Link copied!
Sign in / Sign up
20
Shares

இந்த வருடத்தின் முதல் 10 குழந்தை பெயர்கள்


இந்த உலகில் ஒருவர் பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள், வீடு, மனைவி, பிள்ளை எது வேண்டுமானாலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெயர் இல்லாமல் ஒருவர் இருப்பார் என்பது சாத்தியமில்லை. ஏனெனில், பெயர் என்பது ஒருவரின் அடையாளம்.  பத்து நபர்கள் இருக்கும் இடத்தில் ஒருவரைச்  சுட்டிக் காட்டுவது அவரின் பெயர். அப்படித் தங்கள் குழந்தையின் அடையாளமான பெயரை, குழந்தை உருவான நாள் முதலே பெற்றோர் தேடத் துவங்கிவிடுகிறார்கள். குழந்தைப் பிறந்தவுடன் அது துரிதப்படுத்தப்படுகிறது. அவர்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க ஜோதிடர்கள், சாமியார்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அணுகுகிறார்கள். சிலர் புத்தகங்களைக் கூட வாங்குகிறார்கள். என்னதான் தேடினாலும் இறுதியில் அவர்கள் வருவது என்னவோ இணையத்தளத்திற்குத்தான். அங்கும் ஆயிரம் ஆயிரமாய் தளங்கள் குழந்தைகளின் பெயர்களோடு இருக்கும். ஆனால் அதில் எதை தெரிவு செய்வது எனும் போது எது மிகச் சிறந்ததோ அதையே நாம் தேர்வு செய்வோம். அப்படி தான் இந்த வருடத்தின் சிறந்த 10 பெயர்களாக முதல் 10 இடத்தில் உள்ள 5 ஆண் பெயர்களையும், 5 பெண் பெயர்களையும் பார்ப்போம்.

முதலில் பெண் குழந்தைகளின் பெயர்களும் அதன் அர்த்தங்களும்:

1 ஆபா : இது பெற்றோர் தங்கள் குட்டி இளவரசிக்கு வைக்க மிக சிறந்த பிரபலமான பெயர்.  ஆபா என்பது சமஸ்கிருத சொல். இதன் பொருள் பிரகாசிப்பது என்பதாகும். இது தங்களது குழந்தைக்கு பெற்றோர்களால் விரும்பி வைக்கப்படும் பெயர்களுள் ஒன்று.

 2 ஆக்ஷிதா : இதன் பொருள் " எவற்றாலும் எப்பொழுதும் மாற்ற முடியாதது"  அல்லது " நிரந்திரமானது" என்பதாகும். நேரமும், நாட்களும் ஓடிக்கொண்டிருந்தாலும், அன்பு ஒன்று மட்டும் எப்போதும் மாறாமல் ஒருவர் அந்த குழந்தையை நேசிப்பார்.

 3 சான்வி : பொன்னையும், பொருளையும் அள்ளி தரும் கடவுள் லட்சுமியின் மறுபெயர். அழகு, கருணை, செல்வம் மற்றும் பல பெண்ணியல் பண்புகளை குறிக்கிறது. தங்கள் குழந்தைக்கு நவீனமாகவும், தெய்வீகமாகவும் பெயர் சூட்ட விரும்புவோர் இதை தெரிவு செய்யலாம்.

 4 மைரா : இது ஒரு ஆங்கில பெயர் அதிக அளவில் பெற்றோர்களால் தேர்வு செய்யப்படும் பெயர்களுள் ஒன்று. உண்மையில் மைரா எனும் சொல் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது. மயக்கக்கூடிய, போற்றி புகழ கூடிய மற்றும் அசாதார என்று பொருள்.

 5 கிய்ரா : இது மேலைநாட்டு பிரபலமான பெயர்களுள் ஒன்று. பல இந்தியர்கள் பெயரும் கூட தான். இதன் பொருள் கருமையான முடி கொண்டவள் என்று பொருள்.

மேற்கண்ட பெயர்கள் பெற்றோர்களால்  வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான பிரபலமான பெயர்களாகும்.

இப்பொழுது ஆண் குழந்தைகளுக்கான 5 பெயர்கள்:

1 ஆரவ் : இது ஆண் குழந்தைகளுக்கான பிரபலமான பெயர். இதன் பொருள் அமைதியானவன் மற்றும் அறிவானவன் என்பதாகும். இந்த பெயர் மிகவும் நவீனமாகவும், அழகான அர்த்தத்துடனும் இருப்பதால் பெற்றோர்களால் தங்கள் குழந்தைக்கு விரும்பி தேர்ந்தெடுக்கப்படுகிறது.

 2 விவான் : இதற்கு சூரியனின் முதல் ஒளி என்பது பொருள். அது மட்டுமின்றி எண்ணிலாப் பெயர் கொண்ட கிருஷ்ணா பரமாத்மாவின் பெயர்களுள் ஒன்று. இது அழகிய உச்சரிப்புடன் தனித்தன்மை பெற்றிருக்கிறது.

 3  முஹம்மது : இது பல வடிவங்களில் எழுதப்படுகிறது மற்றும் பெற்றோர்களால் தான் குழந்தைக்குச் சுட்டப்படுகிறது. பரிசளிப்பது என்பது இதன் பொருள். மிகவும் முஸ்லீம் பெற்றோர்களால் வைக்கப்படும் பெயர்களுள் ஒன்று.

 4 அதர்வ் : தங்களின் குழந்தைக்கு நவீனமாகவும், தெய்வீகமாகவும் பெயர் சூட்ட எனும் பெற்றோர்க்கு இது சிறந்த பெயர்.அதர்வ் என்பது வேதங்களை முதல் வேதம் மற்றும் விநாயகரின் மற்றோர் பெயர் ஆகும்.

 5 ருத்ர : ருத்ர என்பது சிவ பெருமானின் புராணப் பெயர்களில் ஒன்று. இதற்கு வலிகளை நீக்குபவன் என்று பொருள். இது இந்தியா பெற்றோர்களால் மிகவும் விரும்பி வைக்கப்படும் பிரபலமான பெயர்களுள் ஒன்று

 ஒருவரின் அடையாளமாக விளங்கும் பெயரை குழந்தைகளுக்கு தேர்வு செய்யும் பொழுதே அர்த்தம் உள்ளதாக தேர்வுசெய்து அவர்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவோமாக!

 

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon