Link copied!
Sign in / Sign up
3
Shares

இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையும்

காலை உணவை எடுத்துக்கொண்டாலும் சிலருக்கு விரைவில் பசி எடுத்துவிடும். மதிய உணவை உண்ணும் நேரம் வரை நரகமாய் கழியும். அதிலும் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், இந்த தருணம் மிகவும் கொடுமையானதாக இருக்கும். டயட்டில் இருப்பவர்கள் தேவையில்லாத உணவுகளை சாப்பிட்டால் பின்னர் டயட்டில் இருப்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆனால் காலை உணவிற்கு பின் பசியைக் கட்டுப்படுத்தும் சில ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை சாப்பிட்டால் அது சுவையுடன் ஆரோக்கியத்திற்கும் உறுதி அளிக்கும். காலை உணவிற்கு பின் பசிக்கும் போது இங்கே கூறியுள்ள சில வகை நொறுக்குத்தீனிகளை சாப்பிடுங்கள். உங்கள் எடை குறைவதை நீங்களே உணர்வீர்கள்.

1 சீஸ் தடவிய ஆப்பிள்

காலை உணவிற்கு பின் உங்களுக்கு பசி எடுத்தால், சீஸ் தடவிய ஆப்பிள் துண்டுகளை சாப்பிடுவது பசியை எளிதாக கட்டுப்படுத்தும். இதில் நார்ச்சத்துகள் மற்றும் கலோரிள் நிறைந்துள்ளன. இது எடையைக் குறைக்க மற்றும் பசியை கட்டுப்படுத்த விரும்புவர்களுக்கு சிறந்த உணவாகும்.

2 வறுத்த சுண்டல்

இதில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. ஆகவே காலை உணவிற்கு பின் கடுமையான பசியை உணர்ந்தால், இதை சாப்பிடுங்கள்.

3 தயிருடன் ஸ்ட்ராபெர்ரி

தயிரில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்து சாப்பிட, அதில் உள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும்.

4 பிஸ்தா

பிஸ்தாவில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. இது பசியை கட்டுப்படுத்தும். ஆகவே இதை எப்போதும் உங்களுடனேயே வைத்திருங்கள்.

5 முட்டை மற்றும் கோதுமை பிரட்

உணவு எடுத்துகொண்ட பின் உங்களுக்கு பசி எடுக்குமாயின், கோதுமை பிரட்டிற்கு நடுவே அவித்த முட்டையை வைத்து சாண்ட்விச் போன்று சாப்பிடுங்கள். இது மிகச்சிறந்த உணவாக இருக்கும்.

6 பிஸ்கட் மற்றும் பாதாம் வெண்ணெய்

இவற்றில் கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி இவற்றில் புரோட்டீனும் நிறைந்திருப்பதால், காலை நேர ஸ்நாக்ஸாக உட்கொண்டால், பசி கட்டுப்படுவதோடு, எடை அதிகரிப்பதும் தடுக்கப்படும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon