Link copied!
Sign in / Sign up
3
Shares

இணையத்தில் படம் பார்ப்பதால் பாதிப்பா??

தகவல் தொழில்நட்பம் விரைவாக வளர்ந்து விட்ட இக்காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை, நாம் தினசரி வாழ்வில் எதிர்கொண்டு வருகிறோம். அதிலும்., ஒருசில விஷயங்கள் நம் கண்ணனுக்கு புலப்படாமலே நடைபெற்று, வாழ்வில் நமக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவ்வகையில்., ஆபாச இணைய தளங்களை பார்ப்பதினால் சிலபல பிரச்சனைகள் நமக்கு உண்டாகிறது. அப்படி உண்டாகும் பிரச்சனைகள் என்னென்ன என்று இப்பதிப்பில் படித்தறிவோம்..!

இலவசமா? திட்டமா?

இணைய தளத்திற்கு சென்றுவிட்டால் போதும்..,  அங்கு ஆபாசப்படங்களை எந்தவொரு கட்டணமும் இல்லாமல் இலவசமாகவே உங்களால் காண இயலும்.

ஆனால்.., உண்மையில் எந்தவொரு பொருளையும் அல்லது ஒரு சேவையையும் யாரும் இலவசமாகக் கொடுக்க மாட்டார்கள்; அப்படி இருக்கையில், இப்படங்களை இலவசமாக பார்க்க முடிவது மட்டும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா..?

வைரஸ்..!

செல்போன் நிறுவனங்கள் இன்றைய காலத்தில், தங்களுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியினால்., ஆபாச இணைய தளங்களுக்கு விளம்பரங்களை கொடுக்கின்றன. ஆபாச இணைய தளங்களில் வருவது.., வெறும் விளம்பரம் மட்டுமல்ல; அவ்விளம்பரத்தை நீங்கள் கிளிக் செய்தால், அதிலிருக்கும் வைரஸ் உங்களது செல்போனைத்  தாக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

பக்கமில்லை..!

இன்னும் சில நேரங்களில், நீங்கள் ஏதாவது விளம்பரத்தைக் கிளிக் செய்திருப்பீர்கள்; ஆனால்., அந்த விளம்பரம் முழுதும் திறவாமல், பக்கம் இல்லை (PAGE NOT FOUND) என்று வரும்; இல்லையெனில், சம்மந்தமேயில்லாத இணையதளம் திறந்து கொள்ளும். 

கார்ப்பரேட் தந்திரம்..!

அந்நேரங்களில் ஏற்படும் வைரஸ் தாக்குதலினால் செல்போன் செயல்பாட்டின் வேகம் முழுவதுமாக குறைந்துவிடும். மென்பொருள் மூலம் அதை சரி செய்ய நினைக்கையில்., 1000 -2000 ரூபாய் வரை செலவாக வாய்ப்புள்ளது; அவ்வளவு செலவு செய்தும் முழுமையாக சரியாகாமல் இருந்து, அது உங்களை அடுத்த செல்போன் வாங்கச் செய்துவிடும்.

நீங்கள் கட்டாயம் மற்றோரு செல்போனை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்; இதுவே கார்ப்பரேட் வியாபார தந்திரம். இதனாலேயே ஆபாசப்படங்கள் உங்களுக்கு கட்டணமில்லாமல் இலவசமாக கிடைக்கிறது; இனியாவது எச்சரிக்கையுடன் இருங்கள் நண்பர்களே!!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon