Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தையை தூக்கி கொஞ்சுவதில் காணப்படும் 8 தவறுகள்...

முதன்முதலில் குழந்தையை கொஞ்சுவதென்பது மிகவும் அழகிய தருணமாக அமையக்கூடிய ஒன்றாகும். கர்ப்பிணி பெண்ணுக்கு அந்த பத்து மாதம் எவ்வளவு துயரம் இருந்தாலும், அவற்றை கடந்த சந்தோசத்தின் உச்சமாக தன் குழந்தையை தூக்கி கொஞ்சும் நிமிடமே அமைகிறது. அப்படிப்பட்ட குழந்தையை தூக்கி கொஞ்சுவதில் காணப்படும் 8 தவறுகளை நாம் பார்க்கலாம்.

1. தலை நிற்காது:

முதலாவதாக குழந்தைகளுக்கு தலை சரியாக நிற்காது. காரணம், உங்கள் குழந்தைகளின் கழுத்து தசையானது சரியான வளர்ச்சியை எட்டி இருக்காது என்பதாலே. அந்த சமயத்தில் தூக்க தெரியாதவர்கள் தூக்கி கொஞ்சினால் தலை நிற்காத நிலையை கண்டு பயந்து கைகள் நழுவ வாய்ப்பிருக்கிறது.

2. இடுப்பு மற்றும் முதுகின் நிலை:

குழந்தையை தாங்கி பிடிப்பது தலை மட்டுமல்ல. இடுப்பும், கழுத்தும் கூட சில சமயத்தில் தாங்கி பிடிக்கும். ஒட்டுமொத்தத்தில் உங்கள் குழந்தை உட்காருவதற்கு தாங்கி பிடித்தல் என்பது கண்டிப்பாக வேண்டும். 

3. தலை மற்றும் உடல் வெவ்வேறு திசையில் இருக்கும்:

குழந்தையை தலைக்கீழாக நீங்கள் தூக்கி பிடித்தால் அதனால் மூச்சு பிரச்சனை என்பது வரக்கூடும். எப்போதும் குழந்தையை தாங்கி பிடிக்கும்போது முறையான வழியில் தூக்கி பிடிப்பது நலம்.

4. குழந்தையின் தலையை அழுத்தி பிடித்தல்:

குழந்தைகளின் தலை எப்போதும் மிகவும் மெல்லிய தோலை கொண்டிருக்கும். அப்படி இருக்க, அவர்கள் தலையை வேகமாக அழுத்தி பிடிப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால்கூட தலையில் தட்ட யோசிப்பதற்கு இதுதான் காரணம்.

5. வேற வேலை பார்க்கும்போது:

குழந்தையை தூக்கும்போது அந்த ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்துதல் நல்லது. உங்களுக்கு வேறு வேலை இருந்தாலும், குழந்தையை தூக்கும்போது ஒருகையில் ஒருவேலை...இன்னொரு கையில் வேற வேலை என்ற எண்ணத்தை தவிர்த்திடுங்கள்.

6. கால்களை பிடித்து தூக்குதல்:

உங்கள் குழந்தைகளை கால் பிடித்து தூக்கி சுற்றுவது போன்ற மோசமான செயல்களை தவிர்த்திடுங்கள். ஏனெனில், குழந்தையின் பிடிப்பு என்பது தலையை சார்ந்திருக்கிறது. 

7. சுற்றி போர்த்துதல்:

குழந்தையை போர்த்துவதில் மிகவும் கவனமாக நாம் இருத்தல் வேண்டும். உங்கள் குழந்தையை தவறான முறையில் நீங்கள் போர்த்துவதால் இடுப்பு பிறழ அதிகம் வாய்ப்பிருக்கிறது. 

8. குழந்தையை தூக்க குனிய வேண்டும்:

ஒரு சிலர் குழந்தையை தூக்க நிமிர்ந்தபடி செயல்படுவர். ஆனால், உங்கள் குழந்தையை தூக்க நீங்கள் முழங்கால்களை மடக்க வேண்டியது அவசியமாகும். இதனால் எடை என்பது முழங்கால்கள், கால்கள் மற்றும் முதுகுப்பகுதிக்கு சரிசமமாக செல்லக்கூடும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon