Link copied!
Sign in / Sign up
36
Shares

முதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி?

குழந்தை பிறக்கும் வரையில், கருப்பையில் குழந்தை வளரும் வரையில் தாயின் உணவு மூலம் குழந்தையை போஷாக்குடன் வளர்த்திருப்போம்; குழந்தையின் எடை மற்றும் அளவு போன்றவற்றை, தாயின் எடை மற்றும் scan மூலம் அறிந்திருப்போம். ஆனால், குழந்தை பிறந்த பின், அது சரியாக தான் வளர்கிறதா என்று எப்படி அறிவது? என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் உள்ள கேள்வி..! 

குழந்தையின் சரியான வளர்ச்சியை அறிய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்கு சென்றா அறிவது? அப்படி சென்றால், வேடிக்கையாகவும், பெரும் செலவாகவும் அமையும். அதனால், குழந்தைகளின் சரியான வளர்ச்சி பற்றிய, தகவல்கள் நமக்கு தெரிந்திருந்தால், நாமே வளர்ச்சியை பற்றி புரிந்து கொள்ள இயலும்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அளவுகள் வேறுபடும். முதலாம் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி என்பது பற்றி இப்பதிப்பில் காணலாம், வாருங்கள் பெற்றோர்களே!

1. எடை அதிகரிப்பு..!

ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவர்களின் எடை, உயரம், செயல்கள், தவழ்தல், பேசுதல், நடத்தல் என அனைத்துமே மாறுபடும்.

பொதுவாக, 4 மாத காலகட்டத்தில் குழந்தைகள் பிறந்தபோது இருந்த எடையை விட இருமடங்கு அதிகரித்திருக்க வேண்டும். முதலாம் ஆண்டு முடிவிலோ, குழந்தைகள் பிறந்தபோது இருந்த எடையை விட 3 மடங்கு எடை கொண்டிருக்க வேண்டும்.

பெற்றோர்களை பொறுத்தும் குழந்தையின் அளவுகள் மாறுபடும். அதாவது, பெற்றோர்கள் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருந்து, குழந்தைகளும் அதிக எடையுடன் ஜனித்தால், அக்குழந்தைகளின் வளர்ச்சி மெதுவாகவே நிகழும். குழந்தைகள் மெல்லிய தேகம் கொண்டு பிறந்திருந்தால், அவர்கள் ஓராண்டுக்குள் சரியான எடை மற்றும் அளவுளை அடைந்துவிடுவர்.

2. தலை சுற்றளவுகள்..!

குழந்தையின் எடை மற்றும் உயர அளவுகளுடன், குழந்தையின் வளர்ச்சியில் தலைப்பகுதியின் சுற்றளவுகள் மிக முக்கியமானவை. காது மற்றும் புருவங்களுக்கு மேல் உள்ள தலையின் சுற்றளவினை, சரியான அளவுகளுடன் உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.

ஏனெனில், தலையின் வளர்ச்சி, மூளையின் வளர்ச்சியைக் குறிக்கும். தலையின் வளர்ச்சி சரியானதாக இருந்தால், மூளையும் நன்றாக வளர்கிறது என்று பொருள்; இல்லையேல் மூளையின் வளர்ச்சி சரியானதாக இல்லையென பொருள். தலை மிகவும் பெரிதாக இருந்தால், அதிகப்படியான மூளைத்திரவம் காரணமாக இருக்கலாம்.

தலையின் வளர்ச்சி, முதலாம் ஆண்டில் முழுமையடைந்து, வளர்வது நிற்கத் தொடங்கும்.

3. உயரம்..!

குழந்தைகள் பிறந்தது முதல், முதலாம் ஆண்டு வரை 10 அங்குலங்கள் வளர்வர்; ஒவ்வொரு வருடமும் 2.5 அங்குல வளர்ச்சி குழந்தைகளில் ஏற்படும்; இவ்வளர்ச்சி குழந்தைகள் 18 வயதை எட்டும் வரை நிகழும். குழந்தையின் உயரத்தை, தரையில் படுக்க வைத்து அளந்தறிவது மிக அவசியம்.

இவ்வளவு புரிதல், குழந்தையின் முதலாம் ஆண்டு வளர்ச்சியில் போதுமானது; இதில் ஏதேனும் தவறினால், உடனே மருத்துவரை அணுகுங்கள். பதிப்பு பயனுள்ளதாக இருந்தால், நண்பர்களுடன் பகிர்ந்து, அனைவரையும் அவரவர் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அளவுகள் குறித்து அறியச் செய்யுங்கள்..!!

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon