Link copied!
Sign in / Sign up
1
Shares

இந்த கோடை விடுமுறையில், தம்பதியர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 5 செயல்கள்..!

திருமணமான தம்பதியர்கள், குடும்பம், வேலை, உறவுகள் என தங்கள் இருவருக்குமிடையேயான தனிப்பட்ட நேரத்தை மறந்து அன்றாட வாழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்; இதனால், தம்பதியரிடையே ஒரு சிறு இடைவெளி உருவாகலாம். தம்பதியருக்கிடையே ஏற்படும் இந்த இடைவெளியைக் குறைக்க தம்பதியர்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என அன்றாட வாழ்வில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்று வர வேண்டும். அப்படி செல்வதால், தம்பதியரின் அன்பு புத்துயிர் பெற்று, காதல் மலரும்.

ஆகையால், இந்த வருட கோடைகால விடுமுறையில் தம்பதியர்கள் கட்டாயம் சென்று, கண்டு மகிழ வேண்டிய இடங்கள் குறித்து இந்த பதிப்பில் படித்தறிவோம்..!!

1. Rang - ராங்

இது ஒரு இசைத்திருவிழா. தம்பதியர்களுக்கு இசையில் கொள்ளை விருப்பம் எனில், இசை மழையில் நனைந்து மகிழ ஏற்ற இடம். இது மது அருந்தி நடனமாட மிகச்சிறந்த நிகழ்வு. ரெயின் நடனம் போன்ற பலவகை நடன நிகழ்வுகளும், இசை நிகழ்ச்சிகளும் நடந்தேறும். இது தம்பதியர் கண்டு மகிழ வேண்டிய முக்கிய இடமாகும்.!

2. Fireflies - பயர்ப்பிலைஸ்

இது பெங்களுருவில் 12 மணி நேர காலம் நாடாகும் ஒரு இசைக்கச்சேரி நிகழ்ச்சியாகும். இதில் பிரபல இசைக்கச்சேரி குழுக்கள் வருகை தந்து, இரசிகர்களை இசை மழையில் நனையச் செய்வர். இது இரவு 7 மணிக்கு தொடங்கி, காலை 7 மணி வரை நடைபெறும். தம்பதியர் கட்டாயம் பங்கேற்க வேண்டிய இசை நிகழ்ச்சி!

3. கோவா..!

தம்பதியர் தங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக கண்டு மகிழ வேண்டிய முக்கிய இடம் கோவா. இங்கு இருக்கும் கடற்கரைகளும், கிறிஸ்துவ ஆலயங்களும், அங்கிருக்கும் சுற்றுலா தலங்களும் தம்பதியர் தங்கள் காதலினை பரிமாறிக்கொள்ள அருமையான வாய்ப்பளிக்கும் இடமாக உள்ளன.

4. ஜெய்சால்மர்

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் எனும் இடம் தம்பதியர் கண்டு மகிழ வேண்டிய முக்கிய இடமாகும்; இங்கு நடைபெறும் பாலைவன திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் நடத்தப்படும் பொம்மலாட்டம், பாடல் நிகழ்ச்சிகள், நடன நிகழ்வுகள் மற்றும் பல கண்கவர் நிகழ்ச்சிகள் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு இடம்பெறும் ஒட்டக பயணம், பாலைவன வாழ்வு ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும். மேலும் நவம்பர் மாதத்தில், பிரத்யேக இசைக்கச்சேரி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

5. கோஷலி பாடல் மற்றும் Blues Fest

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோஷலி எனும் இடத்தில நடைபெறும் இசைக்கச்சேரி மிகவும் புகழ் பெற்றது; இந்த இசை நிகழ்ச்சியில், jade, rock and roll, blues, folk-rock, funk போன்ற இசைகள் இடம்பெறும். இது பார்ப்போர் மனதை கிறங்கடிக்கச் செய்யும் விதத்தில், இயற்கை கட்சிகளுடன் கூடிய இசை விருந்தாக அமைகிறது.

இந்த வருடத்தில், மேற்கூறிய நிகழ்ச்சிகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டையாவது தம்பதியர் கண்டு மகிழ்ந்து, தங்கள் காதலை வளர்க்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறோம்..!!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon