Link copied!
Sign in / Sign up
4
Shares

இரண்டாவது பிரசவம் கடினமாக இருப்பதற்கான 5 காரணங்கள்

கர்ப்பம் என்பது எளிதான விஷயமல்ல. ஒன்பது மாதங்களுக்கு உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும், நீங்கள் பல வலிகளை சந்திக்க நேரிடும். இதன் முடிவு மகிழ்ச்சியானதாக இருந்தாலும், இந்த 9 மாதங்களில் பெண்கள் உடல்ரீதியாக பல பிரச்சனைகளை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். என்ன தான் முதல் பிரசவம் கடினமாக இருந்தாலும், இரண்டாவது பிரசவம் தான் இன்னும் கடினமாக இருக்கும். ஏனென்றால் அதன் கஷ்டங்களை நீங்கள் முதல் பிரசவத்திலேயே தெரிந்து  கொண்டிருப்பீர்கள். இங்கே, அதற்கான 5 காரணங்களை பார்க்கலாம்.

1 குறைவான ஆதரவு

உங்களின் முதல் கர்ப்பத்தின் போது, உங்களை சுற்றி உள்ள அனைவருமே, உங்களுக்காக இடத்தையும் நேரத்தையும் ஒதுக்குவார்கள். ஏனென்றால், அது உங்களின் முதல் அனுபவம் அல்லவா. ஆனால் இப்போது நீங்கள் அதை ஏற்கனவே சந்தித்தவர். எனவே, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் ஆதரவு இருந்தாலும் பல வேலைகளை நீங்கள் தான் செய்தாக வேண்டும்.

2 பிரசவம் குறித்த கனவுகள்

நீங்கள் பெற்றோர் ஆவதற்கு முன், குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என பல கனவுகளை கண்டிருப்பீர்கள். உங்கள் குழந்தையை எப்படி தூக்க வேண்டும், அணைக்க வேண்டும், உச்சி முகர வேண்டும் என்றெல்லாம் நினைத்திருப்பீர்கள். ஆனால் இப்போதோ, அதையெல்லாம் பார்த்துவிட்டதால், இது போன்ற ஆசைகள் பெரும்பாலும் தோன்றாது.

3 மதிய தூக்கம்

நீங்கள் முதல் முறை கர்ப்பம் ஆன பொழுது, அவ்வப்போது மதிய நேரங்களில் ஒரு குட்டி தூக்கம் போடுவதுண்டு. ஆனால் இந்த முறை அது நடக்காது. ஏனெனில், இப்போது வீட்டில் இன்னொரு குழந்தையும் இருக்கும் என்பதால் அதை கவனிக்க உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். அப்படி இல்லையென்றால் அந்த குழந்தை உங்களை தூங்க விடாது. எனவே, மதிய தூக்கம் பறிபோகும்.

4 கர்ப்பகால நோய்கள்

முதல் கர்ப்பத்தின் போது நீங்கள் சந்தித்த உடல் உபாதைகள், இரண்டாவது கர்ப்பத்தில் இன்னும் மோசமாகலாம். காலையில் ஏற்படும் தலைசுற்றல் மற்றும் வாந்தி ஆகியவை இரண்டாவது கர்ப்பத்தில் இன்னும் அதிகமாகலாம். இந்த சமயத்தில் உங்கள் முதல் குழந்தையையும் ஒதுக்கிவிட முடியாது. உங்கள் முதல் குழந்தையையும் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5 முதல் குழந்தையுடன் மருத்துவ பரிசோதனை

கர்ப்பகாலத்தில், உடல் பரிசோதனைக்காக நீங்கள் மருத்துவரை அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். உடலில் அல்லது குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சரி செய்துவிடலாம் என்பதால் தான். இதுவே உங்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் இத்துடன் நின்றுவிடாது. இவற்றுடன் உங்கள் முதல் குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கும் செல்ல வேண்டும், குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு புரிகிறதல்லவா?

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon