Link copied!
Sign in / Sign up
11
Shares

கருவிலிருக்கும் குழந்தைகள் அம்மாக்களின் குரலை எப்படி புரிந்துக்கொள்வார்கள்?

குழந்தைகள் தன் தாயின் கருவறையில் சுமார் 9 மாதங்கள் வரை தங்கி இருக்கிறார்கள். முதலில் அம்மாக்கள் பேசும் குரலை கேட்கும் குழந்தைகளுக்கு யாரோ மூன்றாம் நபர் பேசுவது போலவே கேட்கும். இதனால் கருவிலிருக்கும் குழந்தைகள் ஒரு வித பயத்துடன் இருப்பார்கள். ஆனால், கேட்கப்படும் குரலால் எந்த ஒரு ஆபத்துமில்லை என்பதை அறிந்தவுடன் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கருவிலிருந்தே உங்களை நேசிப்பதோடு, நீங்கள் எப்போது பேசுவீர்? என்ன பேசுவீர்? எனும் ஆவலுடனும் காத்துக்கொண்டிருப்பார்கள். ஒரு சில அம்மாக்கள் பேசும்போது அதற்கு பதிலளிக்கும் விதத்தில் குழந்தைகள் அசையவோ அல்லது உதைக்கவோ செய்வார்கள். அதனால் தான் பிறந்த குழந்தை அம்மாவின் குரலை மிக நேர்த்தியாக கண்டுபிடித்துவிடுகிறது.

2004 ஆம் ஆண்டில் நடந்த ஆய்வு ஒன்றில், அம்மாக்களின் குரல் அதிகமாக பதிவு செய்யப்படும் போது மருத்துவமனையில் தங்குவதற்கான காலம் என்பது குறைவதாக சொல்கிறது. அம்மாக்களின் குரலை குறைவாக ஒரு குழந்தை கேட்கும்போது மன அழுத்தம் பெருகவும் வாய்ப்பிருக்கிறதாம். இருவகையான ஹார்மோன் சுரக்க, ஒன்று மன அழுத்தத்தையும், மற்றொன்று புரிதலையும் தருகிறது.

அம்மாக்களின் குரல் என்ன செய்யும்?

அம்மாக்கள் பேசும்போது அது கருவிலிருக்கும் குழந்தையின் மூளையை சென்றடைகிறது. இதன்மூலமாக ஒரே குரலை குழந்தைகள் தினந்தினம் கேட்க, அவர்களின் முதன்மை பேச்சாற்றல் என்பது மேம்பட இது மிகவும் உதவுகிறது.

குறைவாக பேசினால் என்ன ஆகும்?

அம்மாக்கள் எதுவுமே பேசாமலிருந்தால் எப்படி இருக்கும்? நீங்களே யோசித்து பாருங்களேன். கருவிலிருக்கும் குழந்தைக்கு அது முற்றிலும் புதியதாக அமைய, தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா எனும் கவலையுடனும் இருக்கும். அப்போது தனிமையை இன்னும் அதிகப்படுத்தும் விதத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் அம்மாவும் அமைதியாக இருந்தால் அது குழந்தையை இன்னும் அதிகம் பாதிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அம்மாக்கள் அவனுடன் இருக்கிறேன் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திய வண்ணம் இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு உங்கள் பாதுகாப்பு எத்தகையது என்பது புரியும். அதேபோல் அம்மாக்கள் கோபமாகவோ அல்லது கவலையாகவோ எந்த ஒரு விஷயத்தையும் பேச முயலக்கூடாது. இல்லையேல், இதனாலும் பிறக்கும் குழந்தையை அது பாதிக்க செய்யும்.

இதனால் என்ன பலன்?

ஒரு ஆய்வு நிறுவனம் கருவிலிருக்கும் குழந்தையின் மூளை செயல்பாட்டை பற்றி ஆராய்ச்சி நடத்தியது. அவர்கள் நினைத்தது என்னவென்றால் கருவிலிருக்கும் குழந்தையின் மூளையை செயல்பாட்டு காந்த அதிர்வுகள் தான் இயக்குகிறது என நினைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளித்த விஷயம் என்னவென்றால், கருவிலிருக்கும் குழந்தையின் மூளை செயல்பாடு என்பது அம்மாக்களின் குரலை கொண்டே மிகுதியாக ஒலித்தது. இதன்மூலமாக குழந்தைகளின் மூளையை அம்மாக்கள் குரலே செதுக்குகிறது என்பது தெரியவந்தது.

அம்மாக்கள் பேசுவதை பொறுத்தே குழந்தைகள் எதிர்க்காலத்தில் சகஜமாக சமூகத்தில் வலம் வர உதவும் எனவும் சொல்லப்படுகிறது.

உண்மைக்கு அப்பால்...

ஆனாலும் இன்று வரை ஒரு சில கேள்விக்கான பதிலை நம்மால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை. அவற்றுள் ஒன்று, ஒருவேளை குழந்தைகளிடம் ஏதாவது குறைகள் காணப்பட்டால் அதை எப்படி சரி செய்வது? இந்த மன வளர்ச்சி குன்றி குழந்தைகள் பிறப்பதற்கு அம்மாக்கள் குணம் தான் காரணமா? அவர்களின் குரல் கருவிலிருந்த குழந்தைகளின் செவியை எட்டவில்லையா? இப்படி பல கேள்விகள் இருந்தாலும் அதற்கான பதில் ஒன்றே ஒன்று தான். அது தான்..."அது மட்டும் இரகசியம்..." எனும் பதில்.

என்ன செய்ய வேண்டும்?

கருவிலிருக்கும் குழந்தைக்கு நீங்கள் தூங்கும் போது ஒரு நல்ல கதையை சொல்லிடலாம். இதை நீங்கள் பழக்கப்படுத்துவதன் மூலம் உங்கள் மகன் அறிவாற்றல் கருவிலே வளர, மூளை செயல்பாடு என்பது மிகவும் சிறப்புடன் இருக்கக்கூடும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon