Link copied!
Sign in / Sign up
3
Shares

வடஇந்திய ஸ்பெஷல் பாவ் பாஜி - செய்வது எப்படி?

pav bhaji

வட இந்திய பிரபல உணவான பாவ் பாஜி, தற்சமயம் நமது தென்னகத்திலும் இந்த உணவு சிலபல மக்களிடையே விருப்ப உணவாக மாறி வருகிறது. வளர்ந்த குழந்தைகளுக்கும் பிடித்த உணவாக மாறிவருகிறது. இந்த வட இந்திய பாவ் பாஜியை, வீட்டிலேயே செய்வது எப்படி என இங்கு படித்தறியலாம்..! 

தேவையான பொருட்கள்..!

கேரட்-1, உருளைக்கிழங்கு-2, தக்காளி-2, பச்சை பட்டாணி-2 மேஜைக்கரண்டி, இஞ்சி-1 சிறிய துண்டு, காலிஃப்ளவர்-7 துண்டுகள், குடை மிளகாய் - பாதி, வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டிசீரகத்தூள் - 1/2 தேக்கரண்டிபாவ் பாஜி மசாலா-1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய்-1, தனியா தூள்-1/2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி, உப்பு-தேவைக்கேற்ப, கொத்தமல்லி-தேவையான அளவு.

tasty pav bhaji
செய்முறை..!

1. உருளைக்கிழங்கினை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்  

2. கேரட், பட்டாணி, காலிஃப்ளவரை வெந்நீரில் அலசி, பின்னர் அவற்றை நன்கு வேகவைத்துக் கொள்ளவும் 

3. இஞ்சி, பச்சை மிளகாயை மைய அரைத்துக் கொள்ளவும் 

4. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அரைத்த இஞ்சி-மிளகாய் விழுதையும், குடை மிளகாயையும் போட்டு பொன்னிறமாக நன்கு வதக்க வேண்டும் 

5. இக்கலவையுடன் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும் 

6. அதில் சீரகத்தூள், பாவ் பாஜி மசாலா, தனியா தூள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு அவற்றின் பச்சை வாசம், போகும் வரை அடுப்பினை குறைந்த தீயில் வைத்து நன்றாக வதக்கவும் 

7. பிறகு உருளைக்கிழங்கினை மசித்து, மற்ற காய்கறிகளையும் நன்கு மைய மசித்து இக்கலவையோடு சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்க்கவும்; பின்னர் கலவையை நன்றாகக் கிளறி, 10 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு, அதில் நிறைய கொத்தமல்லி இலைகளைத் தூவி, சிறிதளவு வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும் 

special pav bhaji
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon