Link copied!
Sign in / Sign up
9
Shares

இளமையான கூந்தலை பெறுவது எப்படி?

முடியின் வலிமை, கேசத்தின் உள்ளடுக்குச் செல்களைப் பொறுத்து தான் அமைகிறது. மெல்லிய உள்ளடுக்குச் செல்களைக் கொண்டவர்களுக்கு நீளமான, நேரான கேசமும், அடர்ந்த உள்ளடுக்குச் செல்களைக் கொண்டவர்களுக்கு கேசம் சுருண்டிருக்கும். இவ்விரு தரப்பினருக்குமே உண்டாகும் முக்கியமான பிரச்சனை நரைமுடி. இன்றைய காலகட்டத்தில் இளம்பெண்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை அனைவர்க்கும் நரைமுடி ஏற்படுகிறது. இந்த நரைமுடி எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்னென்ன என இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

ஏன்?

‘மெலனின்’ என்னும் நிறமி தான் நம்முடைய தோலின் நிறத்தை நிச்சயக்கிறது. இதைப் போன்றே யூமெலனின், பயோ மெலனின் போன்ற நிறமிகள் நம் முடியின் கறுப்பு நிறத்திற்கு காரணமாகின்றன. இந்நிறமிகளின் உற்பத்தி குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன.

காரணங்கள்..!

முதுமையின் காரணமாக, 40-50 வயதுகளில் நரைமுடி தோன்றும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கும் நரை முடிகள் உருவாகின்றன.

மரபியல் காரணங்கள், புகை, மது, துரித உணவு, புரதக் குறைபாடு மற்றும் 'பயோட்டின்’ என்னும் ஊட்டச்சத்து குறைதல், வேதிப்பொருட்களை அதிகமாகக் கொண்ட ஷாம்பூக்களைப் உபயோகித்தல் போன்றவை இளம் வயதிலேயே நரை முடியை ஏற்படுத்த காரணமாகிவிடுகின்றன. 

தடுக்க உதவும் உணவுகள்..! 

1. பாலில் புரதம், இரும்பு, துத்தநாகம், கால்சியம், பயோட்டின், விட்டமின் டி நிறைந்துள்ளன. எனவே, தினமும் இரு வேளை பாலை தவறாமல் குடிப்பது நல்லது.

2. ஒரு நாளைக்கு 2 முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் பயோட்டின் மற்றும் இரும்புச்சத்து போன்ற முடி வளர்ச்சியைத் தூண்டும் சத்துக்களை எளிதில் பெறலாம்.

3. வஞ்சரம் மீனில் உள்ள ஒமேகா-3 (Omega-3 Fatty Acid) முடியின் கருமை நிறத்தைப் பராமரிக்க உதவும்.

4. உயிர்ச் சத்துக்கள் கொண்ட பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை போன்ற கீரை வகைகளும் கூந்தல் பராமரிப்புக்கு சிறந்தவை.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon