

4. பால் பொருட்கள்..

பால் மற்றும் பாலில் தயாரித்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், இரட்டையர் கருத்தரிப்பு நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன. பால் பொருட்கள் ஹார்மோன்களை தூண்டி, நல்ல வளர்சிதை மாற்றங்களை ஏற்படுத்துவதால், அதிக பால் பொருட்கள் உட்கொள்ளுங்கள்..

5. வேரில் உருவானவை..

வேரில் உருவான காய்கறி மற்றும் கிழங்கு வகைகளை, அதாவது கேரட், உருளை போன்ற காய்கறிகளை உட்கொண்டால், இவை இரட்டையர் பிறப்பு நிகழ காரணமாகலாம். இவற்றில் உள்ள சத்துக்கள் கருவுறுதலை தூண்டக் கூடியவையாக உள்ளன..

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon