Link copied!
Sign in / Sign up
1
Shares

இளமையாய் தோன்ற செய்ய வேண்டிய 9 விஷயங்கள்


நம்மை பற்றி நாமே நன்றாக உணர பல விஷயங்கள் நம்மிடம் இருந்தாலும், நாம் மிகவும் பெருமையாக உணரும் விஷயம், இளமையாக தோற்றமளிப்பதே. இளமையாக இருப்பது தான் சிறந்தது என்றில்லை. நம்மால் நம் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது என்பதையே இது பிரதிபலிக்கிறது. இது சீரான தோற்றத்தையும், நமது திறமையையும் வெளிக்காட்டுகிறது. மேலும், இது நம்மை இளமையாக உணர வைப்பதோடு, நம்மை நல்ல வீரியத்துடன் செயல்பட வைக்கிறது.

பல பெண்கள், இளமையை தக்கவைத்துக்கொள்வதில் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இளமையை தக்கவைத்துக்கொள்ள, அனைத்து அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. அழகு என்பது, ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வேறுபடும். மேலும், புதிதாய் வெளிவந்த அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களில் தோன்றும் மாடல்களுக்கு வேண்டுமானால் அழகாய் இருக்கலாம். ஆனால், இது அனைவருக்கும் பொருந்தாது.

இளமையாய் தெரிய அழகு சாதன பொருட்களை காட்டிலும், நன்றாய் வேலை செய்யும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

1 சுத்தம்

நினைவில் கொள்ளுங்கள், உங்கள் முகம் இளமையாய் தெரிய வேண்டுமெனில் அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் முகத்தை நன்றாக கழுவுங்கள். உங்கள் சருமத்திற்கு ஏற்ற முக சுத்தப்படுத்தியை பயன்படுத்துங்கள். மிகவும் கடினமானதை பயன்படுத்தாதீர்கள். முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும். எனவே, முகப்பரப்பில் இருப்பவற்றை நீக்குவதற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்துங்கள். இது சருமத்தில் உள்ள துளைகளுக்குள் சென்று எண்ணெய் மற்றும் பிற அழுக்குகளை வெளியேற்றுகிறது.

2 மென்மை மற்றும் பாதுகாப்பு

உங்கள் இஷ்டத்திற்கு முக சுத்தப்படுத்தியை பயன்படுத்துவதை ஆரம்பிக்கவோ நிறுத்தவோ கூடாது. பெரும்பாலான முக சுத்தப்படுத்திகள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இளமையை தெரிய வேண்டுமெனில், சருமத்தை மிகவும் வறட்சியாக வைத்திருக்க கூடாது. எனவே, உங்களின் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அதே சமயம், அதிக எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசரை உபயோகப்படுத்துங்கள். மேலும், இக்காலத்தில் சூரிய கதிர்களாலும் உங்கள் சருமத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். இது உங்கள் சருமத்தை யு வி கதிர்களில் இருந்து பாதுகாப்பதோடு, தூசு மற்றும் மாசுக்கள் உங்கள் சரும துளைகளில் உட்புகுவதை தடுக்கிறது.

3 வெண்மை பற்கள்

இளமையாக தெரிய உதவும் மற்றோர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அது சுத்தமான மற்றும் வெள்ளை பற்களே ஆகும். உங்கள் பற்களை பராமரிப்பதிலும் உங்களின் இளமை தோற்றம் உள்ளது. எனவே, பற்களை ஒழுங்காக துலக்கி, வாய் கொப்பளிப்பானை பயன்படுத்த வேண்டும்.

4 உணவு

இளமையாய் தெரிய வேண்டுமெனில் அதற்கு முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். தினமும் சரியான உணவை தான் எடுத்துக்கொள்கிறீர்களா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள். இதற்காக உங்களுக்கு பிடித்தமான துரித உணவை சாப்பிட கூடாது என்றில்லை. அதை எடுத்துக்கொள்ளும் அளவை மட்டும் கட்டுப்படுத்தினால் போதும். அதுமட்டுமில்லாமல், உங்கள் தினசரி உணவில் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். எனவே, நீங்கள் நிறைய பழங்கள் மற்றும் வேக வைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும். பொறித்த உணவுகளை முடிந்த வரை தவிர்த்திடுங்கள்.

5 உடை

நீங்கள் உடுத்தும் உடைகள், உங்கள் தோற்றத்தை வெளிக்காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். புதிதாய் வெளிவந்த உடைகளை உடுத்தினால் மட்டும் தான் நீங்கள் இளமையாக தெரிவீர்கள் என்றில்லை. உங்கள் உடல் அமைப்பை அழகாய் எடுத்துக்காட்டும் உடைகளை உடுத்தினால் மட்டுமே நீங்களும் இளமையாய் தோற்றமளிப்பீர்கள். பிரகாசமான நிறங்களை தேர்ந்தெடுத்து அணியுங்கள். மங்கலான நிறங்கள் அணிவதை தவிர்த்திடுங்கள். மேலும், மிகவும் லூசான உடைகளை அல்லது உடம்போடு ஒட்டிக்கொள்ளும் உடைகளை அணியாதீர்கள்.

6 உடலை கச்சிதமாக வைத்திருங்கள்

ஆரோக்கியமாக இருப்பது என்பது உடற்பயிற்சியின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதும் ஆகும். உடற்பயிற்சி செய்வதால் உங்கள் உணவு பழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். அதற்காக, தினமும் இவ்வளவு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. தினமும், கொஞ்சமாவது உங்கள் உடலுக்கு ஏதாவது உழைப்பை கொடுக்க வேண்டும். இதனால், உங்கள் உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகள் நீக்கப்பட்டு, உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது உங்களை இளமையாக மட்டுமல்ல ஆரோக்கியமாகவும் நல்ல உடல் நலத்துடனும் வைத்திருக்கும்.

7 தூக்கம்

பெரும்பாலானவர்கள், தூக்கத்தை அலட்சியமாக நினைத்து, அதை நிராகரிப்பார்கள். இன்றைய, பரபரப்பான வாழ்க்கையில் பல பேருக்கு போதுமான தூக்கம் கிடைப்பதில்லை. போதுமான தூக்கம் நமக்கு பல நன்மைகளை வழங்குகிறது என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. மேலும், இது உடல் சோர்வை போக்கி, நம் மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

8 அழகு சாதன பொருட்கள்

அழகு சாதன பொருட்கள் உங்கள் முகத்தை இளமையாக காட்டாது எனினும், அதற்கான சில சிறப்புக்கள் உள்ளன. அதில் ஒன்று, உங்களின் முகத்தை உயர்வாக காட்டுவது. மாசுக்களால் உங்கள் முகம் வயதான தோற்றத்தை வெளிக்காட்டும். அதிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்க, கான்சலர்(concealer) பயன்படுத்தலாம். மேலும், இது தோல் அழற்சிகளை சரி செய்கிறது. உங்கள் கன்னத்திற்கு ப்ளஷ்(blush) பயன்படுத்தலாம். அதற்காக, அதிக அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதீர்கள்.

9 முடி

உங்கள் புருவங்களை நன்றாக பராமரித்து நல்ல வடிவத்துடன் வைத்திருங்கள். இதனால், நீங்கள் இளமையாக தோற்றமளிப்பீர்கள். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி விடுங்கள். அதுமட்டுமில்லாமல், உங்கள் கூந்தல் முடிகளை நன்றாக பராமரியுங்கள். மென்மையான, பளபளப்பான கூந்தல் உள்ள நபர் இன்னும் இளமையாக தோற்றமளிப்பார். அதனால், அடிக்கடி கூந்தலை அலசி நன்றாக பராமரியுங்கள். உங்கள் கூந்தலை பளபளப்பாக்க hair serum பயன்படுத்துங்கள்.

மேலே சொன்ன குறிப்புக்கள் அனைத்தும், உங்கள இளமையை தக்க வைத்து கொள்ள உதவும் சில வழிமுறைகளே ஆகும். இவற்றை பயன்படுத்தி நல்ல பலன் பெறுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon