Link copied!
Sign in / Sign up
4
Shares

இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் 5 உணவுகள்..!

நல்ல ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ சரியான டயட் மிகவும் அவசியமானது; அதிலும் இன்றைய காலத்தில் பலரும் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனையால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் உணவு தான்; உண்ணும் உணவு சரியானதாக இருந்தால், எந்தவொரு நோயும் உடலைத் தாக்காது.    

கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த ஜங்க் - துரித உணவுகளைக் கொண்ட உணவுகளை உண்பதால், இம்மாதிரியான சூழலில் வாழ்வதால், நம்மை அறியாமலேயே நாம் கொழுப்புக்கள் அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேரிடுகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 

ஆகவே, இந்த பதிப்பில் நம் இரத்தத்திலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவும் 5 உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, இவ்வுணவுகளை உணவில் சேர்த்து அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...!

ஆலிவ் எண்ணெய் 

உங்கள் உணவில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து வந்தால், அதிலுள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலவைகள், இரத்தத்திலுள்ள அதிகப்படியான கொழுப்பு சத்துக்களை குறைக்கும். எனவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், சமையலில் ஆலிவ்எண்ணெயைப் பயன்படுத்தி, உண்டால் உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பருப்புகள் 

பருப்பு மற்றும் கடலை வகைகளான வால்நட்ஸ், பாதாம் போன்றவை இதய நோயின் தாக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்கும். ஏனெனில் இவற்றில் உள்ள நல்ல கொழுப்பு, உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்துவிடும்; ஆனால் இந்த பருப்புகளை உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது தான் நல்லது.

மீன்

மீன்களை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதிலுள்ள அதிகப்படியான ஒமேகா-3 கொழுப்பு அமிலம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்தம் உறையும் வாய்ப்பைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுத்தும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மேலும் இது இரத்த ஓட்டத்தில் கொழுப்பு உறிஞ்சப்படுவதையும் குறைக்கும். எனவே கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள், ஓட்ஸை அன்றாடம் உட்கொண்டு வருவது நல்லது.

பூண்டு

தினமும் 2 பல் பூண்டை பச்சையாக காலையில், வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைவதைக் காணலாம். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon