Link copied!
Sign in / Sign up
0
Shares

இரண்டாவது முறை கர்ப்பத்தில் எடை கூடுவது எதனால்? தடுப்பது எப்படி?

நீங்கள் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறீர்களா? உங்கள் எடை முதல் பிரசவத்தை காட்டிலும் அதிகரித்ததை உணர்ந்தீர்களா? எதனால் இரண்டாவது பிரசவத்தில் மட்டும் எடை கூடுகிறது? இதை நம்மால் தடுக்க முடியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

எப்போதுமே இரண்டாவது பிரசவம் என்பது முதல் பிரசவத்தை விட வித்தியாசமானதே. அவற்றுள் கண்களால் காணும் ஒரு வித்தியாசம் என்னவெனில் உடல் எடை அதிகரிப்பு. எதனால் இந்த எடை உயர்கிறது?

காரணம் #1

உங்களுக்கு முதல் குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களில் மீண்டும் கர்ப்பமாக இருப்பீர்கள் எனில்... முதல் பிரசவத்தில் அதிகரித்த எடை என்பது குறையும் முன்னே மீண்டும் எடை கூடுகிறது. இதனால் உடல் பருமனுடன் காணப்படும்.

காரணம் #2

ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உடல் எடை அதிகரிக்கும். கர்ப்பக்காலத்தில் ஹார்மோன் மற்றும் வளர்சிதையில் மாற்றம் என்பது காணப்படுகிறது. முதல் பிரசவத்தில் ஏற்கனவே பல மாறுதல்களை சந்தித்த உங்கள் உடலில் அதே மாற்றங்கள் மீண்டும் ஏற்படுகிறது.

காரணம் #3

முதல் பிரசவத்தின் போது உங்கள் பிறப்புறுப்பு விரிவடைந்து மீண்டும் இயல்பு நிலையை அடையாமல் இருக்கும். அப்போது மீண்டும் கர்ப்பமாக இருக்க, இதனால் உங்கள் தொப்பை மிக வேகமாக வளர்ந்து இரண்டாவது பிரசவத்திற்கும் தயாராகிறது.

காரணம் #4

கர்ப்பிணிகளின் வயிற்று தசைகள் விரிவடைய வலுவிழந்தும் காணப்படும். இதனால் இரண்டாவது முறை கருவில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு போதிய வசதி என்பது குறைவாக கிடைக்கிறது. இதனால் கரு வயிற்றின் கீழ்புறத்தை அடைகிறது.

உங்கள் குழந்தை வயிற்றின் கீழ் பகுதியை அடைவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க உங்களுக்கு தோணும். உங்களுடைய இடுப்பு மற்றும் சிறுநீர்ப்பையில் உயர் இரத்த அழுத்தத்தை உணரவும்கூடும். 

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

1. உங்கள் பசியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, ஆரோக்கியமற்ற உணவை தவிர்க்கவும் வேண்டும். முடிந்தளவு வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

2. மருத்துவரின் பரிந்துரையுடன் உடற்பயிற்சிகள் செய்யலாம். நீங்கள் மிகவும் அசதியாக காணப்பட்டால் மெல்ல நடைப்பயணம் செல்வது நல்லது.

3. கனமான பொருட்களை தூக்க கீழே குனிவதை தவிர்த்திடுங்கள்.

4. தூங்கும்போது இடப்பக்கம் தூங்க முயல, தலையணையை உங்கள் கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டும் தூங்கலாம்.

இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உடல் எடை அதிகம் காணப்படுவது வழக்கம் தான். இருப்பினும், ஏதேனும் உடல்நல குறைவு என்பது உங்களுக்கு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டியது மிக அவசியம். நீங்களும் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தபோது உடல் எடை அதிகம் காணப்பட்டிருக்கக்கூடும். அப்படி எனில்...உங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளலாமே...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon