Link copied!
Sign in / Sign up
10
Shares

இந்த 2 வயது பையனுக்கு நேர்ந்ததை அறிந்தால், பெற்றோர்கள் தூங்கமாட்டார்கள்.!?

தோழியரே! சைனாவில் ஒரு 2 வயது பையனுக்கு தற்செயலாய் நேர்ந்த கொடூர, விசித்திர விபத்தையே இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்..!

சைனாவைச் சேர்ந்த, இரண்டே வயது நிரம்பிய சிறுவனான, சென் சென் (உண்மையான பெயரல்ல) விளையாடிக் கொண்டிருக்கையில், திடீரென கீழே விழ நேர்ந்தது; அதுவும் கீழே இருந்த பிளஃக்கில் விழுந்துவிட்டான். அது எப்படி பிளஃக்கில் போய் விழுந்தான் என்று வினவுகிறீர்களா? அக்குழந்தை தன் பெற்றோருடன் புதிதாக ஒரு இல்லத்திற்கு குடியேற வந்திருந்தான். புது வீட்டில் நுழைந்த உற்சாகத்தில், அவன் கீழே கிடைக்கும் பொருட்களை பாராது இங்குமங்கும் ஓடி விளையாடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்த விபரீதம் நேர்ந்துவிட்டது. 

குழந்தையின் நிலையை உணர்ந்த பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்; குழந்தையின் நிலையைக் கண்ட மருத்துவர்கள் அவசர கதியில் சிகிச்சையை தொடங்கி, 3 மணி நேரம் வரை சிகிச்சை அளித்தனர். 3 மணி நேர சிகிச்சைக்குப் பின்னரே, அந்த சிறுவனின் தலையிலிருந்து பிளஃக் நீக்கப்பட்டு, அவன் காப்பாற்றப்பட்டான்..! இந்த குழந்தைக்கு விளையாடுகையில் நேர்ந்த கதியை பார்த்தீர்களா, தோழியரே! உங்கள் குழந்தை விளையாடுகையிலும், அவர்களை கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்..!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon