Link copied!
Sign in / Sign up
14
Shares

இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் தம்பதியருக்கான அறிவுரை..!

தம்பதியர்களே! கல்யாண ஆனவுடன் சில மாதங்களில் அல்லது ஓரிரு வருடத்திற்குள் ஒரு குழந்தைக்குத் தாய் தந்தையாக வேண்டுமென்ற ஆசை உங்கள் மனதில் இடம் பெரும்; ஒரு குழந்தைக்கு பெற்றோரான பின்னர் சில வருடங்களுக்கு பின் இரண்டாம் குழந்தையை பற்றி மனம் எண்ணத்தொடங்கும்; இந்த எண்ணம், உடலுறவு உணர்வாலோ, குழந்தை மீது கொண்ட பற்றினாலோ அல்லது முதல் குழந்தைக்கு வாழ்வில் ஒரு துணை வேண்டும், ஊராரின் அறிவுரை போன்றவற்றாலோ ஏற்படும்..! 

இந்த வகையில் இரண்டாம் குழந்தையை பெற்றுகொள்ளுமுன் பெற்றோர்கள் சில விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம்..! அவ்விஷயங்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம்..!

1. எதற்கு வேண்டும்?

உங்கள் வாழ்வில் இன்னொரு குழந்தை எதற்கு வேண்டும்? நீங்கள் குழந்தைகளை எதற்காக பெற்றுக்கொள்ள வேண்டும்? போன்ற கேள்விகளை நீங்களே உங்களிடம் கேளுங்கள், அதற்கு உங்கள் மனம் சரியான விடை அளித்தால், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்வதை குறித்த எண்ணங்களை செயலாக மாற்றத் தொடங்குங்கள்..!

2. நிதிநிலைமை..

உங்களது தற்போதைய நிதிநிலைமை என்ன? இன்னொரு குழந்தையை பெற்றுக்கொண்டால், இன்றைய கால சூழலில் உங்களால் குடுமத்தை நடத்த முடியுமா என்பது பற்றியெல்லாம் சிந்தியுங்கள்..

3. முதல் குழந்தை..

இன்னொரு குழந்தையை பெற்றுகொள்ளுமுன், முதல் குழந்தை, அடுத்து வரப்போகும் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆவண செய்யுங்கள்..! இது மிகவும் முக்கியமானது.. அலட்சியம் வேண்டாம்..

4. காலம்..

நீங்கள் எப்பொழுது இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்? உங்கள் வயது என்ன? உங்களால் இரண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி விட முடியுமா? மேலும் குழந்தைகளுக்கிடையே இருக்கப்போகும் கால இடைவெளி என்ன? என்பது பற்றியெல்லாம் நன்கு சிந்தியுங்கள்..

5. எதிர்காலம்..

இன்னொரு குழந்தை வாழ்வில் வந்தபின்னர் முன்பு நடந்த அனைத்து விஷயங்களும் மாறி, அனைத்தும் புதிதாக மாறப்போகிறது என்பதை உணர்தல் வேண்டும்..! உங்கள் எதிர்காலம் ஒன்று இல்லை இரண்டு குழந்தைகளுடன் நகரப்போகிறது என்ற உண்மையை நன்கு எண்ணிப்பார்த்து முடிவெடுங்கள்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon