Link copied!
Sign in / Sign up
0
Shares

இந்த தாயின் வாழ்வில் நிகழ்ந்த சோகம் கலந்த அதிசயம் பற்றி நீங்கள் அறிவீரா?

பெண்கள் கர்ப்பம் அடைவது என்பது ஒரு அழகான அதிசயமான விஷயமே! அப்படி பெண்கள் கர்ப்பமடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது மறுபிறவி எடுப்பதற்கு சமம் என்று கூறுவர், ஏனென்று தெரியுமா? பிரசவத்திற்கு பின், தாயும் சேயும் எவ்வித பாதிப்புமின்றி நலமுடன் இருக்க வேண்டும்; பிரசவ சமயத்தில் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் ஆகிவிடின் அவர்களின் மீது அன்பு கொண்டவர்களின் வாழ்வு முடிவதற்கு இந்நிகழ்வு காரணமாகலாம் அல்லது மீதியுள்ள வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். பிரசவம் என்பது வாழ்வா? சாவா? என்ற போராட்டமே!

இப்படிப்பட்ட நிலையில், நமது அண்டை நாட்டில் ஜெர்மன் பிரையன்ட் என்ற பெண்மணிக்கு பிரசவத்தில் ஒரு மிகப்பெரிய சோகம் கலந்த அற்புதம் நிகழ்ந்தது, அதைப்பற்றியே நாம் இங்கு படித்தறியப்போகிறோம்..!

ஜெர்மன் பிரையன்ட், இரட்டையரைத் தன்னுள் சுமந்து கர்ப்பம் தரிந்திருந்தார்; அதில் ஒரு ஆண் கரு, மற்றோன்று பெண் கரு. திடீரென அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பிரையன்ட் தனது 21வது வாரத்தில் மருத்துவமனையில் சேர்ந்தார்; அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் "பிரையன்ட் உங்கள் இரு குழந்தைகளில் ஆண் கரு வயிற்றிலேயே இறந்துவிட்டது; மேலும் உங்கள் பெண் கருவும் அபாயகரமான நிலையில் உள்ளது. உங்களின் பெண் குழந்தையை அடுத்த 17வது நாள் வயிற்றிலிருந்து வெளியே எடுத்தாக வேண்டும்; அக்குழந்தையின் பிறப்பு விகிதமும் குறைவே" என்று கூறிவிட்டனர்..!

இந்த செய்தியைக் கேட்ட பிரையன்ட், அடுத்த வந்த 17 நாட்களையும் அந்நாட்களின் ஒவ்வொரு மணியையும், நிமிடத்தியும், நொடியையும் ஒரு யுகமாக கழித்தார். இதில் தன் ஆண் மகவினை இழந்த சோகம் வேறு அத்தாயின் மனதை ஆட்கொண்டு, வருத்தி எடுத்து. 16 நாட்கள் மனப்போராட்டத்திற்கு பின், தன் குழந்தையை காணப்போகும் அந்த நாள் வந்தது; மருத்துவர்கள் அனைவரும் தாயையும் சேயையும் காப்பாற்றும் நோக்கில், அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, பலமணி நேரங்கள் போராட்டத்திற்கு பின் பிரையன்ட்டின் அழகு தேவைதையை பூமிக்கு நலத்துடன் கொண்டு வந்து சேர்த்தனர். 

தன் அழகு செல்லத்தை பார்த்த பிரையன்ட், "நான் என் மகனை இழந்தது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது; ஆனால், என்னுடைய சோகத்தை தூர விரட்டும் அற்புத தேவதையாக என் மகள் பிறந்துவிட்டாள்; இவளை பத்திரமாக பாதுகாத்து, பாசமாக வளர்த்து அவளை வாழ்வின் உயரங்கள் அனைத்தையும் எட்டச் செய்வேன்" என்று கூறியுள்ளார்.

இந்த தாயின் மனோரதங்கள் அனைத்தும் நல்லமுறையில் நிறைவேற நம் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து, மற்றோரும் இத்தாய்க்கு ஆசி வழங்க இப்பதிப்பை நம்மால் இயன்றவரை பரப்புவோமாக..!

உங்கள் அபிமான Tinystep, உங்கள் மற்றும் தங்களது குழந்தை, இல்லம் என அனைத்தையும் நோய்களை உண்டாக்கி பரப்பும் நோய்கிருமிகளிமிருந்து காப்பாற்ற முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு இயற்கை முறை தரை சுத்தப்படுதியை (Natural Floor Cleaner) அறிமுகப்படுத்தியுள்ளது..! முதல் அடியாக பெங்களூர் அன்னைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பெங்களூர் அன்னைகளே! எங்களின் இந்த தயாரிப்பை வாங்க இங்கே கிளிக் செய்யவும்..! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon