Link copied!
Sign in / Sign up
8
Shares

குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்! அம்மாக்கள் என்ன தெரிந்துக்கொள்ள வேண்டும்?

கர்ப்பமாக இருக்கும்போது ஒருவித குழப்பத்துடன் இருக்கும் கர்ப்பிணிகள் குழந்தை பிறந்தபின்னரும் ஒரு வித குழப்பத்துடன் இருக்கின்றனர். அது என்னவென்றால், என் குழந்தையை நான் எப்படி பார்த்துக்கொள்ள போகிறேன்? எத்தகைய சூழலை அவனுக்கு நான் அமைத்து தர வேண்டும் போன்ற கேள்விகள் அவர்கள் மனதில் எழுவது இயற்கையான விஷயம். அப்படிப்பட்ட புதிய அம்மாக்களின் மனதில் எழும் கேள்விகளுக்கான குழந்தைகளின் காய்ச்சல் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய பதில்களை நாம் இப்போது பார்க்கலாமா!

1. காய்ச்சல் என்றால் என்ன?

நீங்கள் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் குழந்தையின் உடல் சிவந்து சுடுவதனால் அது காய்ச்சல் இல்லை என்பதே ஆகும். ஏனெனில், குழந்தைகளுக்கு நாம் உடுத்தும் உடையின் உஷ்ண தாக்கத்தால் கூட, குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவதுபோல் தெரியலாம்.

காய்ச்சல் என்பது 100.4 பேரன்ஹீட் வெப்பத்தை கடந்து ஒரு குழந்தைக்கு காணப்படும். 

2. இது சாதாரண வெப்பமல்ல:

குழந்தையின் கை கீழ்புறம் 100.4 டிகிரி கொதிப்பதனால் மட்டுமே அது காய்ச்சல் என ஆகாது. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை அவர்கள் மலக்குடலே துல்லியமாக காட்டுகிறது. அதுவும் மூன்று மாத குழந்தைகள் அல்லது இளைய குழந்தைகளுக்கு இதுவே காய்ச்சலின் அறிகுறியாக அமையும். இந்த மலக்குடலில் ஏற்படும் காய்ச்சலை கண்டறிய ரெக்டல் தெர்மோமீட்டர் எனும் கருவியும் பயன்படுத்தப்படுகிறது. 

3. குழந்தையின் நடவடிக்கை:

உங்கள் குழந்தையின் செயல்கள் வழக்கத்தைவிட மாறுபட்டு காணப்பட்டால் அப்போது காய்ச்சல் அடிப்பதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு மருத்துவரை அணுகி அவர்கள் உடல் நலம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு 104 டிகிரி காய்ச்சல் இருந்தும் அவன் நன்றாக ஆரோக்கியமாக விளையாடுவது போல் தெரிந்தாலும் அப்படியே விட்டுவிடக்கூடாது. உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிந்துரை பெற வேண்டியது மிகவும் முக்கியம்.

4. நீரேற்றம்:

இந்த பூமியில் வாழும் எல்லா உயிருக்கும் நீர்சத்து என்பது மிகவும் அவசியமாகிறது. அதுவும் காய்ச்சல் அடிக்கும் குழந்தைக்கு கண்டிப்பாக நீர்சத்து என்பது மிகவும் தேவைப்படும் என்பதை நீங்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

5. மருத்துவர் உதவி:

குழந்தைக்கு காய்ச்சல் அடிப்பது போல் தெரிந்து அவர்கள் 3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தையாக இருந்தால் தாமதிக்க வேண்டாம்.

6. காய்ச்சல் வகை:

குழந்தைகளுக்கு காய்ச்சல் அடித்தால் அது எந்த வகை காய்ச்சல் என்பதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு வைரஸ் காய்ச்சலாக இருக்குமெனில் மூன்று நாட்கள் வரை விட்டு விட்டு அடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல் சிறுநீர் தொற்று காரணமாக குழந்தைகளுக்கு பாக்டீரியா காய்ச்சல் அடிக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon