Link copied!
Sign in / Sign up
3
Shares

இல்லத்தரசிகளுக்கான நேர நிர்வாகம்..!

பெண்களில் இக்கால களத்தில் இரு பிரிவினராக உள்ளனர்; ஒரு தரப்பினர் இல்லத்தரசிகள், மற்றோரு தரப்பினர் பணிபுரியும் பெண்கள். இவ்விரு பிரிவினருக்கும் அத்யாவசிய தேவையாக இருப்பது நேர நிர்வாகம். அது என்ன நேரநிர்வாகம் என்று வினவுகிறீரா? வாருங்கள் தோழிகளே! நேர நிர்வாகம் பற்றியும் உங்கள் வாழ்க்கை முறை பற்றியும் இந்த பதிப்பில் படித்தறியலாம்..! 

இன்றைய நவீன வாழ்க்கை எவ்வளவுக்கெவ்வளவு தொழில் நுட்பங்களுடன் நவீன வசதியை அளித்து உழைப்பைக் குறைத்ததோ, அதே அளவுக்கு அதிக பொறுப்பையும் அளித்துள்ளது. நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வுகளை தேடுகிறோமே தவிர நிரந்தர தீர்வினை தேடுவதில்லை. இந்நவீன வாழ்வினால், ஒரு வகையில் நாம் இயங்குகிறோம்; வேறொரு வகையில் இயக்கப்படுகிறோம். 

இன்றைய வாழ்க்கை முறையை முறையாய், சந்தோசமாய் வாழ, நேர நிர்வாகம் என்பது மிகவும் அவசியம். அந்நேர நிர்வாகத்தை நம் கையுடன், கைகோர்த்துச் செயல்பட்டால் தினசரி பணிகள் சீராகவும், தொடர் உற்சாகத்துடனும், மிக மகிழ்ச்சியாகவும் நிகழும்.

தினசரி செய்யும் செயல்களில் எது முக்கியமானது, எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து, திட்டமிட்டு செயல்பட்டாலே போதுமானது. சமையலுக்கு என்று உங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிப்பதை நிறுத்தி, திட்டமிட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ முயலுங்கள். ஆரம்பத்தில் நேர நிர்வாகத்தை பின்பற்றுவது கடினமாக இருக்கலாம்; சிறிது சிறிதாக அதுவே உங்கள் வழக்கமாகிவிடும்.

மனிதன் என்பவன் முழு இயந்திரமல்ல; அவனது உடல், மன ஒத்துழைப்பும், தினசரி தேவைகளும் மாறுபடுவன. திடீரெனெ ஒரு புள்ளியில் மனம் துவண்டு போவதும், சட்டென மனம் உற்சாகம் கொண்டு இல்லாத வேலைகளையும், இழுத்துப்போட்டு செய்வதுமே மனிதனை வித்தியாசப்படுத்தி காட்டுகின்றன.

தினசரி உங்கள் வாழ்நாட்களில் நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை, ஏற்படும் நிகழ்வுகளை கீழ்கண்டவாறு பிரித்துக் கொள்ளுங்கள்.

1. செய்தேயாக வேண்டிய வேலைகள்

2. நேரம் கிடைக்கும் போது செய்யவேண்டிய வேலைகள்

3. கட்டாயம் தவிர்க்க வேண்டிய கால விரயங்கள்

4. இஷ்டப்பட்டு, தொடர்ந்து செயலாற்றத் தேவையான மனதிற்குகந்த சில பணிகள்

5. குடும்பத்தின் மொத்தக்கடமையில் நம் பங்கும் பிறர் ஒத்துழைப்பும்

இவ்வாறு உங்கள் அன்றாட செயல்களை 5 தலைப்புகளாக பிரித்து, அவற்றை எப்படி செய்வது என திட்டமிடுங்கள்; மேலும் இச்செயல்களுக்கு ஏதேனும் இடையூறு நேரும் எனத் தோன்றினால், அவற்றை எப்படி சரி செய்து, செயலாற்றுவது என்று சிந்தித்து செயலாற்றுங்கள்..! 

நீங்கள் தனிக்குடும்பமாக இருந்தாலும், கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தாலும், குழந்தைக்கு தாயானாலும், தாயாகும் நிலையில் இருந்தாலும் வீட்டு வேலைகளை திட்டமிட்டு முடித்து, உங்கள் கனவை, இலக்கை அடையவும் நேரம் ஒதுக்கி வாழ்வில் வென்று காட்டுங்கள்..! மேலும் குடும்பத்தினரை குறையேதுமில்லாது தாயுமானவளாக காத்து, மகிழ்வியுங்கள்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon