Link copied!
Sign in / Sign up
14
Shares

காட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டுவது எப்படி?

காட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டுவது எப்படி?

பெண்கள் என்றாலே, அனைவர்க்கும் நினைவில் முதலில் வருவது சேலை அணிந்த உருவம் தான். நம் பாரம்பரியத்தில் பெண்களுக்கு சேலை தான்; ஆண்களுக்கு வேட்டி-சட்டை தான் என்று பிரித்து தந்துவிட்டு சென்றுவிட்டனர் நம் முன்னோர். ஆனால், இன்றைய காலத்தில் இருக்கும் அனைத்து ஆடைகளையும் ஆணும் பெண்ணும் போட்டிபோட்டுக் கொண்டு அணிய ஆரம்பித்துவிட்டனர்.   

இந்த நிலையில் பெண்களான நாம் நமக்கே உரித்தான சேலையை நேர்த்தியாய் கட்டினாலேயே, பெண்களின் அழகு மேம்பட்டு தெரியும்..! சேலைகளில் பல ரகங்கள் இருந்தாலும், பெண்கள் காட்டன் சேலையை உடுத்தினால் வரும் அழகான மிடுக்கான தோற்றத்திற்கு இணையான தோற்றத்தை வேறு எந்த ஒரு சேலையும் தந்துவிட முடியாது.

how to drape cotton saree

அப்படிப்பட்ட காட்டன் சேலையை கொசகொசவென்று கட்டாமல், நேர்த்தியாய் கட்டினாலே போதும்; பெண்மையின் அழகு உயர்ந்து புலப்படும். இந்நிலையில் ஒல்லியான பெண்களால் சற்று எளிதாக காட்டன் சேலையை கட்டிவிட இயலும்; ஆனால் சற்று எடை அதிகம் உள்ள பெண்கள் காட்டன் சேலையை நேர்த்தியாய் கட்ட பாடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. 

அத்தகைய பெண்களுக்கு உதவும் நோக்கில் இந்த பதிப்பில் காட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டும் விதம் அடங்கிய காணொளியை அளிக்கிறோம்..! பார்த்து அறிந்து.., நேர்த்தியாய் சேலையை கட்டி, அழகாக தெரியவும்..!!

Video Credits: நாணல் முகநூல் பக்கம் 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon