Link copied!
Sign in / Sign up
0
Shares

இந்தத் தாயின் மனதைரியம் மற்றும் அறிவுக்கூர்மை பற்றி அறிவீரா?

நிகோலியா மற்றும் ஸ்டீவ் எனும் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு..! அவர்கள் தங்களுக்கு என இன்னொரு குழந்தை வேண்டும் என முடிவு செய்து மீண்டும் கருத்தரித்தார் நிகோலியா. அனைத்து விஷயங்களும் சாதாரணமாகவே சென்று கொண்டிருந்தது; பிரசவ சமயம் நெருங்குகையில் குறித்த நேரத்திற்கு முன்னதாவே அதாவது குறித்த மாதத்திற்கு முன்னதாகவே, நிகோலியாவிற்கு குழந்தை பிறந்துவிட்டது. 

இவ்வாறு இரண்டாம் பிரசவம் குறைப்பிரசவமாக நிகழ்ந்ததால், தம்பதியர் சற்று மனக்கலக்கம் அடைந்தனர்; அதிலும் குழந்தையின் முக்கிய பாகங்கள் சரியான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை..! குழந்தைக்கு மூச்சுக்குழல் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் சரியான வளர்ச்சி அடையவில்லை..! குழந்தை பிறந்த 5 வாரத்தில் அதன் மூச்சுக்குழலில் சளி நன்கு அடைத்துக் கொண்டு, அக்குழந்தைக்கு பிராண சங்கடத்தை விளைவித்தது; பயந்து போன தம்பதியர் மருத்துவர்களிடம் உதவி கேட்டு அவர்கள் சொல்படி நடந்து கொண்டனர். 

 

ஒரு கட்டத்தில் மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்ற இயலாது என கைவிரித்து சூழலில், நிகோலியா நம்பிக்கை இழக்காமல், என் குழந்தை கட்டாயம் பிழைக்கும் என்று உறுதி கொண்டு, குழந்தையை மீட்க என்ன வழி என்று மருத்துவ அறிவுரை மற்றும் தானாக இணையதள, புத்தகங்கள் வாயிலாக கற்று, அபாயக்கட்டத்தில் இருந்த குழந்தையை காப்பாற்றி விட்டார். குழந்தைக்கு இன்னும் மூச்சுக்குழல் தொடர்ந்த பிரச்சனை உள்ளது; ஆனால், குழந்தையின் உயிருக்கு அபாயம் ஏற்படாத நிலைக்கு, அத்தாயின் மனதைரியம் மற்றும் நம்பிக்கை குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிவிட்டது..!!

நிகோலியாவிற்கு குடும்பம் முழுமையான அன்பையும் ஆதரிப்பையும் நல்கியது; அதனால், அவரால் தன் குழந்தையை காப்பாற்றவும் முடிந்தது..! ஆனால், நம் நாட்டில் இப்படி ஒரு நிலைமை ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால், அக்குழந்தை பற்றி, அதன் பெற்றோரை பற்றி புறம் பேசியே, அவர்களின் மனதைரியத்தைக் குழைத்து ஒரு வழியாக்கி விடுவோம்..! இந்த மாதிரியான நமது நடவடிக்கைளை தவிர்த்து, அயல்நாட்டரிடம் இருந்து, அவர்களின் இம்மாதிரியான நற்குணங்களை நாமும் கற்றுக்கொள்ளலாம்..! 

 

 

 

போற்றுவோம் தாய்மையை! பாராட்டுவோம் இந்த தாயின் மன உறுதியை..!! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon