Link copied!
Sign in / Sign up
1
Shares

இல்லத்தரசியின் ஆசை பிறப்பிடம் எது தெரியுமா?

மனைவிகள் யாவரும் கணவனையே கண்கண்ட தெய்வம் என்பார்கள். இதற்கான காரணம் என்ன தெரியுமா? ஒன்றா... இரண்டா அவர்கள் ஆசைகள். சொல்லிவிடத்தான் ஒரு நாள் போதுமா என்கிறது அவர்கள் ஆசையை புரிந்து கொண்ட என் மனதானது. இருப்பினும், மனைவிகளின் ஆசையையும் அதற்கான தீர்வையும் தர நான் இங்கே முயல்கிறேன்.

பூப்பெய்திய (பருவ நிலை) போது பூட்டி வைக்கும் ஆசைகள்:

பெண்கள் அவர்களுடைய சிறு வயதில் விவரமாக இருந்தால் இந்த உலகம் வாயாடி என விருது கொடுக்கும். அதுவே பேசாமல் இருந்துவிட்டால்... "இப்போவே இப்படி இருக்கிறாள், நாளை உலகில் எப்படி தான் இந்த சமூகத்தில் வாழ போகிறாளோ? என விவரமற்ற பெண் என்னும் பெயரை அவள் மார்பில் பச்சை குத்தும். இதன் விளைவால் தான், பருவம் எய்தும் பெண்ணிடம் பல ஆசைகள் உண்டாகிறது. அவற்றுள் ஒன்று

1. காதலில் விழுந்து எழ இயலாமல் தத்தளித்தல் 

2. பருவ நிலையில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் 

3. திருமணத்தை பற்றிய கனவு கோட்டை கட்டுவது 

இந்த மூன்றை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்... 

1. காதலில் விழுந்து எழ இயலாமல் தத்தளித்தல்:

இதற்கான அடித்தளம் எங்கே தெரியுமா தொடங்குகிறது? தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். இப்போ நீங்கள் ஒரு காதல் திரைப்படம் பார்க்கிறீர்கள். அதில் காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம் கண்டு, அவசர அவசரமாக ரிமோட்டை தேடுவீர்கள். அதன்பின்பு, சேனலை மாற்றிவிட்டு ஒரு அசட்டுத்தனமான சிரிப்பு சிரிப்பீர்கள். அந்த சிரிப்பு தான் அவள் ஒரு ஆராய்ச்சியாளனாக உருவெடுக்க முக்கிய காரணம். அட ஆமாங்க, இதன் தாக்கம் அவள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. 

இதற்கு ஓர் உதாரணம்,

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் மனதில் மோகத்தை விதைக்க கூடாது என்பதற்காக, ஒரு சிலர் ****** பயன்படுத்துவதை பார்த்து இருப்பீர்கள். இதன் விளைவு, அவன்/அவளால் இதன் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன என தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டாகிறது.

தீர்வு:

உங்கள் குழந்தைகளிடம் அவள் சிறு வயதிலிருந்தே நட்புடன் பழகுவது இதற்கு தீர்வாக அமையலாம்.

2. பருவ நிலையில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்:

இன்றைய சூழ்நிலையில் 'இனப்பெருக்கம்' பற்றி பலரும் பள்ளியில் பாடம் நடத்த பயப்படுவது  வருத்தத்திற்குரிய விஷயம். இதனால், ஒருவன்/ஒருத்தி மனதில் இனப்பெருக்கம் என்பது... தவறான தகவலை இணைய தளத்தின் மூலம் தந்துவிடுகிறது. இதனால், ஹார்மோன் மாற்றங்களினால் ஒரு பெண்ணின் மனதில் பலவித குழப்பங்கள் உண்டாகிறது. இதனை ஒருசிலர் தவறாக பயன்படுத்தி கொள்ள முயல்வதும் உண்டு.

3.   திருமணத்தை பற்றிய கனவு கோட்டை கட்டுவது:

இந்த மூன்றாவது நிலை ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று எனவும் சொல்லலாம். ஒரு பெண் என்பவளின் மனதில் கணவன் மட்டுமே குடிபுகுவது அவள் கனவை தொலைத்து வாழ்க்கையை மட்டுமே தருகிறது. பெண் என்பவளின் கனவுகள் யாவும் முதலில் பெற்றோரால் பூட்டி வைக்கப்படுகிறது. அதன்பின்னர், கணவனால் சில சமயங்களில் பூட்டி வைக்கவும் படுகிறது. இதனால், அவள் கல்லறையில் அடைக்கப்படும் போது அவள் கனவுகளும் சேர்த்து அடைக்கப்படுகிறது. 

இதனால், இன்று பெண் என்பவள்...

ஒரு சுட்டி குழந்தையாகவும், வயதுக்கு வந்த பெண்ணாகவும், திமிர் பிடித்த பெண்ணாகவும், ஓட்டை வாயாகவும், வாயாடியாகவும், மனைவியாகவும், சந்தேகப்படும் நபராகவும், சிந்தை மறைத்த விந்தையாகவும், செம பிகராகவும், ஆண்டியாகவும், கிழவியாகவும் மட்டுமே வலம் வருகிறாள் தன் வாழ்வில்.

வாழ வேண்டிய வாழ்க்கை அதை மறந்து, அலட்சியத்துடனே அவளை பார்க்க, பலரும் அவள் ஆசையையும், பாசத்தையும், திறமையையும் மட்டும் பார்த்து அந்த பல நொடி அரவணைக்க மறந்து விடுகின்றனர். 

அவளுடைய முக்கியமான நாளின், முக்கியமான இரவில்... 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon