Link copied!
Sign in / Sign up
6
Shares

இரண்டாவது குழந்தை வேண்டுமா? இதெல்லாம் கவனித்தீர்களா?

குழந்தையும் தெய்வமும் ஒன்று என ஏன் கூறினார்கள்? இரண்டுமே மனது வைத்தால் தான் வீடு அழகாகும் என்பதற்காகவா? இருக்கலாம் அல்லவா? அப்படிப்பட்ட குழந்தைகளால் உங்கள் வீடு அழகாகுமெனில் ஒன்றுக்கு இரண்டு பெற்றுக்கொள்வதில் என்ன தவறு? கண்டிப்பாக எந்த வித தவறுமில்லை. இந்த 10 வழிகளை நீங்கள் பின்பற்றி இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டால்...

1. குற்றவுணர்ச்சி கூடாது:

உங்கள் முதல் குழந்தை மீது பாசம் காட்டி வர, இரண்டாவது குழந்தை உரிய நேரத்திலும் பிறக்கும். உடனே, உங்கள் பாசம் என்பது இரண்டாவது குழந்தை மீது மட்டுமே இருத்தல் கூடாது. இருவரையும் ஒரே மாதிரி வளர்த்தல் வேண்டும். "உன்னை விட தம்பி பாப்பா சின்னவன் அல்லவா?" போன்ற காரணங்களை தவிர்த்திடுங்கள்.

2. வித்தியாசமானது இரண்டாவது பிரசவம்:

ஒரு குழந்தையை பார்த்துக்கொள்வது போல் எளிமையானது தான் இரண்டாவது என்ற எண்ணத்தை மறந்திடுங்கள். ஏனெனில், முதல் குழந்தை பெற்றுக்கொள்வதை விட இரண்டாவது என்பது முற்றிலும் வித்தியாசமானது. முதல் முறை நீங்கள் கொள்ளும் பிரசவ பதட்டம் என்பது இரண்டாவது முறை இருப்பதுமில்லை. 

3. தெளிவான மனநிலை:

முதல் குழந்தை பராமரிப்பது போல் தான் இரண்டாவது குழந்தை என்பதால் எப்போதும் தெளிவான மனநிலையுடன் இருக்க பழகுங்கள். 

4. பிரசவ வேகம்:

முதல் பிரசவத்தை விட இரண்டாவது பிரசவம் என்பது வேகமாக நடக்கும். காரணம், ஹார்மோன்கள் என்பது இந்த முறை தளர்ந்து சரியான நிலையில் இருக்கும். எனினும், பிரசவம் என்பது வலியை தர தயங்குவதில்லை. இரண்டாவது பிரசவம் கொஞ்சம் வேகமாக நடந்து முடிகிறது.

5. நேர நெருக்கடி:

எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்வது கடினம். எனவே, இரண்டாவது பிரசவத்தின் போது எதற்கும் தயாராக இருத்தல் நலம்.

6. ஓய்வு குறைவு:

முதல் குழந்தை பிறந்து அதை வளர்ப்பதை காட்டிலும் இரண்டாவது குழந்தை பிறப்பு என்பது உங்கள் ஓய்வை குறைக்கக்கூடும். அதற்கு ஏற்ப உங்களை தயார்ப்படுத்தி கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம்.

7. சமாதானம் தேவை:

இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் சண்டையை சமாளிக்க போதிய பயிற்சி என்பது உங்களுக்கு தேவை. எடுத்தவுடன் வன்முறையில் இறங்க முயலாதீர்கள்.

8. பயண திட்டம்:

முதல் முறை குழந்தை பிறந்த போது வெளியில் செல்ல கொஞ்சம் அசவுகரியமாக நீங்கள் நினைக்கக்கூடும். அதே இரண்டாவது முறை அந்த அசவுகரிய நிலை ஏற்படுவதில்லை.

9. ஆதரவு:

உங்களுக்கு யாரேனும் ஆதரவு அளிப்பார்கள் எனும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அவரவர்களுக்கு அவரவர் வேலை இருப்பதனால், உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் கவனிக்க வேண்டிய சூழல் அமையும்.

10. ஆடையில் கவனம்:

இரு குழந்தைகளின் ஆடைகளும் நான்கு பக்கத்திலிருந்து வந்து விழுமெனில் என்ன செய்வீர்கள்? அவற்றையெல்லாம் சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் என்பது கண்டிப்பாக வேண்டும். 

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon