Link copied!
Sign in / Sign up
3
Shares

பசி ஏற்படுத்தும் உடல்நலக்குறைபாடுகள்..!

“பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்" - பசிதான் இன்றைய உலகில் மற்ற எல்லாவற்றினையும் விட மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. எய்ட்ஸ், மலேரியா, டிபி நோய் பாதிப்புகளைக் காட்டிலும், அதிகமான மக்கள் பசியால் வருடந்தோறும் இறக்கின்றனர்; ஏழில் ஒருவர் பசியோடு இரவு படுக்கச் செல்கின்றனர். சுமார் 60 சதவீத பெண்களும் 1/5 பங்கு ஐந்து வயதுக்குக் கீழ் பசியால் வாடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆசியா, பசிபிக் பகுதியிலேயே அதிகம் பசியால் வாடும் மக்கள் உள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.15 இருந்தால் கூட ஒருவருக்கு ஊட்டமான பசியில்லா உணவினை கொடுத்து விட முடியும். 1/7 உலக மக்கள் சிறிதும் சத்தே இல்லாமல் இருக்கின்றனர். கிராம புறங்களில் 5-0 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நல்ல சத்துணவு உண்பதில்லை.

பசி ஏற்படுத்தும் பிரச்சனைகளையும், நோய்களையும் பற்றி இப்பதிப்பில் காணலாம்.

முறையான நேர உணவு..!

ஆய்வுகளின் படி, 4 மணிக்கொருமுறை வயிற்றுக்கு ஏதேனும் உணவு அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட முறையான நேர உணவு, உடலின் செயல்பாட்டினை சீராக வைக்க உதவும்.

ஒருவேளை நாம் முறையான நேரத்திற்கு, சரியான சத்துள்ள உணவை உட்கொள்ளாவிட்டால், என்ன நடக்கும்..?? மூளைக்கு வேண்டிய க்ளுகோஸ் தேவையான அளவு கிடைக்காது. குறிப்பாக கார்போஹைடிரேட் உணவிலிருந்து எளிதாக கிடைக்கும் க்ளுகோஸ் கிடைக்காது. முழு தானிய உணவு, பழங்கள், காய்கறிகள் இவைகளிலிருந்து கிடைக்கும் சத்து சிறந்தது. இத்தகு சத்து கிடைக்காவிட்டால் மூளை சோர்வுறும், உடலில் சர்க்கரை சத்து குறையும்; கவனமின்மை ஏற்படும்.

பசி ஏற்படும் விதம்..!

உடல் உணவு வேண்டும் என கூறும்; பசியினை உணர்த்தும். இதனையும் ஒதுக்கும் பொழுது உடல் வியர்த்து சோர்வுறும்.

அரைகுறை உணவு

அவசரத்திற்கு ..கையில் கிடைத்ததை உண்பதால் சர்க்கரையும் ஏறும். முறையான சத்தும் கிடைக்காது. இதுவே பழக்கமானால் பல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதுவே அரைகுறை உணவு உண்பவர்களுக்கு சர்க்கரை குறைவு, வைட்டமின் சத்துக்கள் கிடைக்காமை, தலைவலி, தலைசுற்றல் ஏற்படும். கல்லீரல் தான் சேமித்த சக்தியினைத் தரும். முறையான தேவையான உணவு தொடர்ந்து உண்ணாது இருந்தால் அவர்கள் அதிக மனச்சோர்வுடன் இருப்பர். சர்க்கரை அளவு, கீழே போய் விடும்.

பசி தரும் நோய் 

1. பசியோடு குடிக்கும் சுகாதாரமற்ற நீரினால், கினியா புழு நோய் ஏற்படுகின்றது. இந்த புழு 3 அடி நீளம் வரை வளரக் கூடியது.

2. கிருமி தாக்குதல் சிறு குடலில் ஏற்படுவதால் காலரா நோய் தாக்குதல் ஏற்படுகின்றது. இது வாந்தி, வயிற்றுப் போக்கினை மிகவும் கடுமையாக்குவது வேகமாய் பரவும் தொற்று என்பதால் அநேகர் பாதிக்கப்படுவர்.

3. வயிற்றில் ‘டேப்வார்ம்’ எனப்படும் நாடா பூச்சி தாக்குதல் ஏற்படுகின்றது. உண்ணும் உணவு செரிப்பதற்குள் இப்பூச்சி அதனை உண்டு விடுவதால் பாதிப்புடையவர் பசியோடே இருப்பர்.

4. வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாடு உணவின்மையால் எளிதாய் ஏற்படும்.

5. இரும்பு சத்து குறைபாட்டினால் ரத்த சோகை, பார்வை பாதிப்பு ஏற்படும்.

6. வைட்டமின்கள் குறைபாடு ஏற்படும்.

* சரும பாதிப்பு

* இருதய பாதிப்பு

* சக்தியின்மை

இவை யாவும் பசியினால் அடிக்கடி வாடுவோருக்கு ஏற்படும் பாதிப்புகள்.

இதர பிரச்சனைகள்..!!

1. மனம் நிலையாக இராது.

2. தூக்கம் வராது. கடுமையான மலச்சிக்கல் இருக்கும்.

3. அவர்கள் உடல் குளிர்ந்தே இருக்கும்.

4. முடி கொட்டும்.

5. எடை வெகுவாய் குறையும்.

6. கர்ப்பம் தரிக்க முடியாது.

இத்தகு அறிகுறிகள் உணவு கிடைக்காது பசியோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல. தன்னை முறையாக கவனிக்காமல், பிறருக்காக வேலை செய்து என் உடம்பினை அழித்துக் கொள்கிறேன் என்று வாழும் பலரும் மேற்கூறிய இத்தனை நோய் தாக்குதல்களையும் பெறுவர். எனவே தன் உடலை முறையாய் காத்தாலே பிற பணிகளை செய்ய முடியும் என்பதனை இன்றாவது உணருங்கள்…!!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon