Link copied!
Sign in / Sign up
0
Shares

இரண்டாவது 3 மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இரண்டாவது 3 மாதம் ஆரம்பிக்கும் போது உங்கள் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், காலையில் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை இனி ஏற்படாது. இந்த மூன்று மாதங்களில் உங்கள் குழந்தையும் அதிவிரைவாக வளரும். குழந்தையின் அசைவுகளை உங்களால் உணர முடியும். உங்கள் குரலை உங்கள் குழந்தையால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதற்கு ஏற்றார் போல் அசைவுகளும் இருக்கும். உங்களின் கர்ப்பம் வெளியே தெரிய ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் தான் பலரும் நீங்கள் இரண்டு பேருக்காக சாப்பிட வேண்டும் என்று அறிவுரை கூறுவார்கள்.

அதே சமயம் மற்ற நாட்களை காட்டிலும் இப்போது தான் உங்களுக்கு அதிகமாக பசிக்கும். எனவே, அவர்களின் அறிவுரையை உண்மை என்று நம்புவீர்கள். ஆனால், நிஜத்தில் உங்கள் குழந்தைக்கு, நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவிலிருந்து கூடுதலாக 250-300 கலோரிகள் மட்டுமே தேவைப்படும். எனவே, அதிகமாக சாப்பிடுவதை விட, ஆரோக்கியமாக சாப்பிடுவது மிகவும் முக்கியம். குறிப்பாக, அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும். கீழ்கண்ட உணவுகளை இரண்டாவது 3 மாதத்தில் தவிர்ப்பது நல்லது.

1 பிரட் மற்றும் சாதம்

பிரட் மற்றும் சாதம் சாப்பிடுவதால், உங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். இதனால் குழந்தை கொழு கொழுவென்று பிறக்கும். ஆனால் அதே சமயம், குழந்தை வளர வளர குண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதே அளவு கலோரிகள் உள்ள ஆரோக்கியமான வேறு உணவுகளை நீங்கள் சாப்பிட்டால், குழந்தைக்கு பிறக்கும் போது குறைந்த அளவு கொழுப்பே இருக்கும். அதனால் அவர்கள் வளர வளர குண்டாவதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே, இந்த உணவுகளை தவிர்த்து முழு கோதுமை பிரட், பழுப்பு அரிசி சாதம், ஓட்ஸ் ஆகியவற்றை சாப்பிடலாம்.

2 மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகள்

இரண்டாவது 3 மாதத்தில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். இதனால் நீங்கள் அசௌகரியமாக உணருவீர்கள். ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிடுவதால், மலச்சிக்கல் ஏற்படுவதாக உணர்ந்தால், அந்த உணவை தவிர்த்திடுங்கள். அதற்கு பதிலாக நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் அருந்துங்கள். இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது குறையும்.

3 மது

மதுவினால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைவரும் அறிந்ததே. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மது அருந்தவே கூடாது.

4 செயற்கை சுவையூட்டிகள்

ஆய்வுகளில் இது குழந்தைக்கு தீங்கிழைக்கும் என்று நிரூபிக்கபடவில்லை என்றாலும், கர்ப்பமான பெண்கள் செயற்கை சுவையூட்டிகளை தவிர்ப்பது அல்லது அதை சாப்பிடுவதை குறைப்பது நல்லது. ஏனெனில், அதில் கலக்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியாது.

5 சக்கரை

அதிகளவு சக்கரை சாப்பிட்டால், அது உடல் எடையை அதிகரிக்கும். கர்ப்பகாலத்தில் உடல் எடையை குறைக்க கூடாது. அதே சமயம் தேவையில்லாமல் அதிகளவு எடையை கூட்டுவது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல. எனவே, சக்கரையை குறைந்த அளவே எடுத்துக்கொள்ளுங்கள்.

6 காஃபின்

நீங்கள் காஃபின் சேர்க்கப்பட்டிருக்கும் காபி, தேநீர் போன்ற பானங்களை அதிகளவு பருகுவீர்கள் என்றால், இந்த நேரத்தில் அதை குடிக்கும் அளவை நிச்சயமாக குறைக்க வேண்டும். அதாவது ஒருநாளைக்கு சுமார் 350மி.லி; 1 1/2 கப் காபி குடிக்கலாம்.

7 காரசாரமான உணவுகள்

நீங்கள் ஒரு நாளைக்கு பல முறை சிறிது சிறிதாக சாப்பிட வேண்டும். அதே சமயம் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். மிகவும் காரசாரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். நொறுக்குத்தீனிகளை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் மற்றும் பழச்சாறுகளை உண்ணலாம்.

8 சரியாக வேகாத இறைச்சி

இந்த மாதிரியான உணவுகளை நீங்கள் கர்ப்பகாலத்தில் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon