Link copied!
Sign in / Sign up
4
Shares

இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பை தொற்று நோய்கான அபாயம் அதிகம்

கருப்பை பெண்களின் சிறந்த அடையாளம். அதனுள் பல அற்புத மாற்றங்கள் நிகழ்கின்றன. நம் அறிவியலின் வளர்ச்சியால் நாம் பலவற்றை அறிய முடிகிறது. கருப்பையில் பெண்கள் வளர்ச்சி அடைந்த உடன் பல மாற்றங்கள் ஏற்படும். மாதவிடாய் சுழற்சி, கருமுட்டை வெளிப்படுதல், கருத்தரித்தல், குழந்தையை தாங்குதல் என அனைத்து கருப்பையில்  நிகழ்கிறது. 

சில நேரங்களில் ஏற்படும் சிறுநீர் தொற்று, அந்தரங்க உறுப்பு தொற்று போன்றவையும் கருப்பை தொற்றை ஏற்படுத்தும். உடலுறவினாலும் கருப்பை தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கருப்பையின் சுவரில் கிருமிகளால் ஏற்படும் அரிப்பு மற்றும் வீக்கத்தையே கருப்பை தொற்று என்கிறோம். இதையே மருத்துவர்கள் எண்டோமெட்ரிசிஸ் எனக் கூறுகிறார்கள்.

இந்த கர்ப்பப்பை தொற்று அனைத்து பெண்களும் ஏற்படுவதில்லை. பொதுவாக சமீபத்தில் சிசேரியன் செய்த பெண்கள், கருக்கலைப்பு செய்தவர்கள் அல்லது கருச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இந்த கருப்பை தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இங்கு கருப்பை தொற்று நோய்க்கான அபாயம் அதிகம்.

1 பிரசவம்

கருப்பை பிரசவத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பிரசவம் முடிந்த பின் பெண்களுக்கு கருப்பை தொற்றுக்கான அபாயம் இருப்பதாக செல்கிறது ஆராய்ச்சி முடிவுகள். பிரசவத்தின் பின் வலி, சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் கடுமையான காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

2 வீக்கம்

திடீரென வயிற்றில் வீக்கம் ஏற்படுவதோடு, கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தினால் கருப்பை தொற்று இருப்பதற்கான அபாயம் அதிகம்.

3 இரத்தப்போக்கு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவது சாதாரண ஒன்று தான். ஆனால், மாதவிடாய் நாட்களை தவிர மற்ற நாட்களில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருப்பை தொற்றின் காரணமாகவும் இருக்கலாம்.

4 வெள்ளை படுதல்

திருமணத்தின் முன் பெண்களுக்கு வெள்ளை படுதல் சாதாரண ஒன்று. ஆனால், திடீரென அந்தரங்க உறுப்பில் இருந்து வெள்ளை அல்லது மஞ்சள் நிற திரவம் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிப்பட்டால், அது கருப்பை தொற்றுக்கான அறிகுறியாகும்.

5 மலசிக்கல்

கருப்பை தொற்று சில சமயத்தில் செரிமான மண்டலத்தின் சரியான இயக்கத்தை பாதித்து மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

6 குடல் இயக்கம்

நாம் உண்ணும் உணவை செரித்து, கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வே குடல் இயக்கம் எனப்படுகிறது. கழிவுகளை வெளியேற்றும் போது ஏற்படும் அசௌகரியம் மற்றும் கடுமையான வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

 
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon